வெள்ளி, 22 செப்டம்பர், 2017

700 ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற மலையாளிகள்! Kerala Kozhikode settled in China 700 years ago.

Children is about Kozhikode people who settled in China 700 years ago. ... Ma Xunkai fights back tears on meeting Joe Thomas Karackattu,
கேரளாவின் கோழிக்கோடு பகுதியிலிருந்து 700 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தெற்கு பகுதியில் குடியேறிய மலையாளிகளின் வம்சத்தை கண்டுபிடித்து ஆவணப்படம் எடுத்திருக்கிறார் சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கராக்கட்டு. நமது சொந்த நகரைச் சேர்ந்த>
உறவுக்காரரின் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை தொலைதூரத்தில் நீண்டகாலம் கழித்து சந்தித்தால் கண்ணில் நீர் பொங்குமா இல்லையா? அத்தகைய ஒரு அனுபவத்தை இவர் ஆவணப்படமாக ஆக்கியுள்ளார். நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே கேரளாவின் கோழிக்கோடு, கொல்லம், கொச்சி ஆகிய பகுதிகளுக்கு சீனர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட வர்த்தக தொடர்பில் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த மலையாளிகள் தெற்கு சீனா சென்றுள்ளனர். அங்குள்ள குலி என்ற பகுதியில் இவர்கள் வாழத் தொடங்கினர். அந்த மலையாளிகளின் வம்சம் இப்போதும் அங்கும் வாழ்கிறது. அவர்கள் சீனர்களாகவே வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்கிறது இந்த ஆவணப்படம்.
குலியின் குழந்தைகள் என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படத்தை தயாரிக்க 20 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்ததாக கராக்கட்டு கூறுகிறார். மலையாளி வம்சத்தைச் சேர்ந்த மா ஸுன்கய், கராக்கட்டுவை சந்தித்தபோது பொங்கி வந்த கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டார் என்று கூறுகிறார். இன்று குலியில் அதாவது சீன மொழியில் கோழிக்கோட்டில் வசிக்கும் மலையாளிகளுக்கு இது 20 ஆவது தலைமுறை என்கிறார் கராக்கட்டு. -ஆதனூர் சோழன்  nakkeeran


கருத்துகள் இல்லை: