Kamal Haasan tells India Today: It's confirmed. I am entering politics, want to be CM for people of Tamil Nadu


கருப்பு தான் என் நிறம் என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.
மக்களை நோக்கி பயணம் மக்களை நோக்கி பயணம் அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன்.
மாற்றத்திற்கு தலை வணங்குகிறேன் மாற்றத்திற்கு தலை வணங்குகிறேன் உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போன்று டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் கமல் கூறியதாவது: மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன். மக்களுக்கு உதவும் கருவி
மக்களுக்கு உதவும் கருவி கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். /tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக