திங்கள், 29 பிப்ரவரி, 2016

கனிமொழி; facebook கில் கலைஞர் மீதான மோசமான கமெண்ட்டுகளை நீக்கவேணாம் என்று கேட்டுகொண்டார்

சென்னை: தனது முகநுாலில் வந்த கீழ்த்தரமான விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டுவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக கனிமொழி கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கு சமூக வலைத்தளங்கள் பங்களிப்பு என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி,  சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி, கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “தமிழக மக்கள் இன்று சுயமரியாதையோடு வாழ பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம். ஆனால் திராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இது தி.மு.க வை அழிக்க நினைப்பவர்கள் செய்யும் பிரச்சாரம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. கூகுள் செய்து பார்த்தாலே இது தெரிந்து விடும்.

குமரி முத்து ஒரு போராளி கலைஞர்...சுயமரியாதையாளர், சமுகநீதியாளர்....நடிகர் சங்கத்தின் முதல் களப்பலி இவர்தான்.


கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது. அன்றைய தினம் அதே கிராமத்தில் மற்றொரு நாடகமும் நடந்தது. அதனை பார்க்க பாவைக்கூத்துக் குழுவும் அமர்ந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்காக திரைக்குப் பின்னாலிருந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒருவர் குரல் கொடுத்துப் பாடினார் . அவர் பாடிய முறை அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் குரல் கொடுத்த நடிகரை அழைத்து பாராட்டிய அவர்கள், அவரையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர்.அப்போது  நாடக உலகுக்கும்,  பின்னாளில் திரையுலகுக்கும் திறமையான நடிகர் ஒருவர் கிடைத்தார். ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றி நாடக அனுபவம்பெற்ற அவர்தான் பின்னாளில் வெடிச்சிரிப்பால் ரசிகர்களை அதிர வைத்த குமரி முத்துவாக மாறினார்.தனது வாழ்நாள் எல்லாம் திமுக பிரசாரகராகவே இருந்தார்.பதவி சுகம் அனுபவித்த பலரும் எங்கெங்கோ ஓடிய பொழுதும் இவர் இறுதிவரை கலைஞரின் தொண்டராகவே இருந்தார்

JNU மாணவர்களுடன் மார்ச் 3 சென்னை அசுரர் ஆர்ப்பாட்டம் !

rsyf-protest-for-jnu-2பொய்ப்பிரச்சாரம், தேசத்துரோக குற்றச்சாட்டு, தாக்குதல் என ஜே.என்.யு வை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் வெறியாட்டம் போட்டு வருகிறது. இவற்றை எல்லாம் கண்டு மாணவர்கள் அஞ்சவில்லை. கடந்த 18 ந்தேதி 20,000 மாணவர்கள் திரண்டு நடத்திய ஊர்வலம் டெல்லியை உலுக்கியெடுத்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள். பி.சாய்நாத் உள்ளிட்ட அறிவுத்துறையினரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற நோம் சோம்ஸ்கியும், நோபல் பரிசு வென்ற பல அறிஞர்களும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உலகம் சுற்றும் வாலிபனான மோடியை ஆதரிக்க உலகத்தில் ஒரு ஆள் இல்லை. உள்ளூரிலும் ஒரு கட்சி இல்லை.

RSS-க்கு ஆப்பு ! இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக..


வின்.டிவி-யின் விவாத நிகழ்ச்சியில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் கலந்து கொண்ட வீடியோ தொகுப்பு இது. வின் டி.வி நெறியாளராக இருக்கும் தம்பி நிச்சயமாக அம்பிதான் எனுமளவுக்கு பாசிசக் கருத்துக்களை பத்தாம் வகுப்பிலேயே உருப்போட்டவர் போலும். மாணவர்களுக்கு அரசியல் கூடாது, அப்சல் குருவை ஆதரித்தால் தூக்கில் போடுவது சரி – விட்டால் நானே போடுவேன், கண்ணையா குமாரை கைது செய்தது சரி, தேச துரோக முழக்கங்கள் போட்டார்கள் என்பதாகவே முதலுரை, இடையுரை, முடிவுரை என எல்லா உரைகளிலும் முழங்கினார்.
இருப்பினும் தோழர் கணேசன் இடைமறிப்பை போதுமான அளவுக்கு அனுமதித்தார் அல்லது அனுமதிக்கப்பட்டார் என்பதையும் நாம் நன்றியுடன் கூற வேண்டும். சங்க வானரப்படை சார்பாக வந்த நரசிம்மன் என்பவர் நெற்றியில் நாமமும், பேச்சில் விசமுமாக இருந்தார் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி பொதுசின்னம்.....தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது

நாம் தமிழர் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு இயக்குநரும் நடிகருமான சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மெழுவர்த்தி சின்னத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த 26ஆம் தேதி ஆணையம் பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி எனும் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சிக்கு பொதுச்சின்னமாக வழங்கப்படுகிறது; வேறு எந்த வேட்பாளருக்கும் இந்த சின்னத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒதுக்கிவிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மீண்டும் மீண்டும் பொய்சொல்லும் ஸ்மிருதி இராணி.....அம்பலப்படுத்திய மருத்துவர்

ரோஹித் வெமுலாவை பரிசோதிக்க மருத்துவர்களை சக மாணவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் தற்கொலை நடந்த அறைக்குள் போலீசாரை அனுமதிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது தவறானது என்று பல்கலைக்கழக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜஸ்ரீ மல்பாத் கூறியுள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.அப்போது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'ரோஹித் வெமுலா தற்கொலை முயற்சி மேற்கொண்ட பின் அவரைப் பரிசோதிக்க மருத்துவர்களை மாணவர்கள் அனுமதிக்கவில்லை என்றும், உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் ரோஹித்தின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் கூறினார்.

6.46 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: ராஜேஷ் லக்கானி

வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். >வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர்கள், இறந்தவர்கள் பெயர்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.>இதைதைத் தொடர்ந்து. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் உத்தரவின்பேரில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டன.>இந்த பணி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

9 பேர் மீது தேச துரோக வழக்கு..ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால்,ஆனந்த் சர்மா, அஜய் மக்கான், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, கேசி தியாகி, கன்னையா குமார், உமர் காலித்

ஐதராபாத்: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 9 பேர் மீது ஐதராபாத்தில் தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், அப்சல் குரு நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை எழுப்பியது. இங்கு சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டார். ஐகோர்ட் உத்தரவுப்படி சில மாணவர்கள் போலீசில் சரணடைந்தனர். மாணவர்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இடது சாரி கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

நகைசுவை நடிகர் குமரிமுத்து காலமானார்.

நகைசுவை நடிகர் குமரிமுத்து காலமானார்.உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை காலமானார். நடிகர் குமரி முத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். தவிர தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தார். வித்தியாசமான சிரிப்பினால் மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர்.ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். nakkheeran,in

மும்பை சேரி வறுமையில் ஒரு தலித் சிறுமி இன்று 112 மில்லியன் டாலர்கள் டேர்ன் ஓவர் கம்பனிக்கு CEO !


வறுமையின் கடுமை,
தீண்டாமைக் கொடுமை,
பாலியல் சித்ரவதை,
தற்கொலை முயற்சி
இத்தனை அவலங்களுக்கும் 12 வயதிலேயே ஆளான அந்த பரிதாபச் சிறுமி... இன்று ஒரு பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மிகப் பெரிய கோடீஸ்வரர். இவரை நிஜ ஸ்லம்டாக் மில்லியனர் என்று வர்ணிக்கிறது உலகப் புகழ் ‘டைம்ஸ்’ பத்திரிகை. இவருடைய நிறுவனத்தின் பெயர் மும்பையில் இரு சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
கல்பனா சரோஜ்... வறுமையோடு மல்லுக்கட்டும் மிகச் சிறிய தலித் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் சக மாணவர்களாலும் வெளியே தன் ஊரைச் சேர்ந்த உயர் ஜாதியினராலும் பல கொடுமைகளுக்கும் ஆளானார்.

குட்டிகதையும் குட்டுக்களும் : கலைஞருக்கு அம்மா சொன்னதும் அம்மாவுக்கு ஏனையோர் சொல்வதும்


சென்னை:அ.தி.மு.க., மட்டுமே நாட்டை ஆளத் தகுதியான கட்சி என்பதை குறிக்கும் வகையில், தி.மு.க., தலைவரை, மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா கதை கூறி அசத்தினார்.
சென்னை, ஆர்.கே.நகர்., சட்டசபை தொகுதியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா கூறிய கதை:ஒரு ஊரில் அரசர் ஒருவர், தனக்கு அடுத்தபடியாக, நாட்டை ஆள தகுதியான நபரை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்கென்று, சில போட்டிகளை வைத்தார். அதில் பலர் கலந்து கொண்டனர்; கடைசியாக, இருவர் மட்டுமே மிஞ்சினர்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

சசிகலா வசம் ஐவரணியின் பொறுப்புக்கள்....என்னதான் குனிஞ்சு குனிச்சு கும்பிட்டாலும் நேரம் வந்துடுச்சில்ல?

ஜெ.வோட பிறந்தநாளை வழக்கம்போல அ.தி.மு.கவினர் அமர்க்களப்படுத்தியதைக் கவனிச்சீங்களா?'"பச்சைக் குத்துவது, மண்சோறு சாப்பிடுவது, நீச்சல்குளத்துல மிதப்பது, பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுட்டு அங்கே விழா கொண்டாடுவது, பாலத்துலே பேனர் வச்சி போக்குவரத்தை முடக்கியதுன்னு ஏராளமான கூத்துகளை மாநிலமே பார்த்ததே! ஜெ.கிட்டே பேரு வாங்கணும்னு மந்திரிகளிலிருந்து அடிமட்ட நிர்வாகிகள் வரை இப்படித்தானே செயல்படுறாங்க!''
""அப்படியெல்லாம் செயல்பட்டும்கூட பவர்ஃபுல்லான ஐவரணி அமைச்சர்களே ஆடிப்போயிருக்காங்க. விவரமா சொல்றேங்க தலைவரே.. அ.தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் ரெடியானதையும், அதை மதுரை மீனாட்சியம்மன், பழனி முருகன் கோயில்ன்னு சசிகலா, தன் அண்ணன் மகள் பிரபாவதி சகிதம் எடுத்துக்கிட்டுப் போய், சிறப்பு பூஜை பண்ணியதையும் ஏற்கனவே நாம பேசியிருக்கோம்.  அந்தப் பட்டியலில் அப்பப்ப சில திருத்தங்களை செய்றாங்களாம். பிப்ரவரி 26-ந் தேதியன்னைக்கு பட்டியலோடு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கும் சசி, பிரபாவதி போய் மீண்டும் சிறப்பு பூஜை பண்ணியிருக்காங்க.

காக்க முட்டை மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை!... ரீதிகா சிங் விஜய் சேதுபதி

காக்கா முட்டை மாதிரியான மனதிற்கு நெருக்கமான எதார்த்தமான படத்தை இயக்கிய மணிகண்டனின் திரைப்படத்தில், எதார்த்த நடிகரான விஜய் சேதுபதி நடித்தால் எப்படி இருக்கும்? இறுதிச்சுற்று மாதிரியான ஜனரஞ்சகமான படத்தில் எதார்த்த நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும்? இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகிறது ஆண்டவன் கட்டளை.

இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும்

raja1_musicவே.மதிமாறன் : 25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம், ஆயிரம், 5 நூறு ரூபாய்களில் டிக்கெட். யாருக்கோ நிதி உதவிக்காக இவ்வளவு கட்டணம் போல. அந்த ‘யாருக்கோ’தான் யாருன்னு தெரியல.
பாவம் ரசிகர்கள். தீவிர ரசிகர்களாக இருந்தால் இப்படிதான் அபராதம் கட்டவேண்டும் போலும். கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தார்கள் திடல் முழுக்க.
இவ்வளவு விலை வைத்த பிறகும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா ஒருவருக்காக மட்டும்தான் நடக்கும்.

மாயாவதி: ஸ்மிருதி இராணியின் மகிஷாசுரன் பேச்சு பழகுடிமக்களை ஆத்திரமூட்டுவதாகும்

புதுடில்லி,:பார்லிமென்ட் விவாதத்தின்போது, மகிசாசுரன் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியவற்றை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.,வுக்கு எதிராக பயன்படுத்த, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை குறித்து, ராஜ்யசபாவில், கடந்த மூன்று நாட்களாக நடந்த விவாதத்தின்போது, மாயாவதியும், ஸ்மிருதி இரானியும் நேருக்கு நேர், கடுமையாக விவாதம் செய்தனர். 'ஐதராபாத் பல்கலை மாணவர் தலித் என்பதால்தான் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்கொலைக்கு துாண்டியுள்ளனர்' என, மாயாவதி கடுமையாக குற்றம் சாட்டினார்.

கனிமொழியை கண்காணிக்க தமிழக உளவுத்துறைக்கு உத்தரவு

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க, கட்சினருக்கும்; உளவுத் துறையினருக்கும் ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத் தில், 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மூலம், தமிழகம் முழுவதும், பரபரப்பாக பேசப்பட்ட கனிமொழி, தன் மீதான வழக்கு பிரச்னைகளுக்குப் பின், அமைதியானார். வழக்கில் இருந்து ஜாமினில் வெளி வந்ததும், கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தவர், மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். மீண்டும், ராஜ்ய சபா எம்.பி., யானார். தொடர்ச்சியாக, கட்சியின் மகளிர் அணி செயலராக நியமிக்கப்பட்டதோடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். : ராஜ்ய சபாவில் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிற அவர்களின் நன்மைகளுக்காகப் பேசுகிற  எம் பி கனிமொழி என்பது தெரியாதா? அங்கிருக்கிற பிற தமிழக அதிமுக எம்பிக்கள் அங்கும் அம்மா புகழ் பாடுவதை தவிர வேறு என்ன செய்திருக்கிறார்கள்?  எத்தனை பொய்குற்றச்சாட்டு  சுமத்தினாலும் அத்தனையையம் உடைத்து எறிந்து கொண்டு வருகிறார் கனிமொழி என்பது பலருக்கும் வருத்தம் என்பது புரியாதா? 

இளங்கோவன்:விருப்பு மனு அளித்தவர்களுக்கு மட்டுமே சீட்....சிதம்பரம் தங்கவேலு கோஷ்டி அதிர்ச்சி? ராகுல் தீர்மானம்?

காங்கிரஸ் சார்பில் விருப்பமனு அளித்தவர்கள் தவிர வேறு யாருக்கும் சீட் தர முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.>வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது. அந்த நேர்காணலில் சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆகியோரின் ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.ஆனால் தங்களுக்கு சீட் கண்டிப்பாக உண்டு என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் விருப்பமனு கொடுத்தவர்கள் தவிர, வேறு யாருக்கும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவருக்கு சீட் தர முடியாது என்று என்று இளங்கோவன் கூறிவிட்டார்.

மும்பை 14 குடும்ப உறவினர்களை கொன்றவர் தானும் தற்கொலை..Chartered Accountat kills 14 of his family, commits suicide


மும்பை :ஒருவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் 14 பேர்
உறங்கிக்கொண்டிருக்கும்போது, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மும்பை நகருக்கு அருகிலுள்ள தானேயில் இடம்பெற்றுள்ளது.;ஹஸ்னின் வரேக்கார் என்ற 35 வயதுடைய நபரே, இவ்வாறு தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்திக் குத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறார்கள்.
வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் உதவிக்கோரி அலறும் சத்தம் கேட்ட அயலவர்கள், தம்மை அழைத்து தகவல் வழங்கினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையாளின் சகோதரியான இந்தப் பெண் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
இவர்களை கொலை செய்தவதற்கு முன்னர் வீட்டின் அனைத்து கதவுகளையும் கொலையாளி மூடியிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உறவினர்களை கொலை செய்தததன் பின்னர், அந்த நபர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
சொத்து விவகாரமே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் தாம் நம்புவதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.bbc.tamil.com

தேசபக்த வேஷம் போடும் RSS கூட்டம் : நீங்கள் தேசவிரோதியா? புதிய வியாதி?

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் துவங்கி விட்டது. யார் யாரோடு கூட்டணி,எந்த கட்சி ஜெயிக்கும் என்ற கவலையில் வட இந்தியாவில் நடந்துவரும் பிரச்சனைகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை...
இந்தியாவில் புகழ் பெற்ற ஜவர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சிலரை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தூண்டுதலால் தேச தூரோகிகளாக குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இதற்கு எதிராக போராடிய மாணவர்களை  போலிஸ் மற்றும் காவிக்கூட்டமும் கண்முடித்தனமாக தாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு  ஆதரவாக ராகுல்காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் போராட்டத்தில் கலந்து கொணாடார்கள்.

கனடா இளம்பெண் ஜெசி சண்டிகாரில் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவின் கோரிக்கைக்கு கனடா நீதிமன்றம் மறுப்பு

February 26, 2016: இந்திய போலீஸ் மற்றும் நீதித்துறை மனித உரிமைகளை கடைப்பிடிக்க தவறிவிடும் என்ற அடிப்படையில் ஜெசியை கொலைசெய்த ஜெஸியின் தாயையும் சித்தப்பாவையும் இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று வான்கூவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தனது மகளையே ஜாதிக்காக கொலை செய்வித்த தாய்க்கு கூட மனித உரிமையை இந்தியா மதிக்காது என்ற ரீதியில் தீர்பளித்தமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது
கனடாவில் வசித்த தனது மகள் பஞ்சாபில் ரிக்சா ஓட்டுனரை காதலித்து கல்யாணம் செய்தமைக்காக அவரை குத்திக்கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் அந்த பெண்ணின் தாயாரையும் சிறிய தந்தையும் கனடாவில் இருந்து நாடு கடத்த பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் சென்ற ஆடனு உத்தரவு பிறப்பித்தது.
Jaswinder Sidhu Indiaகடந்த 2000ஆண்டில் ஜெசி என்று அழைக்கப்படும் ஜஸ்விந்தர் சிந்து என்ற இளம்பெண்ணை அவரது தாயாரான மால்கிட் காவுர் சிந்து மற்றும் அவரது சிறிய தந்தையான சுருஜித்சிங் பாதுசா ஆகிய இருவரும் அவரை வெட்டிக்கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களை நாடு கடத்துமாறு இந்திய பொலிஸாா் விடுத்த வேண்டுகோளையடுத்து கனேடிய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கண்ஹையா குமார்: வழகுரைஞர்கள் போலீசார் முன்னிலையிலேயே என்னை தாக்கினார்கள்

தினமணி.com :தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது போலீஸார் முன்னிலையில் தனக்கு காயம் ஏற்படும் அளவுக்கு வழக்குரைஞர்கள் குழு தாக்குதல் நடத்தியது என்று விசாரணைக் குழுவிடம் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் முறையீடு செய்தார். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதி அஃப்சல் குருவை நினைவுகூர்ந்து ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் கடந்த 9-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அப்போது தேசத்துக்கு விரோதமாக கோஷமிடப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அமெரிக்கா 14 வயது மாணவனுக்கு 65 வருட சிறை....ஆசிரியை பாலியல் வன்முறை, கொலை...


அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவரை பள்ளி கழிவறையில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த 14 வயது மாணவனுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டன்வெர்ஸ் உயர் நிலைப்பள்ளியில் கொலீன் ரிட்சர்(அப்போதைய வயது 24) என்ற பெண் கணக்கு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதே வகுப்பில் ஃபிலிப் சிஸ்ம்(அப்போதைய வயது 14) என்ற மாணவனும் பயின்று வந்துள்ளான்.
மாணவனுக்கு இளம் ஆசிரியரின் மீது எப்போதும் ஒரு மோகம் இருந்து வந்துள்ளது. அவரை எப்படியாவது தனது ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என சரியான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்துள்ளான்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி அந்த வாய்ப்பு மாணவனுக்கு அமைந்துள்ளது.
பள்ளி வகுப்பை முடித்த ஆசிரியை அங்குள்ள கழிவறை நோக்கி சென்றுள்ளார். ஆசிரியருக்கு தெரியாமல், மாணவனும் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.  அடடா இந்த சின்னஞ்சிறுவன்  இங்கே பிறந்திருந்தால் இவனுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும்,  கடையும் வைத்து கொடுத்திருப்போம்ல .....

காஞ்சி சங்கராச்சாரிகள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தறுப்பு யுத்தம்...ஆயிரக்கணக்கான சொத்துக்கள்...காவிகளுக்கு ஏன் சொத்துக்கள்?

ஆ று மாதங்களாக அமுங்கிக்கிடந்த காஞ்சி சங்கர மட அதிகாரப் போட்டி மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்த சங்கரமடத்துக்குச் சொந்தமாக இந்தியா முழுவதும் பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் ஜெயேந்திரருக்கு மட்டுமே உண்டு. இளையவரான விஜயேந்திரருக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுக்க ஜெயேந்திரர் விரும்பவில்லை. மடத்தின் அதிகாரத்தை ஜெயேந்திரரிடமிருந்து கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜயேந்திரர்.ஆறு மாதங்களுக்கு முன்பு கடுமையான உடல் நல பாதிப்புகளாலும் மன உளைச்சல்களாலும் மும்பை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆனார் ஜெயேந்திரர். அப்போது,  ஜெயேந்திரருக்கு மனநிலை சரியில்லை என்பதாக சான்றிதழ் கொடுக்க வலியுறுத்தி மருத்துவமனை நிர்வாகத்துக்கு விஜயேந்திரர் தரப்பு நெருக்கடி தந்தது.  அப்படி சான்றிதழ் பெறுவதன் மூலம், ஜெயேந்திரரிடமிருந்து அதிகாரத்தை முறைப்படி மாற்றியமைக்க முடியும் என்கிற திட்டத்தில் காய்களை நகர்த்தினர்.

தேமுதிக ஏரியா விற்பனை மந்தம்...மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்து கூட்டணிகளை உறுதி செய்ய தயார் ஆகிவருகின்றன. வேட்பாளர் நேர்காணல், சீட் பேரம் என தேர்தல் களம் படுஜோரக உள்ளது. சில கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. சட்டசபையில் எத்தனை சீட்டுக்கள் என்பதைவிட எவ்வளவு சூட்கேசுகள் என்பதில்தான் பெரிய கருத்து வேறுபாடு உள்ளதாக தொழிலதிபர்கள்  மூலம் தெரியவருகிறது. ஆரம்பத்தில் நல்ல விலைக்கு பேசப்பட்ட ஏரியாக்கள் எல்லாம் தற்போது அடிமாட்டு விலைக்கே பெரிய கட்சிகளும் பாஜகவும் பேரம் பேசுவதால் காந்தும் பிரேமாவும் அப்செட்...எல்லாம் சு.சாமியின் பேச்சை கேட்டு ரிலீஸ் தேதியை தள்ளிவச்சதால வந்த வினை..போதாக்குறைக்கு மத்திய அமைச்சு ராஜ்யசபா சீட்டு போன்ற ஏகப்பட்ட டிமாண்டுகளை வைக்க போக சாமி கோஷ்டி அதிமுக பக்கம் சாய்கிறது. ஏதாவது கிடைக்கிறதை வாங்கி கொண்டு சேரலாம் என்றாலும் அதுவும் ரொம்ப குறைஞ்ச விலைக்கு கேக்கிராய்ங்கான்னு பிரேமா உணர்ச்சி வசப்படுகிறாங்க அதாய்ன் ஜெயலலிதாவை அந்த காச்சு காச்சினாங்க...ஆனா அதுவும் பேக் பயராகிடுச்சு. கோபாலபுரம் ரசிகலியாம்...    

மோடி Gang : ஹிட்லரின் நாஜிகளைபோலவே தேசபக்தி...தேசியக்கொடி...உணர்ச்சி...நெருப்பு பேச்சுகள்


ஓவியம்: புனித் கவுர் பர்ணாலாtamil.thehindu.com:ஓவியம்: புனித் கவுர் பர்ணாலா ஊடக-தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு அத்தியாயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டு நடப்பு, இதழியல் போன்றவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய நிகழ்வு இது.
இந்த நிகழ்வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு பின்னணியை முதலில் பார்ப்போம். பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் ஒரு தேசத்தின் நான்காவது தூணாக (Fourth estate) கருதப்படுகின்றன. ஒரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அந்த நாட்டின் மக்களுக்கு அறிவிப்பவை இந்த ஊடகங்கள்தான். இது மாபெரும் ஜனநாயகக் கடமை. ஆனால், இந்தக் கடமையின் முக்கியத்துவத்தை ஊடகத்தினர் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியே. உண்மையைக் காட்ட வேண்டியது மட்டுமே ஊடகங்களின் பணி. தீர்ப்பு எழுதுவது அல்ல.