வெள்ளி, 19 ஜனவரி, 2018

ஆண்டாள் .. வைரமுத்து மீது போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை ... முகாந்திரம் இல்லை ..

tamilthehindu :ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதியதாக கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனியார் நாளிதழில் கடந்த 8-ம் தேதி தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆண்டாள் குறித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து வைரமுத்து கருத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவிஞர் வைரமுத்து மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யபட்டது.

பேருந்து கட்டணங்கள் உயர்வு .. நாளை முதல் ,,,

Troll Trousers 2.0 : · மக்கள் எல்லாம் நாட்டுல ரொம்ப சந்தோஷமா இருக்காங்க போல
தினமணி :இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 22,509 பேருந்துகள் மற்றும் 1,40,615 போக்குவரத்து பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் பேருந்துகளை இயக்குகின்றன.

மோடியின் முகத்திரையை கிழித்த ஜப்பான் பத்திரிகை .. இந்திய ஊடகங்கள் மறைத்ததை

troll trousars 2.0 :புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகையான "தி ஜப்பான் டைம்ஸ்" மோடி முகத்திரையை கிழித்து எரிந்துள்ளது.
உலக அரங்கில் வர்த்தகத்தில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வருவதாக கூறிய மோடி 130-190 வது ரேங்கில் தான் இருக்கிறது என உலக வங்கி அறிக்கையளித்து உள்ளதை சுட்டி காட்டி மூஞ்சியில் துப்பி விட்டது.
அது மட்டும் அல்ல, இந்தியாவின் மிகப்பெரிய துறையான கட்டுமான துறையில் முந்தைய அரசை விட கடும் சரிவை சந்தித்துள்ளது.
சர்ஜிக்கல் அட்டாக்,
ரூபாய் நோட்டு தடை, பொய்யான வாக்குறுதிகள், போலியான திட்டங்கள், அறிக்கைகள், மாட்டிறைச்சி தடை, மதக்கலவரம், பாதுகாப்மின்மை, அச்சுறுத்தல், என ஒட்டுமொத்தமாக மோடியை நாற் நாறாக கிழித்து விட்டார்கள்.

ஆண்டாள் முகமூடி அணிந்து வைரமுத்துவை தாக்குவது .. இந்துத்வா சதியே

நக்கீரன் : ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப் பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள்.
கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்... இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்வா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதட்டப் பரபரப்பைப் பற்றவைக்க... இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன.
இது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதட்டப் பரபரப்பிற்கும் காரணம், வைரமுத்துவை வைத்து பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரான ஹெச்.ராஜா உரசிப்போட்ட தீக்குச்சிதான்.தினமணி நாளிதழ் மற்றும் ராம்கோ குழுமம் சார்பில் ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில்  நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில்... ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளுக்கு தனது கவித்துவத் தமிழால் ஆராதனை செய்த வைரமுத்து, அந்த ஆய்வுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்திர மாலிக் என்பவர் வெளியிட்ட ஒரு தகவலையும் குறிப்பிட்டார். ஆய்வுரையில் பல கோணங்களிலான கருத்துகள் இடம்பெறுவது மரபு.

ட்ராபிக் ராமசாமி : ரஜினி கமல் போன்றவர்கள் விளம்பர பிரியர்கள் அரசியலுக்கு தகுதி அற்றவர்கள்

வெப்துனியா :நடிகர் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். இதனையடுத்து அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறார். இந்நிலையில் ரஜினியை எதிர்ப்பவர்கள் வரிசையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி இணைந்துவிட்டார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வர கூடாது என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தனது மக்கள் பாதுகாப்பு கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பேசிய சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ரஜினி மற்றும் கமலை விமர்சித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு மக்கள் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள், வாக்களிக்க மாட்டார்கள். இருவருமே விளம்பரப்பிரியர்கள், இரண்டு பேரும் அரசியலுக்கு தகுதியற்றவர்கள் என கூறினார்.

மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்

நக்கீரன் :கொலை செய்’ என தூண்டுபவர்கள் என்னைப் பொறுத்தவரை இந்துக்களே இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்து தமது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். மேலும், அவருடன் நடிகர் விஷால், மலையாள திரைப்படம் ‘செக்ஸி துர்கா’ என்ற படத்தின் இயக்குனர் சசிதரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ், ‘சசிதரண் சிறந்த இயக்குனர். அவர் இயக்கியிருக்கும் ‘செக்ஸி துர்கா’ படத்தில் இந்துவத்தைப் பற்றியோ, இந்துக்களைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், இன்னமும் இந்துத்துவா என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தங்கத்தமிழ் செல்வன் :போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்!

நக்கீரன் :போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்ளுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பிரவேசம் பற்றி பேசாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய 2 நடிகர்கள் அவரின் மறைவிற்கு பின்னர் திடீரென பேசுகிறார்கள் என்றால் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி முதலமைச்சர் ஆகி விடலாம் என்று நினைகிறார்கள்.
அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும். கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிப்புகள், விவசாய பாதிப்புகள் குறித்தும் வாய் திறக்கவும் இல்லை. நேரடியாகச் சென்று சந்திக்கவும் இல்லை. இதே போல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 10 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள் இது குறித்தும் அறிக்கை எதுவும் வெளியிடவும் இல்லை. இவைகளை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது.

பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு!

நக்கீரன் :முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை நிறுவ முழு ஆதரவளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் செயலாளர் திருமதி சூசன் ஃபெர்ரோ மற்றும் தேவாலய க்யூரேட்டர் ஷெரோன் பில்லிங் ஆகியோர் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். ;">அப்போது, “முல்லை பெரியாறு அணையை கட்டி தமிழக மக்களுக்கு பேருதவி செய்த இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் அவர்கள் மறைந்த பிறகு, அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி இங்கிலாந்து செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும், தேவாலய விதிமுறைகளின்படி, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அங்கிருந்து அகற்றப்படுவது வழக்கம்”, என்றும் தெரிவித்த அவர்கள், “அதன்படி, பென்னிகுவிக் கல்லறை அங்கிருந்து அகற்றப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு இருப்பதாகவும், ஆனால், அவரது கல்லறையை அகற்றாமல் இருக்கவும், லண்டன் மாநகரம் மட்டுமல்லாது தேனியிலும் பென்னிகுவிக் திருவுருவச் சிலையை அமைக்க முயற்சித்து வருவதாகவும்”,தெரிவித்தனர்.

VHP பிரவீன் தொகாடியாவை போட்டுத்தள்ள அமித் ஷா கும்பல் முயற்சி .... RSS இல் பதவி, பணம் போட்டி ?

சின்னையா : VHPயில் RSS நியமித்த அனைத்து அதிகாரங்களும் பெற்ற ஆதியும் நானே அந்தமும் நானே என்கிறான் தொகாடியா. குஜராத் ராஜஸ்தான் போலீஸ் என்கவுன்டர் செய்யப் பார்க்கிறார்கள் என்கிறான். மோடி அமுக்கு ஷா வசுந்த்ரா சிந்தியாவை மறைமுகமாக  சொல்கிறானோ?
VHP கஜானா அகில உலகப் பெரியதாம். சர்வ வல்லமை படைத்த அமுக்கு ஷா கண்பட்டுவிட்டதாக பேசிக்கிறாங்களாம். @ RSS கண் அசைவில் ஆட்சிக்கான அதிகாரப் போட்டியும் நடைபெறுகிறதாம். மோடி முகமூடி கிழிந்துவிட்டதாம். புதிய முகத்தை தேடுகிறதாம். சங்கி மடம்.
கடந்த குஜராத் தேர்தலில் திரைமறைவில் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அதனால் சங்கிகள் இவர் மீது கொலைவெறியில் இருப்பதாகவும் ஒரு தகவல்.

விகடன் :விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக பிரவீன் தொகாடியாக இருக்கிறார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக 2015 ஆம் ஆண்டு அவர் மீது ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அவரை கைது செய்ய நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. அந்த வழக்கை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் போலீசார், கடந்த 15 ஆம் தேதி குஜராத் வந்தனர். வீட்டுக்கு போலீசார் வந்த போது தொகாடியா வீட்டில் இல்லை.

Gutka nexus ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி ஏன் சேகர் ரெட்டியின் கைத்தடியிடம் பேசுகிறார்

Shankar A : கடும் கோபத்தில் ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தி.
சவுக்கில் வெளியான நீதித்துறை கட்டுரையில், நீதித்துறையின் ப்ரோக்கரான நீதிதேவன் கிருஷ்ணமூர்த்தி குறித்து விபரங்கள் வெளியானதும், அண்ணன் கிருஷ்ணமூர்த்தி கடும் கோபமடைந்துள்ளார்.
உடனடியாக மணல் கடத்தல் மாபியா மன்னன் சேகர் ரெட்டியின் கைத்தடியாக உள்ள உபேந்திரா என்பவரை அழைத்துள்ளார். இந்த உபேந்திரா, மணல் லாரி உரிமையாளர்களின் சங்கம் ஒன்றை வைத்துள்ளார். ஒரு ஸ்மால் டைம் ரவுடி.
யார் இந்த சவுக்கு. அவனைப் பற்றிய விபரங்களை சேகரியுங்கள் என்று கூறியிருக்கிறார். விசாரித்த உபேந்திரா, அண்ணன் கிருஷ்ணமூர்த்தியிடம், அவன் பெயர் சங்கர். உளவுத்துறையில் பணியாற்றியிருக்கிறான். அவன் மேல் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட் நடவடிக்கை எடுத்து அவனை டிஸ்மிஸ் செய்து விட்டார். அதனால் அவரை பழிவாங்குவதற்காக அவர் மீது வழக்கு போட்டு பல சிக்கல்களை உருவாக்கினான் என்று கூறியுள்ளார்.
சரி இது குறித்து நான் ஜாபரிடம் பேசிக் கொள்கிறேன் (வேற ஆளே கிடைக்கலயா ?) என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி, நான் டெல்லி செல்கிறேன்.

ஆசிரியரின் தண்டனையால் மரணமடைந்த மாணவன்! - சக மாணவர்கள் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்


மாணவன் நரேந்தர்
உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்விகடன் :நமது நிருபர்

சென்னை பள்ளி மாணவனுக்கு அளிக்கப்பட்ட `டக்வாக்' தண்டனையால் அவரது உயிர் பறிபோனது. அதே தண்டனையால் மயக்க மடைந்த இரண்டு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னை, செம்பியம், திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் நரேந்தர். இவர், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். வழக்கம்போல நேற்று காலை நரேந்தரை பைக்கில் அழைத்துச்சென்ற முரளி, காலை 8.40 மணியளவில் பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார். ஒரு மணி நேரத்தில் (காலை 9.40 மணி) பள்ளியிலிருந்து வந்த போன் அழைப்பு முரளிக்கு அதிர்ச்சியை அளித்தது. தங்களுடைய மகன் நரேந்தர் மயக்கமடைந்துவிட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பதறிப்போன முரளி, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு நரேந்தர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு நரேந்தரின் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. இந்தச் சம்பவத்தை அறிந்த சக மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மாணவர் நரேந்தரின் மரணத்துக்கு நீதிகேட்டு பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது.

வியாழன், 18 ஜனவரி, 2018

வைரமுத்து எச்.ராஜாவுக்கு : சோப்பு போட்டு தீக்குளியுங்கள் .. ஜீயர் உண்ணாவிரதம் முடிவு ,,, பட்டினி கிடக்க முடியாதான்னோ ..

எச்.ராஜா : மத உணர்வுகளை திட்டமிட்டே காயப்படுத்திய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் . இது என் தாய் மீது ஆணை ! 

வைரமுத்து : ஆண்டவனை பெருமை படுத்துவதே என் நோக்கம் , நீங்கள் தீக்குளிப்பது உண்மையாயின் தீக்குளியுங்கள் . பிறகு மன்னிப்பு கேட்கிறேன் . அன்பான வேண்டுகோள் மறவாமல் சோப்பு போட்டு குளிக்கவும் .
Shankar A : பாரதிராஜா பேசியதை பொருட்படுத்தாமல், ஜீயர் அவர்கள், மீண்டும் தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர வேண்டும்.
இப்படி பாதியிலயே பொசுக்குன்னு விட்டுட்டுப் போனா, ஒரு வேளை கூட ஜீயரால நெய் பொங்கல் சாப்பிடாம இருக்க முடியாதுன்னு நாலு பேரு பேசுவாங்களா மாட்டாங்களா ?
நித்தி ஆசிரமத்துல இருக்குற பச்சைப் புள்ளைங்கள்ளாம் விடியக் காத்தால 2 மணிக்கு லைவ் வீடியோ போட்டு, ஆண்டாள் பெருமையை காப்பாத்தறாங்க.
கேவலம் வெண் பொங்கலுக்காக ஆண்டாளை அம்போவென்று விட்ட ஜீயர்னு நாளைக்கு உங்களை வரலாற்றில் பதிவு செஞ்சா நல்லாவா இருக்கும் ?
ப்ளீஸ். தயவு செய்து மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்குங்கள்.
வீர வணக்கம்.

ஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்... காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய ஈடுபாடுகள்

thetimestamil : ஏர் மகாராசன்: சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை அங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால், சைவ – வைணவ சமயங்களோ அத்தகைய விலக்கல் முறைகளைப் பின்பற்றவில்லை. மாறாக, காதல்,காமம், களிப்பு, கலை இலக்கிய
ஈடுபாடுகள் போன்றவற்றைத் தமது பக்திநிலைப் பரப்புகளில் படியச் செய்வதற்கான வாய்ப்புகளுக்கு இடமளித்தன. அதனால்தான், சங்ககாலத் திணை இலக்கிய மரபுகளுள் ஒன்றான  ‘அகப்பொருள் மரபு’ பக்திநிலை இலக்கியத்திலும் படிய நேர்ந்திருக்கிறது.சங்க கால அகப்பொருள் இலக்கிய மரபு பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலை மய்யமிட்டிருப்பது. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்ற மரபைப் பின்பற்றித்தான் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தம்மைப் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பாவித்துக்கொண்ட காதல் அனுபவ வெளிப்பாடுகள் மானுடம் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. கடவுள் பற்றிய காதல் அனுபவ வெளிப்பாடுகளும் அகப்பொருள் மரபைச் சார்ந்ததுதான் எனும் வகையில்
காமப்பகுதி  கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்(தொல்.பொரு.81)
என்கிறது தொல்காப்பியம்.

ஜிக்னேஷ் மேவானி ... விபசார டிவிக்களின் டிஆர்பி வெறிக்காகத்தான் ..ராஜ் டிவி ஷபீர் ஒரு ஊடாக மாமா?

0.jpgthetimestamil :விபச்சார ஊடகம் என்று உங்களை ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா ஆங்கில நிருபர்களே?#ஜிக்னேஷ் #ஷபீர் மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக, உண்டதற்காக  இஸ்லாமியர்களும் தலித்துகளும் சரமாரியாக  கொல்லப்பட்ட இந்துத்துவ ஆட்சியில், ஒடுக்கப்பட்டவர்களுக்கான  எழுச்சியாக நிமிர்ந்து நிற்கும்  குஜராத் மாநில எம்எல்ஏ, செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி ஹிந்து இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அப்படியே பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். அதில் லயோலாவில் நடைபெற்ற கலந்துரையாடலும் ஒன்று. அந்த கலந்துரையாடல் முடிவில், ஒரு பேட்டி வேண்டி அங்கிருந்த  பத்திரிக்கையாளர்கள், ஜிக்னேஷை கேட்டிருக்கிறார்கள்.
பேட்டி  தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த (அர்னாப் கோஸ்வாமியின்)  ரிபப்ளிக்  டிவி  மைக்கைப் பார்த்ததும், அதை எடுத்தால்தான் பேட்டி தருவேன் என்று ஜிக்னேஷ் கூறுகிறார் (இதை அப்போது அங்கிருந்த எழுத்தாளர் சல்மா உட்பட பலரும் சுட்டிகாட்டியுள்ளனர்) இதற்கு அங்கிருந்த , குறிப்பாக ஆங்கில ஊடக நிருபர்கள் , அதிலும் குறிப்பாக டைம்ஸ் நவ் நிருபரான, தமிழகத்தை சேர்ந்த ஷபீர் அஹமத் தலைமையில்  எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதை  தன்னுடைய டிவிட்டரில், ஷபீரே பதிவு செய்திருக்கிறார் .

பொன்ராஜ் : கமல் கலாம் பெயரைப் பயன்படுத்துவதற்கு கலாம் பெயரில் கட்சி நடத்தும் ...

டிஜிட்டல் திண்ணை: கலாம் பெயரைப் பயன்படுத்துவதா?மின்னம்பலம் :கமலுக்கு எதிராக பொன்ராஜ்!
மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ் இது.
“பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதாபுரத்தில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார் கமல். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு ரொம்பவே சுறுசுறுப்பான கமல், சுற்றுப்பயண நாளை குறித்திருக்கிறார். அப்துல் கலாம் மண்ணில் இருந்து தொடங்குவதுதான் கமலின் திட்டம். அப்துல் கலாம் இளைஞர்களின் கனவு நாயகனாக இன்னும் இருப்பவர். அவர் மண்னில் இருந்து ஆரம்பித்தால் இளைஞர்களின் கவனம் தன் பக்கம் திரும்பும் என்பது கமலின் திட்டம்.

தமிழகத்தில் குஜராத் பாணி கலவரத்தை உண்டாக்க சதி!

தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க சதி!
மின்னம்பலம் :ஆண்டாள் பற்றிய தனது கருத்துக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டபோதும், அவர் மீதான கொலை மிரட்டல்கள் தொடர்வதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் எப்படியாவது ஒரு கலவரத்தை உண்டாக்க பாஜக சதி செய்வதாகவும் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் பாடுபடும் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் இணைந்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பை சமீபத்தில் கட்டமைத்தனர். இதில் இந்து ராம், பேராசிரியர் வசந்தி தேவி, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் தாவூத் மியாகான், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் புரவலர்களாக இருக்கின்றனர். மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.

சீமான் :வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி

வெப்துனியா :ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவிற்கு ஆதவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என நம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் பாரதிராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எச்.ராஜாவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ எனவும், எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்றும் அச்சம் தெரிவித்தார்.

பாரதிராஜா :வைரமுத்துவைவை காட்டி கொல்லைப்புறமாக வர முடியாது.. நன்றி கெட்ட ரஜினி ... எங்களை மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்காதீர்கள்


மாலைமலர் :வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது நடக்காது, அதனை அனுமதிக்க மாட்டோம் என `கடவுள் 2' பட ஆரம்ப விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசினார். #Bharathiraja #Kadavul2 வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப்புறமாக வர முடியாது - பாரதிராஜா பேச்சு இயக்குநர் வேலு பிரபாகரன் இயக்கத்தில் பாரதி ராஜா, சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கடவுள் 2. இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் பாரதிராஜா, சீமான், வேலு பிரபாகரன், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசுகையில், ஆண்டாள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அவரை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அதில், வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அவருக்கு எதிராக போராட்டங்கள், கண்டனங்கள் எழுவது ஏன்?

14 மகனை எரித்து கொன்ற தாய் ... கேரளாவில் சொத்து தகராறில் .. ஜெயாமோள்...

கேரளாவில் 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாய் கைதுமாலைமலர் :கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சொத்து தகராறில் 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்டாரா பகுதியை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் கடந்த 14-ம் தேதி திடீரென்று காணாமல் போனான். இதுதொடர்பாக, அவனது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தனது விட்டுக்கு அருகாமையில் எரிந்த கரிக்கட்டையாக பிணமாக கிடந்த சிறுவனின் உடலை போலீசார் நேற்று கண்டெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் ஜெயாமோள் அளித்த வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் போலீசார் சுமார் 44 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின்மீது சந்தேகப்பட்டனர். மேலும், அவரது கையிலும் தீக்காயம் இருந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு

தினமலர் :புதுடில்லி: ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டில்லியில் நடந்தது. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இந்த கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 49 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது.
* பொழுது போக்கு பூங்கா கட்டணம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி.,யில் குறைப்பு
*ஜனவரி-25 தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும்
*10 நாட்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கானொலி காட்சி மூலம் நடைபெறும்.
ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி போல இன்ஸ்பெக்ட்டரை ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் பார்க்கலாம்

வாசுகி பாஸ்கர்: விஜய் சேதுபதி ரசிகைகள் உடைத்துப்பேச தயக்கப்பட்டு கொண்டிருக்கும் பல விஷயங்களை பொதுவெளியில் எந்த தயக்கமுமின்றி பேசவதற்கான ஒரு சூழலுக்கு நாம் அனைவருமே கிட்டத்தட்ட காத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கான கால சூழல் ஏற்படுகிற போது வெடிக்க தயாராயிருக்கும் சீழ் கட்டியின் மேற்புறத்தை நுனி முள்ளால் லேசாக கீறினாலே மொத்தமாய் பெருக்கெடுத்து வெளியேறுவதை போல, நம் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கான உந்துதல் பெரும்பாலும் வெளிப்புறத்தில் இருந்து இயக்கப்படுபவை தான்.
Unreserved கம்பார்ட்மெண்டில் பயணிக்கும் போது சக பயணிகள் ஒருவருக்கொருவர் எந்த கவலையுமின்றி, வேர்க்கடலையில் இருந்து சமோசா வரை வாங்கித்தின்ன எந்த யோசனையும் செய்ய மாட்டார்கள், திங்க வேண்டுமென்றால் வாங்கி விடுவார்கள். AC கம்பார்ட்மெண்டில் போண்டா, பஜ்ஜி வரும், ஒருவரை ஒருவர் மறைமுகமாக பார்த்துக்கொள்வார்கள், சில குழந்தைகள் துள்ளிக்குதித்து பெற்றோரை வாங்கித்தரச்சொல்லி அடம் பிடிக்கும், சில பெற்றோர்கள் அக்குழந்தைகளை அடக்க முயற்சிப்பார்கள். ஓரிருவர் வாங்கினால் படிப்படியாக எல்லோரும் வாங்க ஆரம்பிப்பார்கள். அதிலும் சமூகத்தின் கிளாசி, elite நவீன தோரணையில் இருப்பவர்

அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் நடிகர் கமல்ஹாசன்

மாலைமலர் :சென்னை, நடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார். ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

ஆதார் .. உலக / உள்நாட்டு மாபியாக்கள் உங்களை கொள்ளையடிக்க ஒரு வரப்பிரசாதம்

ஆதார் மனித உரிமைகளைக் கொன்றுவிடுகிறது!
மின்னம்பலம் :ஆதார் மனித உரிமைகளைக் கொன்றுவிடுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷாம் திவான் தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள், ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான ரொக்கப் பரிமாற்றங்கள், செல்போன் இணைப்புகள், அரசின் நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதாரை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
ஆதார் அடையாள அட்டைக்கு ஒருவரின் கைரேகைப் பதிவு, கண்பார்வை படம் ஆகிய பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்படுகிறது. இந்தத் தகவல்கள் இணையத்தில் வெளியானால் ஒருவரின் தனிநபர் உரிமை மீறப்படும் என்று கூறப்பட்டது
இவ்வாறு ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

புத்தக விற்பனையில் முதலிடம் ... இந்திய பொருளாதாரம் கட்டுகதைகள்

முதலிடம் பிடித்த ‘இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள்’!
மின்னம்பலம் : சென்னைப் புத்தகக் காட்சியில் கவனம்பெற்ற புத்தகங்கள் பட்டியலை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நேற்று (ஜனவரி 17) வெளியிட்டது. இதில் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதி, மின்னம்பலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘இந்தியப் பொருளாதாரம் கட்டுக்கதைகள்’ புத்தகம் முதலிடம் பெற்றுள்ளது.
41ஆவது புத்தகக் காட்சி சென்னையில் களைகட்டி வருகிறது. விடுமுறை நாள்கள் முடிந்தாலும் புத்தகங்கள் மேல் காதல் கொண்டவர்கள் தொடர்ந்து புத்தகக் காட்சியை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை என பல்வேறு பிரிவுகளில் கருத்துச் செறிவுமிக்க ஏராளமான கட்டுரைகளை நமது மின்னம்பலம் இதழில் தினமும் வெளியிட்டு வருகிறோம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அரங்கு எண் 379 இல் இடம்பெற்றுள்ள நமது மின்னம்பலம் பதிப்பகப் புத்தகங்கள் பெரும்பாலான வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.

RSS போட்டோ ஷாப் கருத்து கணிப்பு ,,,, ரஜினிக்கு கானல் நீரை காட்ட ஒரு கருத்து கணிப்பு

மினன்ம்பலம் :டி.எஸ்.எஸ்.மணி சிறப்புக் கட்டுரை: கருத்துக்கணிப்பு கண்ணை மறைக்கவா?திடீரென டெல்லியிலிருந்து இயங்கும் ஓர் ஆங்கிலக் காட்சி ஊடகத்தில், தமிழ்நாட்டுக்கு யார் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்துக்கணிப்பை, 16-01-2018 அன்று வெளியிட்டார்கள். எதற்காக இந்த திடீர் சர்வே?
2021ஆம் ஆண்டு வரப்போகிற சட்டமன்றத் தேர்தலுக்காக, இப்போது அந்தப் பிரபல ஊடகம் ஏன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளிபிட வேண்டும்? ஏதோ அரசியல் காரணம் இல்லாமல் இப்படி ஒரு வெளியீடு வராது என எல்லாருமே புரிந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட அந்தத் தொலைக்காட்சி, சமீபகாலங்களில் பாஜக சார்பாக குறிப்பாக, நரேந்திர மோடி சார்பாக இயங்கிவருவதை எல்லோருமே அறிவார்கள்.