ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நடிகை ஸ்ரீ தேவி பெற்ற விருதுகள்

சென்னை, நடிகை ஸ்ரீதேவி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்தி படங்களில் நடித்து வந்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவிக்கு, மீண்டும் கோகிலா என்ற படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருது (தெற்கு) வழங்கப்பட்டது. சால்பாஸ் மற்றும் லம்ஹே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றிருந்தார். ஷண ஷணம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. ஆந்திராவின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் அவருக்கு கிடைத்தது. இந்தி சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக மாமி (MAMI) விருது வழங்கி அவரை அரசு கவுரவித்துள்ளது.

 2013-ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியும் கவுரவித்தது. இந்த நிலையில் துபாயில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். ஸ்ரீதேவி உயிரிழந்த போது கணவர் போனி கபூர், மகள் குஷி உடனிருந்துள்ளனர்

கருத்துகள் இல்லை: