செவ்வாய், 26 ஏப்ரல், 2016

JNU நிர்வாகம் கன்னையா குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், மேலும் ஐவருக்கும்...

The Jawaharlal Nehru University (JNU) administration on Monday announced rustication of Umar Khalid and Anirban Bhhatacharya in connection with an event organised in the campus to mark the death anniversary of Afzal Guru. While Umar has been rusticated for one semester and a fine of Rs. 20,000 imposed on him Anirban has been declared out of bounds from the campus for five years after July 23, 2016. He has been rusticated till the period of July 15.
புதுடில்லி;டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில், தேச விரோத கோஷம் எழுப்பிய புகார் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாருக்கு, பல்கலை நிர்வாகம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டனர்; பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

வீரமணி: அதிமுகவினரின் பணப் பதுக்கலால் முழு தமிழகமே வெட்கப்படுகிறது

அதிமுகவினர் தேர்தலை முன்னிட்டு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியுள்ள சம்பவம் வெட்கிதலைகுனிய வேண்டியுள்ளது என கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி  வெளியிட்டுள்ள அறிக்கையுலி கூறியுள்ளதாவது:தமிழ்நாட்டின் சட்ட மன்றத்திற்கு வரும் மே 16 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல் ஜனநாயகத் தேர்தலா அல்லது பணநாயகத் தேர்தலா என்று நாடெங்கும் கேள்விகள் கிளம்பும் வண்ணம் ஆங்காங்கு கோடிக்கணக்கில் அதிமுகவினர் பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.இதை தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும்  கைப்பற்றிய பணம் மற்ற மாநிலத்தவரையும் உலகத்தாரையும் வியக்கச் செய்யும் வெட்கத்தால் நாம் தலை குனிய வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யா வாதத்தை ரத்து செய்ய கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆச்சாரியா வாதத்தை ஏற்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா 4 நாட்கள் தனது வாதத்தை முன்வைத்தார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் ரத்னம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்': உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!


மும்பை: பொது இடங்களில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது எவ்வளவோ மேல் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு  சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக  நிறைவேற்றியது இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள்,  நாடக அரங்குகள்,  கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆவேசமடைந்த வைகோ, ஆம்பளையா இருந்தா வாங்கடா....

கோவில்பட்டியில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்க சென்றார். ஆனால் ஒரு கும்பல் அவர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் ஆவேசமடைந்த வைகோ, ஆம்பளையா இருந்தா வாங்கடா என கடும் கோபத்தில் பேசினார். பின்னர் வைகோவை தடுத்தவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இந்நிலையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று வைகோவுக்கு திடீரென கருப்புக் கொடி காட்டி சிலர் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். வைகோவுக்கு கருப்புக் கொடிகாட்டிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

விஜய் மல்லியா 1992 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து குடிமகன்....2003 முதல் 2010 வரை சுப்ரமணியம் சாமியின் ஜனதா கட்சி தலைவராக இருந்தார்

Previously a member of the Akhila Bharata Janata Dal, Mallya joined the Subramanian Swamy led Janata Party in 2003 and served as its National Working President till 2010.[ He was elected to the Rajya Sabha in 2002 as an independent member from his home state of Karnataka with the support of the Congress party and Janata Dal (Secular). In 2010, he was re-elected for a second term, this time with the backing of the Bharatiya Janata Party (BJP)[34] and the JD(S
பணமோசடி வழக்கில் சிக்கி, பிரிட்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, தான் 1992 ஆம் ஆண்டு முதல் ”பிரிட்டன் குடிமகன்” என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதையடுத்து, பிரிட்டன், லேடிவாக்-ல் இருப்பது, தனது அதிகாரபூர்வ முகவரி என்றும், அதை இந்திய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளதாகவும் மல்லையா கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மல்லையாவின் பெயர் பிரிட்டன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வெளிநாட்டு சிட்டிசனுக்கு ராஜ்யசபா பதவியும் கொடுத்து கட்சி தலைவராகவும் வைத்திருந்தது வேற யாரும் இல்லை  சாட்சாத் சுப்பிரமணியம் சாமியேதான் ...எங்கே போயிட்டாங்க பார்பன மீடியாக்காரங்க? 

சீறீ பாய்கிறதா அடிபட்ட (காகித) புலி? பாஜகவுக்கு ஏனிந்த திடீர் கோபம்?

நேற்று முன்தினம், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வருமான வரித் துறையினர், தமிழகத்தில் நடத்திய ரெய்டு தொடர்பாக, பல சந்தேகங்களை பொதுமக்கள் முன் வைக்கின்றனர். 'இவ்வளவு நாள் பிரச்னை இல்லாமல் ஓடிக்கிட்டு இருந்ததே... திடீர்னு எதுக்கு ரெய்டு?' என்பது ஒரு கேள்வி. 'இதை எதுக்கு பெரிசுபடுத்தணும்? சத்தீஸ்கரிலும் அன்னைக்கே ரெய்டு நடத்தினாங்களே... அதை வசதியாய் மறைத்து விட்டு, இட்டுக் கதை சொல்றீங்களா...' என்பது இன்னொரு கேள்வி. சத்தீஸ்கரில் நடந்தது, வருமான வரித் துறை, தானாகவே நடத்திய சோதனை. தமிழகத்தில் நடந்தது, தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி நடந்தது. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு.  பிஜேபி அல்லது காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு என்னதான் குடைச்சல் கொடுத்தாலும் தமிழகத்தில் மத்திய கட்சிகளை வளர்க்கவே முடியாது. காரணம் ஒருங்கிணைப்பு இல்லை ..ஆளாக்கு வாய்க்கு வந்தபடி பேசி மானம் கெட்டு நிக்கிறது. ஆனால் இந்தமுறை BJP கொஞ்ச நஞ்ச இடங்களையாவது வாங்க மோடி என்ற விளம்பரதாரரை முன்னிறுத்தாமல் இருப்பது ஏன்? ஏன்னா மோடி முகமூடி கிழிஞ்சு 2 வருஷம் ஆகிடுச்சு.இப்போ ஒரு பயலும் மோடி பேச்சை கேட்பதே இல்லை.மோடி பற்றிய கட்டுரை என்றாலே நான் அடுத்த செய்திக்கு போயிருவேன்.அந்த அளவுக்கு நம்பிக்கையின்மையை கொண்டு வந்துட்டாங்க.

உளவுத்துறை அறிக்கையால் ஜெ., அதிர்ச்சி

நாகர்கோவில்;''அ.தி.மு.க., நிலை பற்றி உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையால் ஜெ., அதிர்ச்சி அடைந்துள்ளார்,'' என்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார். குமரி மாவட்டத்தில் அவர் பேசியதாவது:தி.மு.க., என்பது தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. 2011 தேர்தலில் வெற்றி பெற்ற ஜெ., அதன் பின்னர் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு சென்று மக்களை சந்தித்தது உண்டா? ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டும் செல்வார். அது நீலகிரி. கொடநாட்டுக்கு ஓய்வெடுக்க செல்கிறார். தேர்தல் வந்ததும் இப்போது நான்கு , ஐந்து நாட்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கிறார். அதுவும் 20 வேட்பாளர்களை கொத்தடிமை களாக உட்கார வைத்து மூன்றாவது மாடியில் ராணி மங்கம்மா போல நின்று பேசுகிறார். இன்று அ.தி.மு.க., அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் : அதிமுகவின் ரூ.1000 கோடி அனைத்து தொகுதிகளிலும் போய் சேர்ந்துவிட்டது..வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக

Union minister Pon.Radhakrishnan accusing around 1000 crores of rupees will be distributeசென்னை: தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி அளவுக்கு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் எள்ளளவுதான்.

வைக்கோ போட்டி இடமாட்டார் .விட்டு கொடுத்தார்? ..அதிமுக கடம்பூர் செல்வராஜும் நாயக்கர் ஜாதி.......பாவம் திருமா கெஞ்சல்.....

 வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல் நாயக்கர் இன மக்கள் அதிகம் உள்ள கோவில் பட்டியை பாதுகாப்பாக தேர்தெடுத்து ஒதுங்கிய வைகோ,கடம்பூர் ராஜு போன்றவர்கள் நாயக்கர் சாதி . திமுக வேட்பாளருக்கு மற்ற இனத்தவர்,தேவர் வாக்குகள் விழுந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற பரவலான கருத்துதான் வைகோவை போட்டியிடச்செய்யாமல் ஓட வைத்துள்ளது.இதுதான் கோவில் பட்டி தொகுதியில் இன்றைய பர,பர செய்தி.இப்போது திமுக,சாதிக்கலவரம் என்று அறிக்கை வாசித்து தனது மீசையில் மண் ஒட்டாமல் பார்த்துக்கொண்டுள்ளார் வைகோ.
அ தி மு க வின் கருணாஸ் திடீர் என்று வைகோ விற்கு எதிர்ப்பு தெரிவிக்க, வைகோ ஏன் தி மு க வின் மேல் பழியை போட்டு செய்தி அளிக்கிறார்??? . அதிலும் முடிவு கொண்டுவராமல் வேறு ஒரு தொகுதியில் போட்டி இட்டாலும் இடுவேன் என்று குழப்புகிறார்????? என்று தீவிரமாக மிக சாதாரணாமாக யோசித்தால்....கடந்த 3 நாட்களாகவே வரலாறு காணத அளவிற்கு அ தி மு க வினரின் கோடி கணக்கான பணம் பல இடத்தில் பறிமுதல் ஆகும் செய்தியையும், விவாதங்களையும், இணையதள விழிபுணர்வையும் அ தி மு க விற்கு எதிராக அமையாமல் பார்த்து கொள்ளும் முயற்சி அன்றி வேறு ஒன்றுமே இல்லை....இப்போது புரிந்து விட்டதா "B" டீமின் பிளான் பி திட்டம் .இந்த இடைநிலை ஆதிக்க ஜாதிகளால்  அதிகம் பாதிக்கப்படும் திருமா போன்றவரகள் இனியாவது இவர்களின் கபடத்தை  புரிந்து கொள்ள வேண்டும் 

அன்புநாதன்...தங்க சுரங்க காவலாளி... இன்னும் வெளிவராத மர்மங்கள்.

அதிமுக பிரமுகர் அன்புநாதன், அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமிகளில் ஒருவர் என கூறப்படுகிறது.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த, அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கரூர் - ஈரோடு சாலையில் உள்ள கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதில் இருந்து விலகி, புதிய நிதி நிறுவனம் துவங்கினார் அவரது மகன் அன்புநாதன்.இந்த நிலையில், தனது உறவினரும், கரூர் அதிமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நட்பு கிடைத்துத. அது முதல் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றார். பின்பு, திண்டுக்கலில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு செல்லும் போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நட்பு கிடைத்தது. இதனையடுத்து, அவரது பைனாஸ் தரம் கிடுகிடு என உயர்ந்தது. பின்பு, சினிமா பைனான்சியராக வலம் வந்தார். தற்போது, தமிழக அமைச்சர்கள் பலருக்கும் பணம் சப்ளை செய்யும் நபராக வலம் வருகிறார் என்று கூறப்படுகிறது

110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதல்வர் ஜெயலலிதா.....

சட்டப்பேரவையில் கடந்த 5 ஆண்டு களில் 110-வது விதியின் கீழ், தான் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத் தும் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்று முதல் வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் எந்த தொகுதியிலும் திமுக வெற்றிபெறப் போவதில்லை என்பது திமுக தலை வர் கருணாநிதிக்கும், திமுகவினருக் கும் தெரிந்துள்ளது. அதனால்தான், ‘2011 தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகளில் 90 சத வீதம் நிறைவேற்றப்படவில்லை’ என பொய் பிரச்சாரம் செய்து வரு கின்றனர். அளித்த வாக்குறுதி கள் அனைத்தும் நிறைவேற்றப்பட் டுள்ளன என்று பொதுக்கூட்டங் களில் விரிவாக எடுத்துக் கூறிவரு கிறேன்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

உ.பி. அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மாணவர் கோஷ்டிகள் இடையே நேற்று கடும் மோதல் நிகழ்ந்தது. இதில் நடந்த தீ வைப்பு, துப்பாக்கிச் சூட்டிற்கு இருவர் பலியாயினர். இதனால், நிலவும் பதட்டம் காரணமாக மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ளது அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம். மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் சம்பல் மற்றும் ஆசம்கர் பகுதிய சேர்ந்த இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது. இது முற்றியதால் பல்கலை வளாகத்தில் உள்ள மும்தாஜ் எனும் மாணவர்கள் விடுதிக்கு வந்த மாணவர்கள் அங்கு அறை எண் 12-ல் இருக்கும் மோசீன் என்பவரை தாக்கியுள்ளனர். இத்துடன் அவரது அறையை சூறையாடி அதற்கு தீ வைத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் 15 ஆண்டுகள்.....நல்லா யோசிச்சு பாருங்க....போதை தெளியும்.

முதல் சறுக்கல்... மூன்றும் சறுக்கல்... 15 ஆண்டுகள் பதறவைத்த ஜெ.!ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான் காலம் மூன்று முறை வழங்கிய கொடைகளையும் உடைத்துப் போட்டுவிட்டார் ஜெயலலிதா! 1991-ம் ஆண்டு, முதல் வாய்ப்பாக வாய்த்தது முதலமைச்சர் நாற்காலி. அதிகாரத்துக்கு முதல்முறை வருபவர்களுக்கே இருக்கும் இயல்பான குணத்தால் அதை அனுபவித்தாரே தவிர, சாதனைகள் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டமன்ற மகுடத்தை, அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்தார்கள். சட்ட மன்றத்துக்குள் தோழி சசிகலாவை அழைத்துச் சென்றதில் இருந்து சரிவு தொடங்கியது. அந்த மன்றத்துக்குள் சபாநாயகர் ஆசனம் என்பது முதலமைச்சருக்கு எல்லாம் மூத்தது. அதில் தானே உட்கார்ந்து, தன் அருகில் சசிகலாவை உட்காரவைத்து, சபையின் நாயகனையே தனது காலில் விழவைத்து, முதல் கோணல் முற்றிலும் கோணலாகத் தொடங்கிய ஆட்சி அது.

விவசாயிகள் தற்கொலையை கொச்சைப்படுத்துவதா? ஜெ.வுக்கு ராமதாஸ் கண்டனம்!

விகடன்.com சென்னை: குடும்ப பிரச்னைகளால்தான் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் எனக்கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்துவதா? என முதல்வர் ஜெயலலிதாவுக்கு; பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், குடும்பப் பிரச்னைகளால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

JNU கன்னைஹயா குமாரை விமானத்தில் கழுத்தை நெரித்துக் கொல்ல பாஜக பிரமுகர் முயற்சி- சந்தேக நபர் கைது

மும்பை: நடுவானில் மும்பை விமானத்தில் தன்னை பாஜக ஆதரவாளர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சித்ததாக, டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார். இவர் மீது தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதாக தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கன்யாகுமாருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கன்யாகுமாருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. இந்நிலையில், கன்யாகுமாருக்கு எதிரான வீடியோ சாட்சி போலீயானது எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

தோணி வீட்டு நீச்சல் குளத்துக்கு 15000 liters of water daily

Dhoni’s swimming pool at his residence in Ranchi, Jharkhand consume everyday? They say it takes about 15,000 liters of water daily. At present Jharkhand is going through severe water crisis and people aren’t even getting enough drinking water. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி ராஞ்சியில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு சரியாக தண்ணீர் கூட கிடைப்பதில்லை. ஆனால், தோனியின் வீட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.    இவன்தாண்டா  Megalomaniac

சிகிச்சை அளிக்க மறுப்பு: குழந்தை உயிரிழந்ததால் மருத்துவர் சுட்டுக் கொலை உத்தரகாண்ட்

உத்தராகண்ட் மாநிலத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் குழந்தை உயிரிழந்ததை அடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஜஸ்பூரை சேர்ந்தவர் மாணிக் ரத்தி. இவரது ஒன்றரை வயது மகனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தைகள் நல மருத்துவரான சிங், சிகிச்சை அளித்தார். உடல் நிலை தேறியதை அடுத்து குழந்தையை மாணிக் ரத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18 இரவு குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், அருகில் உள்ள பல மருத்து வர்களிடம் மாணிக் ரத்தி காண்பித் துள்ளார். அவர்கள் அனைவரும் கைவிரித்ததால், கடைசியில் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் சிங்கின் வீட்டு கதவை தட்டியுள்ளார். அவரும் குழந்தையை பரிசோதித்துவிட்டு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது என கூறியுள்ளார்.

மாற்றத்தை கொண்டுவரவேண்டும்; ஏமாற்றத்தை கொண்டுவந்துவிட வேண்டாம் : கலைஞர் பேச்சு

சென்னை சைதாப்பேட்டையில் இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் திமுக தலைவர் கலைஞர். சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் - அன்பரசன், வேளச்சேரி -வாகை சந்திரசேகர், விருகம்பாக்கம் - தனசேகரன், சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ் திமுக வேட்பாளர்கள் 5 பேரை அறிமுகம் செய்துவைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘’சென்னையில் வெள்ளம் வந்தபோது அரசு கவலைப்படவில்லை.

தமிழக பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் டங்கமாரி...ஆலுமா...ஆனாலும் கூட்டம் நஹி நஹி...500 ஐ தாண்டவில்லை

தமிழக பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில், குத்தாட்டம் ஏற்பாடு செய்தும், கூட்டம் கூடவில்லை.
பா.ஜ., தேர்தல் அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜனை
ஆதரித்து, நிதின் கட்கரி பிரசாரம் செய்தார்.
அவரது வருகையை முன்னிட்டு, தமிழக போலீசார் மற்றும் மத்திய போலீஸ் படை வீரர்கள் என, ஏராளமானோர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆடம்பரமில்லாத பிரசார மேடையில், 'மாபெரும் பிரசார கூட்டம்' என்ற வாசகம் மட்டுமே பிரம்மாண்டமாக இருந்தது.
கூட்டத்தை கூட்ட, சினிமா பாடலை ஒலிக்க விட்டு, அதற்கு திரைப்பட கலைஞர்களும் குத்தாட்டம் போட்டனர். 'டங்கா மாரி...' முதல், 'தெறி' வரை சினிமா பாடலை தெறிக்க விட்டும், கூடியவர்களின் எண்ணிக்கை, 500ஐ தாண்டவில்லை. - நமது நிருபர் - தினமலர்.com>

18 அதிகாரிகளை இடம்மாற்றி முக்கியமானவர்களை தப்ப விட்ட தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக 4 கலெக்டர்கள், 5 எஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள் உள்பட 18 அதிகாரிகளை அதிரடியாக  மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. புகார்களில் சிக்கிய முக்கிய அதிகாரிகளை தப்ப விட்டதாக எதிர்கட்சிகள்  குற்றம்சாட்டியுள்ளன. தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் செயல்படுவதாக  தேர்தல் ஆணையத்தில் திமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புகார் செய்தன. அதேபோல், ஆம்புலன்ஸ்,  போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில்தான் பணம் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆனால், இந்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் ெதாடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

அனல்பறக்கும் பிரசார கூட்டத்தில் உயிரோடு இருப்பது எப்படி?...அனல் டுடோரியல்ஸ்...




மக்கழே நான் ' தவ வாழ்வு ' வாழலாம்னு இருக்கேன்..... அடிக்கிர வெவிலுக்கு 5 a/c , ரெண்டு air cooler... வச்சாத்தான், உசுரோட இருக்க முடியும் போல..... ;இந்த பாவம் யார் கணக்கில்வரும்? –பேஸ்புக்கில் பிரபலமாகும் புதிர் கதை
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இறந்துபோனவர்களின் பாவம் யார் கணக்கில் சேரும் என்றொரு கதை பேஸ்புக்கில் பரபரப்பாக அடிபடுகிறது. >ரங்கநாதன் கணேஷ் என்பவரின் பெயரில் வெளிவந்துள்ள அந்தக் கதை இதோ...எமதர்மனின் அலுவலகம்... சித்திரகுப்தன் சற்றே குழப்பத்துடன் அமர்ந்திருக்கிறார். இதைக்கண்ட எமன் வினவுகிறார்...

இளங்கோவன்:கரூர் மாவட்டத்தை போல் எல்லா மாவட்டங்களிலும் பணத்தை அதிமுகவினர் பதுக்கி வைத்துள்ளார்கள்

கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழகத்தில் ராகுல்காந்தி 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போலி நாடகம் காங்கிரசில் இருந்து சிறிது நாட்களுக்கு வெளியில் சென்றிருந்த த.மா.கா. தோழர்கள் மீண்டும் காங்கிரசுக்கு வந்திருக்கிறார்கள். இந்த வீடு(காங்கிரஸ் அலுவலகம்) அவர்களுக்கும் சொந்தமான வீடு தான். ஆகவே இந்த வீட்டுக்கு வந்துள்ள அவர்களை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக காங்கிரஸ் என்பது தமிழகத்தில் ஒன்றே ஒன்று தான் இருக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. மற்றவர்களெல்லாம் காங்கிரஸ் பெயரை வைத்துக்கொண்டு போலி நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நல்ல தேசிய உள்ளங்கள் மீண்டும் தாய்க்கழகத்தில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வங்காளதேச பல்கலைக்கழக பேராசிரியர் படுகொலை.. University English professor hacked to death


வங்காளதேசத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தீவிரவாதிகள் கை வரிசை சந்தேகிக்கப்படுகிறது. தொடர் படுகொலைகள் வங்காளதேசம், முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்ட நாடாக இருந்தபோதும், மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. ஆனால் அந்த நாட்டில் சமீப காலமாக மதச்சார்பற்ற கருத்துகளை வலைத்தளங்களில் எழுதுகிற கட்டுரையாளர்கள், சிறுபான்மையினர், வெளிநாட்டினர் படுகொலை செய்யப்பட்டு வருவது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடைசியாக கடந்த 6-ந் தேதி டாக்கா ஜெகநாத் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவரும், வலைத்தள கட்டுரையாளருமான நஜிமுதீன் சமத் (வயது 28) என்பவர், பல்கலைக்கழக வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை 3 பேர் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்து விட்டு தப்பினர்.

அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய்,108' ஆம்புலன்சில்பணம் .... அம்மா என்றால் அன்பு..

தினமலர்.com :தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கரூர் பைனான்சியர் வீட்டில் பதுக்கிய, 250 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் கமிஷன் புகாரில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தேர்தல் கமிஷன் உத்தரவில், நேற்று ஒரே நாளில், 45 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில், பண பட்டுவாடாவை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், வருமான வரித்துறை துணை இயக்குனர் தலைமையில், ஒரு உதவி கமிஷனர், ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம்பெற்ற படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சில வாரங்களாக, பண நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். கரூரில், அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.'இந்தச் சோதனையில், 10.30 லட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று, ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. 'கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவு பணம்' என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, 'அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்' என, தகவல்கள் கிடைத்தன.