மின்னம்பலம் :சைபர் சிம்மன்
விண்வெளியில்
செலுத்தப்பட்ட விண்கலங்களில் சில திடீரெனத் தகவல் தொடர்பு அறிந்து காணாமல்
போயிருக்கின்றன. இன்னும் சில விண்கலங்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி
வெடித்துச் சிதறியிருக்கின்றன. பல விண்கலங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி
விண்வெளிக் குப்பையாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், சனி கிரகத்தை வலம்வந்துகொண்டிருந்த காசினி விண்கலம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே அழித்துக்கொண்டு கம்பீரமாக விடைபெற்றிருக்கிறது. மனிதகுலத்தின் விசுவாசமான ஊழியனைப்போல, கடைசி வரை தனக்கு இடப்பட்ட கட்டளைகளை எல்லாம் கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு, காசினி விண்கலம் சனி கிரகத்தில் ஐக்கியமாகி இருக்கிறது.
காசினி விண்கலம் விடைபெற்றது விஞ்ஞானிகளை சோகமாக்கிய அதே நேரத்தில் கொண்டாடவும் வைத்திருக்கிறது. காசினி இனி இருக்காது என்பதும் அதனிடமிருந்து ஆய்வுக் குறிப்புகளும் தரவுகளும் வந்துசேராது என்பது சோகம். அந்த விண்கலப் பயணத்தைப் பொறுத்தவரை எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருப்பது ஒரு சாதனை. காசினி விண்கலம் நிகழ்த்திய எத்தனையோ சாதனைகளில் இறுதி சாதனையாக இது அமைகிறது.
விண்வெளியில்
செலுத்தப்பட்ட விண்கலங்களில் சில திடீரெனத் தகவல் தொடர்பு அறிந்து காணாமல்
போயிருக்கின்றன. இன்னும் சில விண்கலங்கள் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி
வெடித்துச் சிதறியிருக்கின்றன. பல விண்கலங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விலகி
விண்வெளிக் குப்பையாகச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.ஆனால், சனி கிரகத்தை வலம்வந்துகொண்டிருந்த காசினி விண்கலம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே அழித்துக்கொண்டு கம்பீரமாக விடைபெற்றிருக்கிறது. மனிதகுலத்தின் விசுவாசமான ஊழியனைப்போல, கடைசி வரை தனக்கு இடப்பட்ட கட்டளைகளை எல்லாம் கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு, காசினி விண்கலம் சனி கிரகத்தில் ஐக்கியமாகி இருக்கிறது.