வரம்புக்கு அப்பாற்பட்டதா நீதித்துறையின் அதிகாரம்?கே.சந்துரு உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்
டென்மார்க் நாடே அழுகிப்போய்விட்டது’! -
(1) - இது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் வசனம். இதை மேற்கோள் காட்டி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அலகாபாத் நீதிமன்றத்தைச் சாடினார். அலகாபாத் நீதிமன்றமே அழுகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னதோடு, அங்குள்ள நீதிபதிகளில் பலர் ஊழலில் திளைப்பதாகவும், அவர்களது சொந்தங்களும் பந்தங்களும் அவர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். நீதிபதியின் மகன் வக்கீல் தொழில் ஆரம்பித்த முதல் வருடத்திலேயே கோடிக்கணக்கில் வருமானத்தைக் காட்டுவதையும், இறக்குமதி செய்த அந்நிய நாட்டு கார்களில் பவனிவருவதையும் சுட்டிக்காட்டினார். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அலகாபாத் நீதிபதிகள் அவரைக் கேட்டபோது, அவர் எல்லாரைப் பற்றியும் தான் சொல்லவில்லை என்று கூறினார்.

































