தமிழ் சினிமாவில் கடந்த 30 நாட்களாக டிஜிட்டல் சினிமா பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.தயாரிப்பாளர்கள் – தியேட்டர் உரிமையாளர்கள் – டிஜிட்டல் நிறுவனங்கள் இடையே மோதல் போக்கு முடிவுக்கு வராமல் தொடர்கதையாகி தமிழ் சினிமா வர்த்தகத்தை, தயாரிப்பை முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் தத்தமது நிலைபாட்டை நியாயப்படுத்தி ஆடியோ, வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கியூப் நிறுவனம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் உலகிலேயே தமிழகத்தில்தான் இ-சினிமா கட்டணம் குறைவாக இருக்கிறது. நிறைய வசதிகளை தயாரிப்பாளர்களுக்கு இலவசமாகவே நாங்கள் செய்திருக்கிறோம்.
தயாரிப்பாளர்கள் தேவையற்று புலம்புகிறார்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ செயலாளர் துரைராஜ் கடுமையாக தனது கண்டணத்தை தெரிவித்திருக்கிறார்.

















