tamilthehindu :சண்டிகரில் உள்ள பட்டமேற்படிப்பிற்கான மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி
மையம்(பிஜிஐஎம்இஆர்) எனும் மருத்துவக் கல்லூரியின் தமிழக மாணவர் இன்று காலை மர்ம மரணம் அடைந்துள்ளார்.
.ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் டாக்டர்.கிருஷ்ணபிரசாத். இவரது தந்தை பெயர் ராமு, ராமேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் குருக்களாகப் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணபிரசாத் பிஜிஐஎம்இஆர்-ல் முதலாம் ஆண்டு ஊடுகதிர் துறையின் பட்டமேற்படிப்பு மாணவராக உள்ளார். துவக்கக்கட்டமாக கிடைத்த தகவலின்படி, இவரது அறை இன்று காலை திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. வகுப்பிற்கு செல்லாமல் கிருஷ்ண பிரசாத் இருப்பதை அறிய கதவு தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகத்தின் பேரில் அவரது அறை உடைத்து பார்க்கப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணபிரசாத் தூக்கில் தொங்கியபடி உயிர் பிரிந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.