திங்கள், 12 செப்டம்பர், 2016

செல்போன்களில் இந்தி மொழி கட்டாயம் ...

இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து
செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி  கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொது மக்களுக்கு செல்போன் மூலம் கொண்டு சேர்க்க
வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வசதியாக செல்போனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் 2 முறை ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பிரமுகர்களின் 40 இடங்களை வருமான வரி சோதனை .. சைதை துரைசாமி , நத்தம் விஸ்வநாதன் .....

சென்னை: தமிழகம் முழுவதும் மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,
சென்னை மேயர் சைதை துரைசாமி வீடு உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.இன்று காலை முதல் வருமான வரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் திண்டுக்கல்லில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,
சி.ஐ.டி,. நகரில் இருக்கும் சென்னை மேயர் சைதை துரைசாமி வீடு , தாம்பரத்தில் இருக்கும் அவரது மகன் வெற்றியின் பண்ணை வீடு, கோவை ராஜவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் உள்ள கீர்த்திலால் நகைக்ககடை , துடியலூர் நரசிம்ம நாயக்கன் பாளையம் வைர தொழிற்சாலை மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் இதன் தலைவர் சேதுராமன், துணை தலைவர் குருமூர்த்தி ஆகியோரது வீடு, உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது  தினமலர்.கம்
நம்மள மாதிரி ஆட்களுக்காக அப்பப்ப இந்த மாதிரி 20 மணிநேர தொடர் ரைடு அப்படி இப்படின்னு மீடியாவுல வரும். எல்லாம் ஒரு டைம் பாஸ்க்காக. மேட்டர் அவ்வளவுதான். இந்த ஊழல் பேர்வழிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இரண்டு லக்ஸுரி பஸ்கள் கைப்பற்றப்பட்டதாக சில வருடங்களுக்கு முன்னால் வந்தது. அது என்னவாயிற்று. யாருக்காவது தெரியுமா?

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 2.. முகலாயர்களும் பார்ப்பனர்களும் ஒரே இனத்தவரே!

ஆரியப் படையெடுப்பும் நம்பூதிரியின் நயவஞ்சகமும்
பார்ப்பன சனாதன – இந்துமத வெறி பாசிசத்தை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களை விட, உண்மையில் போலி மார்க்சிஸ்டுகள் தாம் மிகவும் அபாயகரமானவர்கள் என்று கடந்த ‘புதிய கலாச்சார’த்தில் குறிப்பிட்டிருந்தோம். ஏனென்றால் இவர்கள் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களைப் போல பகிரங்கமான முறையில் பார்ப்பனியத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் காப்பதற்காகக் களத்தில் வந்து நிற்பதில்லை. மாறாக கம்யூனிசத்தின் பேரால் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்குள் புகுந்து கொண்டு நயவஞ்சகம் துரோகம், தத்துவ – வரலாற்றுப் புரட்டு ஆகிய மறைமுக வழிகளில் இதைச் செய்கிறார்கள்.
Group-Photo-of-Mundas-dravidas-nagasஆரியர்களின் ஆக்கிரமிப்பு; அதற்கு முன்பு இந்த துணைக்கண்டத்தில் நிலவிய சமூக அமைப்பு அதன் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சி; ஆரியர்கள் உருவாக்கிய பார்ப்பன சனாதன மதம், வருண – சாதி அமைப்பு; அதற்கு எதிராக புத்த-சமண மதங்கள், ஒடுக்கப்பட்ட வருண சாதி எழுச்சிகள்; அவற்றை அடக்குவதற்கு பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அட்டூழியங்கள்;

ஆர்ப்பாட்டம் கண்டன பேரணிக்கு சீமான் அழைப்பு !

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கண்டன
ஆர்பாட்டமும் பேரணியும் நடத்த அழைப்புவிடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:'வான் பொய்ப்பினும், தான் பொய்யாக் காவிரி' என்று நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்துவரும் முதுமொழியே, காவிரி நதியுடன் நமக்கிருக்கும் பந்தத்துக்கான எடுத்துக்காட்டு. காவிரி நதிநீர் உரிமையானது கன்னடர்களுக்கு மட்டுமானது என்ற உளவியலைச் சித்தரித்த அரசியல் சக்திகள், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் போராட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்மீது கேரளா போலீசார் தாக்குதல்!


தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அருகே, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்மீது கேரள போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். தமிழகமாணவர்களின் பள்ளி வாகனங்களை அனுமதிக்காத கேரள அரசைக் கண்டித்து எல்லையில் போராட்டம் நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள்மீதுதடியடி நடத்தப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம் தூணக்கடவு ஆகிய அணைகள் தமிழக-கேரள எல்லையில் கேரளத்துக்குள் அமைந்துள்ளன. இத்திட்டஒப்பந்தத்தின்படி, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளை பராமரிப்பது, பாதுகாப்பது, நீர் மேலாண்மை போன்ற பணிகளை தமிழகமே செய்து வருகிறது.

நத்தம் விசுவநாதன் வீட்டில் அதிரடி சோதனை ... ஞானதேசிகன் காலை வாரினார்


‘ரெய்டு... ரெய்டு... ரெய்டு!’ என்று மட்டும் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது.அதைத் தொடர்ந்து, ‘‘கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நான் சொன்ன தகவலை ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ள அனுப்புறேன்... ‘தமிழகத்தைப் பொருத்தவரை, அதிகாரிகள்தான் ரொம்பவும் ஆடிப்போயிருக்கிறார்கள். அதிகாரிகள் வட்டாரத்தில் நினைக்காதவற்றை எல்லாம் செய்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ஒருபக்கம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட்... இன்னொருபக்கம் டிஜிபி விருப்ப ஓய்வு, கமிஷனர் மாற்றம் என தமிழகம் அலற ஆரம்பித்துவிட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

கர்நாடகா அரசை தகுதி நீக்கம் செய்க ! ஆட்சி செய்யக்கூடிய தகுதியை இழந்துவிட்டது ! நீதிமன்ற அவமதிப்பு ....


சென்னை: பெங்களூரில் இன்று நடந்த வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியுள்ளது. உச்சகட்டமாக 50க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பஸ்களை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும், உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெங்களூரு நகரம் இன்று வரலாறு காணாத வன்முறையைச் சந்தித்துள்ளது. காலை முதல் இன்னும் விடாமல் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுடள்ளனர்

Fashback... மாரியப்பன் தங்கவேலுவின் குடும்பம் வறுமையால் தற்கொலைக்கு முயன்றது

வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு பயந்து விடாதே என்ற பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு தங்கமகன் மாரியப்பனின் வாழ்வு ஒரு உதாரணமாக உள்ளது
 ரியோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்த மாரியப்பன் தங்கவேலுவை இந்தியாவே கொண்டாடி வருகிறது.<தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் குடும்பம் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் குறித்தான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.>வறுமை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

கர்நாடகா சட்டம் ஒழுங்கு கேள்விகுறி? கலவரங்களின் பின்னணியில் போலீஸ்? ஆட்சியாளர்கள்?

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளநிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவிசெய்வோம் என்று மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.< மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி பேசுகையில், “கர்நாடக மாநில தலைமை செயலாளருடன் தொடர்பில் உள்ளேன் மற்றும் கர்நாடக கோரும் உதவி எதுவாகினும் வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டு உள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.

பெங்களூரில் 65 தமிழக சொகுசு பேருந்துகள் - 27 லாரிகள் எரிப்பு!


பெங்களூருவில் உள்ள மைசூர் சாலையில் தனியார் பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான 65 பேருந்துகளை தீ வைத்து கொளுத்தினர் கன்னடர்கள். இந்த கொடூர சம்பவத்தில் 45 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. ஒரே நிறுவனத்திற்கு சொந்தமான 38 பேருந்துகள் எரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சேலத்தை மையமாகக்கொண்டு செயல்படுகிறது கே.பி.என். நிறுவனம். தனது நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார் கே.பி.என் நிறுவனர் நடராஜன். மைசூர் சாலையில் லாரிகள் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 27 தமிழக லாரிகள் தீவைத்து எரித்தனர் கன்னடர்கள். இந்த சம்பவத்தில் லாரிகளில் இருந்த பல கோடி ரூபாய் சரக்குகளும் சேதமடைந்தன. காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டதைக் கண்டித்து பெங்களூர் முழுவதும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக இல்லாததால் இந்த பேராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்ககள் தாக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. மைசூரில் தமிழ்நாடு காய்கறி லாரிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தமிழ்நாடு பதிவெண் கொண்ட கார்கள் முழுவதுமாக டித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், வன்முறையாட்டத்தின் உச்சகட்டமாக பனிமனையில் நிறுத்திவைக் கப்பட்டிருந்த 65 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.  nakkheeran,in

கட்ஜு :இந்தியாவை புனித நாடாக அறிவிக்க வேண்டும்..ரகுபதி ராகவ தேசிய கீதக்கணும் ...


minnambalam.com :பல அதிரடிக்கருத்துக்களால் கவனம் ஈர்க்கும் இந்தியாவின்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்தியாவை புனித நாடாக அறிவிக்க தனது ட்விட்டர் பக்கத்தில் பரிந்துரை செய்திருக்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் இதோ...
1. இந்தியாவில்தான் பெரும் காப்பியங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் இயற்றப்பட்டன.
2. இந்தியாவில்தான் புனித நதியான கங்கா யமுனா, நர்மதா, பிரம்மபுத்திரா ஓடுகின்றன.
3. இந்தியாவில்தான் அயோத்தி, வாரணாசி, மதுரா, ஹரித்துவார், பூரி, துவாரகா, மதுரை, கயா, புத்த கயா, போன்ற புனித நகரங்கள் இருக்கின்றன.
4. இந்தியாவில்தான் அயோத்தியில் ராமனும், மதுராவில் கிருஷ்ணனும் பிறந்துள்ளார்கள்.
5. இந்தியாவில்தான ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியில் திளைத்தார்கள்.
6. இந்தியாவில்தான் புத்தர் ஞானமடைந்துள்ளார்.
7. இந்தியாவில்தான் ராமசரித மானசா, சுர்சாகர், திருக்குறள், திருப்பாவை மற்றும் பல பக்தி காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன.

தமிழ் இளைஞரை தாக்கியதை புன்னகையுடன் விபரித்த கன்னட டிவி



தமிழகத்தைச் சார்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், சமூக வலைதளத்தில், காவிரியில் தமிழகத்தை ஆதரித்தும் தமிழ், கன்னட நடிகர்களை ஒப்பிட்டும் சில கருத்துகளை எழுதியுள்ளார். இதையடுத்து, கன்னட அமைப்பினர் கும்பலாக சேர்ந்து, சந்தோஷைக் கடுமையாக தாக்கி, நடுரோட்டில் மண்டியிட வைத்து, மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தமிழக தலைவர்கள் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
டாகடர் ராமதாஸ்
காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர் பெங்களூருவில் கன்னட வெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ஜே.என்.யு. மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள்

கலைஞர் : வெள்ளப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனே எடுக்கப்படவேண்டும்

கலைஞர்  முகநூல் பக்கம்.: வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு இனியும் சுணக்கம் காட்டாமல் உடனடியாக சுறுசுறுப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அடையாறு மீண்டும் பெருக்கெடுத்தால், அங்கே வாழும் மக்களுக்கு தப்பிக்க வழியே இல்லை. மற்றொரு வெள்ளம் வந்தால், மாநகரைப் பாதுகாப்பதற்கு அரசால் எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்று மக்கள் அஞ்சுகிறார்கள் என்ற தலைப்பில், 'தி இந்து' ஆங்கில நாளிதழில் செய்தி வந்துள்ளது.

ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா?: வி.சி. குகநாதன்

How can Rajkumar's sons protest against TN?: VC Guhanathan சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பேடர கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். அப்படி இருக்கும்போது ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா? என தயாரிப்பாளர் வி.சி. குகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கன்னட திரையுலகினரும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

கருணாஸ் நடிகர்சங்க பதவியில் இருந்து விலகினார் ... மந்திரி ஆகணும்ல?

Karunass resigns his Nadigar Sangam post?
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாக தகவல்கள் வருகின்றன. தனது ராஜினாமா கடிதத்தை சங்க நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சங்க செயல்பாடு குறித்து அதிருப்தி அடைந்து அவர் பதவி விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா நடிகர் சங்கம் மீது கடும் கோபத்துடன் இருப்பதால்தான் கருணாஸ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது அமெரிக்க அதிபர் தேர்தல் கூட இந்த அளவுக்கு பரபரப்பாக நடந்திருக்காது என்று கூறும் அளவுக்கு நடந்தது நடிகர் சங்கத் தேர்தல். இதில் சரத்குமார் அணிக்கும், நாசர் - விஷால் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பும் சூடான வார்த்தைச் சண்டைகளிலும் இறங்கினர். வாக்கெடுப்பு தினத்தன்று அடிதடியும் கூட அரங்கேறியது.

தடை விதித்தாலும் ஒட்டகங்களை வெட்டுவோம் ..அப்துல் ரஹீம் இந்திய முஸ்லிம் லீக் மாநில தலைவர்

மின்னம்பலம்.காம் :அரசு
தடைவிதித்த போதிலும் நாங்கள் ஒட்டகங்களை பக்ரீத் அன்று பலி கொடுப்போம்’ என்று உறுதியாகக் கூறுகிறார்கள் இஸ்லாமியர்கள்.
செப்டம்பர் 13 ஆம் தேதி இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாட, தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் ஒட்டகத்துக்கும், ஆடுகளுக்கும் ஏற்கெனவே முன்பணம் கொடுத்து விட்டார்கள்.
பல இடங்களில் ஆடுகளை வாங்கி வந்து வீடுகளில் கட்டி வைத்து புல், செடி, கொடிகளைப் போட்டு வளர்த்து வருகிறார்கள். குர்பானி கொடுக்க ஒட்டகங்களும் வந்துவிட்டன. இந்த நிலையில்தான், சென்னை உயர்நீதிமன்றம் ஒட்டகம் வெட்ட தடைவிதித்துள்ளது. வாங்கிய ஒட்டகத்தை இஸ்லாமியர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள, இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா.ஜெ. அப்துல் ரஹிம் அவர்களை தொடர்புகொண்டு கேட்டோம். “ஒட்டகம் வெட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல. ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு 100 ஒட்டகங்கள் வந்து விட்டன. நானே இரண்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுக்க வாங்கியிருக்கிறேன்.அப்புறம் என்ன சொர்க்கம்தாய்ன் ........

தமிழர்களைத் தாக்குபவர்கள் மீது நடவடிக்கை: இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே


minnambalam.com :நாளொன்றுக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்பினர் அணை முற்றுகை, உருவப் பொம்மை எரிப்பு மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை, மாநில அரசு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேட்டுக் கொண்டுள்ளார்.

பாலாவின் படத்தில் சுப்பர் சிங்கர் பிரகதி .. பூஜா .. வரலட்சுமி.... வரிசையில்?


இயக்குநர் பாலா தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு, அடுத்ததாக இயக்கும் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரகதியின் ஜோடியாக சாட்டை படத்தில் நடித்த யுவன் நடிக்கிறார். எப்படி என்னைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, உன்னை எனக்குப் பிடிக்கும். நான் உன் திறமையை மதிக்கிறேன். உனக்குப் பாடுவது சுலபமாக வருகிறது. நடிப்பது அதை விட சுலபம் என்றார். நீ எத்தியோப்பியாவில் பிறந்தாலும் சரி, சோமாலியாவில் பிறந்தாலும் சரி, நான் என் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகமா என்று மட்டும்தான் பார்க்கிறேன். அப்படிதான் மக்களும் பார்ப்பார்கள் என்றார்’ என அவர் பேட்டியளித்துள்ளார்

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் 50 லட்சம் வழங்கிய விவகாரம்

zakirnaik ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் தன்னார்வ அமைப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சார்பில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் (எஃப்சிஆர்ஏ) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ராஜீவ் காந்தி நிதி அறக்கட்டளை. அந்த அமைப்புக்கு, மற்றொரு தன்னார்வ அமைப்பான இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை (ஐஆர்எஃப்) கடந்த 2011-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

டில்லி ஜே என் யூ மாணவர் தேர்தலில் இடது சாரி அணி பெருவெற்றி JNU election results: Left alliance sweeps all 4 seats, elects Mohit Pandey as President


The left has won all the posts of the president, vice president, general secretary and joint secretary. Left candidates- Mohit K Pandey (President), Amal Pullarkkat (Vice President), Satarupa Chakraborty (General Secretary) and Tabrez Hasan (Joint Secretary)- won the seats.
JNU election results: Left alliance sweeps all 4 seats, elects Mohit Pandey as President
Breaking news     இடது சாரிகளின் கூட்டு முன்னணி மிகப்பெரும் வெற்றியை பெறுவது உறுதியாகி உள்ளது . பாஜக  ஆர் எஸ் எஸ் ஆதரவு ஏபிவிபி படு தோல்வி !  டில்லி நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்
இந்துத்துவா அணியா- எதிர்ப்பு அணியா என்ற போட்டி
மாணவர்கள் மத்தியில் புது திருப்பம் புதுடில்லி, செயில்  நேற்று (9.9.2016) நடைபெற்ற டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் இந்துத்துவாவுக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்கிற கொள்கையின் அடிப்படையில் நடந்துள்ளது. தேர்தல் முடிவு 12.9.2016 அன்று வெளியாகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்துத்துவாவைத் திணிக்கின்ற வகை யில், ஆர்.எஸ்.எஸ். பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியைக் கொண்டு மத்திய அரசின்கீழ் இயங்கிவரும்பல் கலைக்கழகங்களில்தங்களதுஇந்துத் துவாதிணிப்புசதிராட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. கல்வி பயில்வதற்காக தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் பெரும் கல் வித் தாகத்துடன் மத்திய பல்கலைக் கழகங்களைநோக்கிவருகின்றனர்.

சகாயம் IAS :தாது மணல் கொள்ளையில் நல்ல தீர்ப்பு வரும்!

 I expect better judgment in mineral sand - Sagayam கோவை: தமிழகத்தில் நடந்த தாது மணல் கொள்ளை பற்றிய அறிக்கை உயர்நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோவையில் தெரிவித்தார்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பாக ஊறி திளைக்கும் ஊழலில் இருந்து தாய் நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ். கூறியதாவது: ஊழலில் இருந்து நாட்டை காக்க படித்த இளைஞர்கள் முன் வரவேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஆனால் நேர்மைதான் மனிதனுக்கு அழகு.

தங்கத்தை வென்ற தங்கவேலு மாரியப்பன் வரலாறு இதுதான் ...

பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு.
சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தையான தங்கவேலு, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை.

வாங்கிய பணத்தை ராம்ராஜ் திருப்பி கொடுக்கவேண்டும் : தமிழச்சி ஆவேசம்.. சுவாதி கொலை வழக்கில்

சுவாதி படுகொலை விசாரணை தொடர்பாகவும், அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க / இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் விடுத்த கொலை மிரட்டல்கள் ஆதாரங்கள் சேமிக்கப்பட்டு இதற்காக இந்திய சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க முயல்வது என்று ப்ரெஞ்ச் சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்து இந்திய வழக்கறிஞர்களிடம் தொடர்பு கொண்டுள்ளோம். இதற்காக கடந்த 1 வாரமாக கடும் முயற்சியில் இருந்ததால் சுவாதி தொடர்பான எந்த தகவல்களையும் இணையத்தில் பதிவிடுவதை தற்காலிகமாக தவிர்த்து வந்தேன். இன்று அணைத்து ஆவணங்கள், ஆதாரங்கள் ...சில இந்திய வழக்கறிஞர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அநேகமாக இன்னும் இரு தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்திய வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின் அறிவிப்பார்கள்.

வைகோ வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு.. வைகோ வாகனத்தில் இல்லையாம்!

வைகோ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சியில் அவரை பிக்கப் செய்ய அவரது கார் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்றது. காரில் வைகோ உதவியாளர் மட்டும் இருந்தார். காரை டிரைவர் பொன்னாங்கன் ஓட்டிசென்றார். கார் உளுந்தூர் பேட்டை அருகே சென்றபோது மாலை 7 மணி அளவில் திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் திடீரென வர கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் அடிபட்டு குறுக்கே வந்தவர் பலியானார். இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த வைகோவுக்கு தெரிவிக்கப்பட்டது என வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகி உள்ளது
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே வண்டிப்பாளையம் என்ற
இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற விவசாயி சக்திவேல் என்பவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததையடுத்து கார் டிரைவர் தப்பியோடிவிட்டார். சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.