செவ்வாய், 2 டிசம்பர், 2014

நவம்பர் மாதம் மட்டும் 120 விவசாயிகள் தற்கொலை:மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவு தற்கொலைகள்

கடும் வறட்சி, காலம் பொய்த்துப் பெய்யும் மழை காரணமாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை விற்று, கல்லுடைக்கும் தினக்கூலிகளாக மாறிய விவசாயக் குடும்பம். | படம்: ஷுமோஜித் பேனர்ஜி.
 மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் கடன் தொல்லை தாங்க முடியாமல் 120 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சமூக தொண்டர் கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விதர்பா மற்றும் மராத்வாதா பகுதியில் இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளதாக, விதர்பா ஜன் ஆந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி தெரிவித்தார்.  ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை விற்று, கல்லுடைக்கும் தினக்கூலிகளாக மாறிய விவசாயக் குடும்பம்.

ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கு முடிவு! 2 கோடி மட்டுமே அபராதம் ! பின்னணியில்...?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறிய வழக்கில், அபராத தொகை, வருமான வரி தொகை, வழக்கு செலவு தொகை என, இரண்டு கோடி ரூபாயை முழுமையாக செலுத்தி விட்டதாக, சென்னை, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.< முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர், பங்குதாரர்களாக இருந்த, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், 1991 - 92, 92 - 93ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா, சசிகலா, தனிப்பட்ட முறையில், 1993 - 94ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை.இவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியதற்காக, 1996ல், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை வழக்கு தொடுத்தது. அதெப்படி எந்த லாபமும் இல்லாத நிறுவனத்திற்கு வரி கட்டுவார்கள் ....அப்ப இந்த இரண்டு கோடிக்கும் கணக்கு காட்ட வேண்டுமே

திங்கள், 1 டிசம்பர், 2014

லிங்கா ! தமிழ் ரசிகர்களின் தலையில் அதிக விலையுள்ள மிளாகாய்

ரூ.150, ரூ.200க்கு டிக்கெட் விற்கப்பட்டாலும் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் ரூ.50 என்று தான் இருக்கும். இல்லாவிட்டால் டிக்கெட்டில் விலையே இருக்காது.
 
மிழகத்தின் ஹாட் டாக் இப்போது 'லிங்கா' தான். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் 'லிங்கா' திரைப்படத்தின் ஆடியோவின் உரிமை இத்தனை கோடி.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடி... தொலைக்காட்சி உரிமை இத்தனை என கோடி...என  இந்த படத்தின் வியாபாரங்கள் மக்களிடம் முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு 'லிங்கா' படம் விற்றுவிட்டதாக சுவாரஸ்யத்துடன் பேசிவருகின்றோம். ஆனால் அது கடைசியில் படம் பார்க்க செல்பவர்களின் தலையில்தான் விடியும் என்பதை வசதியாய் மறந்து விட்டோம். தமிழகத்தின் சகல மீடியாக்களும் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்து லிங்கா படத்தின்டிக்கெட்விலையைஉயர்த்துகிறார்கள்.கோடி கோடியாக  பேசப்படும்  லின்காவின் விலைஎல்லாம் சாதாரண ரசிகர்கள் பார்க்கும் டிக்கெட்டின் விலையை உயர்த்த கட்டி எழுப்பப்படும் பலூன் என்பதை மறக்கவேண்டாம் , இதற்காகத்தான் இவர் அரசியல் ஆசை என்ற மசாலைவையும் தூவுகிறார். இவர் ஒரு காரிய கிறுக்கன் தமிழ் ரசிக மகா ஜனங்களே தாராளமாக ஏமாறுங்க. சொன்னா கேக்கவா போறீங்க?

துடிக்கும் ராஜா?கடிக்கும் தமிழிசை – வீபிடணர் வைகோவின் பதில் என்ன?

பாஜகவினர் தாறுமாறாகப் பேசி வரும் நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டாமல் உள்ளார் வைகோ. அதேசமயம், மதிமுகவினர் கூட்டணிக்குக் குட் பை சொல்லத் தயாராகி விட்டனர். விரைவில் வைகோவும் அறிவிப்பார் என்று மதிமுகவினர் கூறுகிறார்கள். மீண்டும் ஒரு கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முதல் ஆளாக பாஜக கூட்டணியில் இணைந்தவர் வைகோ. இது பாஜகவினருக்கு பெரும் ஊக்கம் அளித்தது. ஆனால் அடுத்தடுத்து தேமுதிக, பாமக என முக்கியக் கட்சிகள் வந்ததால் வைகோவை சற்றே ஓரம் கட்ட ஆரம்பித்தது பாஜக. இது வைகோவை கோபத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அமைதி காத்தார். தேமுதிக, பாமகவுக்கெல்லாம் சீட் ஒதுக்கிக் கொடுத்த பின்னர்தான் மதிமுக பக்கம் திரும்பிப் பார்த்தது பாஜக. அதையும் கூட வைகோ பொறுத்துக் கொண்டார். ஈழத் தமிழர் விவகாரத்தில் வாஜ்பாயைப் போல மோடி ஆக்கப்பூர்வமாக செயல்படுவார், ராஜபக்சேவை ஒடுக்க முயற்சிப்பார், இலங்கையைக் கண்டிப்பார் என்றெல்லாம் நினைத்திருந்தார் வைகோ. அடேங்கப்பா நினைத்திருந்தார்? நினைத்திருப்பதாக நடித்தார்! ஆனால் எல்லோரையும் நம்பவைத்தார் இந்த அரசியல் நடிகர் திலகம் வை.கோபாலசாமி என்பதே உண்மை.தமிழக அரசியலில் இவரை ஒரு அப்பாவி என்று பலரும் இன்னும் நம்புகிறார்களே?  

காவியத் தலைவன் ! எந்த ஃப்ரேமிலும் காவியத்தலைவனை .....

ஜெயமோகன் காவியத்தலைவனில் எப்படியெல்லாம் தடுமாறியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே சினிமாவில் வசனங்களால் அனல் கக்கிய அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், திருவாரூர் தங்கராசும் எத்தனை மகத்தான எழுத்தாளுமைகள் என்பதை உணரமுடிகிறது.ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணன், குரு நாசரிடம் கோபித்துக் கொண்டு கிளம்புகிறார். பிருத்விராஜை நடித்துக் காட்டும்படி நாசர் சொல்கிறார். பொன்வண்ணனைவிட பிரமாதமாக பிருத்வி நடிக்கிறார். அடுத்து சித்தார்த்தையும் நடித்துக்காட்ட சொல்கிறார். நம்மூர் நாடக மரபு நடிப்பினை உடைத்து, லேசான மேற்கத்திய தாக்கத்தோடு சித்தார்த் செய்ய காவியத் தலைவன் உருவாகிறான் என்று நம்பிக்கை பிறக்கிறது.

அமெரிக்க ஆள் கடத்தலும் விசா மோசடியும் !

கோபி முத்துபெரியசாமி
கோபி முத்துபெரியசாமி மதுரையைச் சேர்ந்தவர். கணினி மென்பெருள் வல்லுனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழையும் பலரையும் போல் அமெரிக்க கனவுகளைக் கொண்டவர். அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், அங்கே ஒரு நல்ல வேலையையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளும் கனவுகள் அவருக்கு இருந்தது. அமெரிக்காவில் வேலை தேடி வந்த கோபிக்கு சாப்டெக் என்கிற நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது.
கோபி முத்துபெரியசாமி
2007-ம் ஆண்டு சாப்டெக் நிறுவனத்தில் வேலை கிடைத்து அமெரிக்கா சென்றுள்ளார் கோபி. சாப்டெக் நிறுவனத்தில் வேலை என்றால் அது சாப்டெக் நிறுவன வேலையல்ல – குழப்பமாக இருக்கிறதா? சாப்டெக் கிருஷ்ண குமார் என்பவரால் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் ஒரு ’ஆள்பிடி’ நிறுவனம்.

மதிமாறன் : இந்த வசனகர்த்தாவுக்கு வசனம் எழுதத் தெரியல? ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் தெளிவாக...

கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன் வே.மதிமாறன் ‘கடல்’ படத்திற்குப் பிறகு, அதுபோலவே.. வசனகர்த்தா ‘ஜெயமோகன்’ தன் வேலையை காட்டியிருக்கிறார் போல..
காவியத்தலைவனுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்'
 வசனகர்த்தா ஜெயமோகன் எழுதிய பலப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.
கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவும் இல்லை. சரி, பரவாயில்லை, பாத்திரத்தைத் தாண்டி வசனம் ரசிக்கும்படியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வசனத்தோடு கூடவே திரைக்கதையும் எழுதிட்டாருன்னு வைச்சிக்கங்க, அது திரைக்கு எழுதப்பட்ட கதையல்ல, அந்தப் படத் தயாரிப்பாளருக்கு எழுதப்பட்ட இரங்கல்.
எப்படி இவர.. வசனகர்த்தாவா தொடர்ந்து பலபேர் பயன்படுத்துகிறார்கள்? படுதோல்விகளுக்குப் பிறகும். அதுவும் ‘பெரிய தில்லாலங்கடி’ இயக்குநர்களே.
சமூகப் பொறுப்புள்ளவர்களாகச் சொல்லிக் கொள்கிற அல்லது சொல்லப்படுகிறவர்களும், சமூக விரோத கருத்துக்களைச் சொந்தமாகக் கொண்ட இவரைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த இயக்குநர்களின் சமுகப் பொறுப்புக்கு இதுவே சாட்சி.

ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை திடீர் முடிவு ஏன்? பின்னணியில் பாஜக?

சென்னை: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரி ஏய்ப்பு வழக்கில், திடீரென ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை முன் வந்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது. 

மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது? 13 ஜோடி யானைத் தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவருக்கு விருதா?

வீட்டில் யானைத் தந்தங்கள் வைத்திருந்ததல், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பத்ம பூஷன் வழங்க விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது. யானைத் தந்தங்களைப் பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பி.கே.வெங்கடாசலம் கூறும்போது, 'மோகன்லால் தனது வீட்டில் 13 ஜோடி யானைத் தந்தங்களைப் பதுக்கி வைத்திருந்தார்.

குஷ்புவை விமர்சித்த தமிழிசைக்கு கண்டனம்! அமைச்சர் ஸ்மிருதியை விட குஷ்புவுக்கு அரசியல் தெரியும்

புதுவை மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள குஷ்புவிற்கு காங்கிரஸ் வரலாறே தெரியாது என்றும், காங்கிரஸ் வரலாறை முழுமையாக அறியாதவர் என்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி நடிகை ஸ்மிருதி ராணியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் அமைத்துள்ளது. அவர்களுக்கு தெரிந்த வரலாறு அரசியல் ஆகியவற்றை விட குஷ்புவிற்கு அதிகமாகவே காங்கிரஸ் வரலாறு தெரியும். ஸ்மிருதி ராணியை விட தேச நலனில் அதிக அக்கறை கொண்டவர் குஷ்பு. முதலில் காங்கிரசில் குஷ்பு இணைந்திருக்கிற இந்த தருணத்தை பார்க்கவேண்டும். காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் மிக துணிச்சலாக மதச்சார்பின்மையை பாதுகாக்க தேச நலனை கருத்தில்கொண்டு கட்சியில் இணைந்துள்ளார்.

நூடுல்ஸ்! இதய நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு?

நூடுல்ஸ்... என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான்.
எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டுவிடும். வாயிறு நிரம்பிய திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைப்போம்.
ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல.
நூடுல்ஸ் சாப்பிடாதீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க தாங்க.. ஆனா, எங்க புள்ளைங்க அதத்தானே விரும்பி சாப்பிடுறாங்கன்னு சொல்வது புரிகிறது. ஆனா, அவங்களுக்குப் பிடிக்கும்னு கல்லையோ மண்ணையோ நீங்க சாப்பிடக் கொடுப்பீங்களா.. அப்படியே கல்லையோ மண்ணையோ கொடுத்தால் கூட அது நூடுல்ஸை விட அதிகக் கெடுதியை செய்து விடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஏன் எனில் நூடுல்ஸை வேண்டவே வேண்டாம் என்று சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்ல நேரமில்லாததால் ஒரு முக்கியமான பத்து காரணங்களை இங்கே சொல்கிறோம்.

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: புதிய 8+4+3 திட்டம்! கல்வி மேதை ஸ்மிருதி இராணி அறிவிப்பு ~!

புதுடில்லி : இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.  Certificate course க்கும், degree course க்கும் வித்தியாசம் தெரியாத, degree கூட படிக்காத ஒரு கல்வி அமைச்சர், இது பலகோடி மாணவர்களின் தலையெழுத்தை மாத்தப்போகிறது. என்ன கொடுமை? காமராஜர் என்ன படித்தார்ன்னு காவிங்க கேட்டாலும் கேப்பாய்ங்க

ஞாயிறு, 30 நவம்பர், 2014

இந்த விஞ்ஞானி உண்மையிலேயே அறிவாளி தான்

(டி.என்.எஸ்) பண்டையக்கால தமிழ் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும், அவை குறித்த வரலாற்று குறிப்பிகளையும் மையமாக வைத்து ஒரு கற்பனை கதையுடன் உருவாகியுள்ள விஞ்ஞானம் சம்மந்தமான படம் தான் இந்த ‘விஞ்ஞானி’ விஞ்ஞானியான நாயகன் பார்த்தி, எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால், குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய நெல்லை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இது சாத்தியமில்லாத ஒன்று, என்று சக விஞ்ஞானிகள் கூற, இதை சாத்தியமாக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு, அதற்கான முயற்சியில் இறங்குகிறார் பார்த்தி. இந்த நிலையில், தமிழக கிராமம் ஒன்றில், தமிழ் ஆசிரியையாக இருந்துக்கொண்டு, விவசாயத்திலும் ஈடுபாடு காட்டி வரும் மீரா ஜாஸ்மீன், தனது கிராமத்தில் உள்ள மலை கோவில் அருகே ஒரு கல்வெட்டு இருப்பது போலவும், அதன் அருகில் நெல் பயிர்களை சிலர் புதைத்து வைப்பது போலவும் கனவு காணுகிறார். அதன்படி, அந்த இடத்தில் மீரா ஜாஸ்மீனின் குடும்பம் அந்த கல்வெட்டை தேடி கண்டுபிடிக்கிறார்கள். அதில், தொல்காப்பியர் எழுதிய கல்வெட்டு என்றும், அதில், தாகம் தீர்த்த நெல் என்ற ஒன்று இருப்பதாகவும், அது குறைந்த நீரில் பெரும் விளைச்சல் கொடுக்க கூடிய நெல், என்றும் குறிப்பிட்டிருப்பதுடன், அந்த நெல்லை ஒரு பானையில் வைத்து அங்கே புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அதை மீரா ஜாஸ்மீன் கைப்பற்றுகிறார்.

தமிழகத்தில் பாஜக திருவள்ளுவர் மீது (வஞ்ச) புகழ்ச்சி?

வைகோவுக்கு அடுத்த வழி? வைகோவை பா.ஜ.கவின் சுனா சாமியும் எச்.ராஜாவும் ஏன் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்? 'தூக்கி வீசப்படுவதற்கு முன் வைகோ வெளியேற வேண்டும்’ என சுப்பிரமணியசாமி பேசியிருக்கிறார். ‘வைகோவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் பத்திரமாக திரும்ப முடியாது’ என்று எச். ராஜா பேசியிருக்கிறார். மேலிடத்தின் கண்ணசைவு இல்லாமல் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். வைகோவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான நிலையில் நிற்கும் இந்த இரண்டு பேரும் கொம்பை எடுத்து ஊத ஆரம்பித்திருக்கிறார்கள். இனி கணிசமான பா.ஜ.க தொண்டர்களும் வைகோவை அவமதிக்கத் தொடங்குவார்கள். பிற தலைவர்களும் இவர்களோடு கை கோர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. 
தமிழகத்தில் யாருமே கண்டு கொள்ளாத சுப்பிரமணிய சாமிக்கு தனது கட்சியில் ஒரு இடத்தைக் கொடுத்த போது நிறையப் பேர் ஆச்சரியப்பட்டார்கள். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அஜெண்டாவில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து குடைச்சலை கொடுத்து வர வேண்டும் என்கிற அஜெண்டா முக்கியமான இடத்தில் ஒளிந்திருந்ததை இப்பொழுது புரிந்து கொள்ளலாம். அதிமுகவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு. திமுகவுக்கு 2ஜி. இப்பொழுது மதிமுகவுக்கு அவமானம்.

'எல்லோரையும் சந்தேகி' -தருண் விஜய் உள்பட!

பாரதிய ஜனதாவிற்குப் பல முகங்கள் உண்டு! அமைதியாகப் பேசும் இல. கணேசன் ஒரு முகம். அடாவடியாய்ப் பேசும் ஹெச்.ராஜா இன்னொரு முகம்! தமிழர்களைப் பொறுக்கிகள் என்று சொல்லும் சு.சாமி ஒரு முகம், தமிழ் மொழியை, திருக்குறளைப் போற்றும் தருண் விஜய் இன்னொரு முகம். எப்போதும் தமிழர்களுக்கு மட்டும் ஒரே முகம் - ஏமாளி முகம்! பா.ஜ.கட்சி, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எத்தனையோ உறுதிமொழிகளைக் கொடுத்தது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் இந்தியாவிற்குக் கொண்டுவந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்போம் என்றது. (பாவம், அதை நம்பிப் பலபேர் கடன் வேறு வாங்கி விட்டார்கள்!) இப்படிப் பல்வேறு உறுதிமொழிகள். ஆனால் இன்றோ, சமஸ்க்ருதத் திணிப்புக்கு மட்டும்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. முதலில் சமஸ்க்ருத வாரம். பிறகு, கேந்திரிய வித்யாலயங்களில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சம்ஸ்க்ருதப் பாடம். கடந்த வாரம், தில்லியில் நடைபெற்ற 'ஜல் தன்மன்' என்னும் நதிநீர் இணைப்புக் கருத்தரங்கில், நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒரு புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே பேசியவர்களில் சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது, எதிர்த்துச் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். உடனே, உமா பாரதி எழுந்து, சிலருக்கு இந்தி தெரியவில்லை, சிலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. இந்தச் சிக்கலைப் போக்குவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்க்ருதத்தை இணைப்பு மொழியாக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் மைக்கேல் பிரவுனை சுட்டுகொன்ற போலீஸ்காரர் பதவி விலகல்

அமெரிக்காவில் மிசோரி மாகாணம், பெர்குசனில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என ஜூரிகள் குழு கடந்த 24-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இது கறுப்பின இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது சுட்டுக்கொல்லப்பட்ட பிரவுனின் குடும்பத்தினர், ஜூரிகளின் தீர்ப்பு அநீதியானது என கூறினர்.

லதா ரஜினிகாந்த் 10 கோடி மோசடி? கோச்சடையான் வினியோக உரிமையில் போலீசில் புகார்!

சென்னை: ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படத்தை விநியோகம் வழங்கியதில் லதா ரஜினிகாந்த் ரூ.10.2 கோடி மோசடி செய்ததாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார். இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் ரஜினி நடித்த "கோச்சடையான்' திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் தமிழக உரிமையை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார் இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த உரிமத்துக்குரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன். இந்த ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் "கோச்சடையான்' திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது. அதைமீறி தமிழகத்தில் வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குறிப்பாக விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாணவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 20 ஆண்டு சிறை

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கல்லூரி மாணவியை, தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், கோபி, கெட்டிச்செவியூர், மிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 27. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் கல்லூரி மாணவி நவீனா என்பவரை, ஒருதலையாக காதலித்தார். பெண் மறுத்தும், மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பி, தொந்தரவு செய்து வந்தார். மனமுடைந்த நவீனா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்நம்பியூர் போலீசார், சரவணனை கைது செய்தனர். ஈரோடு மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு, வழக்கை விசாரித்து, பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், மிரட்டியதற்காக, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், தொடர்ந்து தொல்லை கொடுத்து, மாணவியின் இறப்புக்கு காரணமாக இருந்ததற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் என, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.nakkeeran.in

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக பயன்படுத்தலாம் என்று நினைத்து இதனைத்  தூண்டில் முள்ளாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது என்று தேவையான எச்சரிக்கையுடன் கூடிய அரிய அறிக்கையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத் துள்ளார் - அறிக்கை வருமாறு:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி - நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பி.வி. ஆச்சார்யா : ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும்.

பி. வி. ஆச்சார்யா
பி. வி. ஆச்சார்யா
பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80 வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச் சந்தித்தேன்.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா?
என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராமம். 1953-ல் மங்களூருவில், ‘மெட்ராஸ் மெயில்’ ரயிலேறி சென்ட்ரல் போய் இறங்கினேன். புதிய ஊர், புதிய மனிதர்கள், பல வித்தியாசமான கலாச்சாரங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தது அன்றைய மெட்ராஸ். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அனந்த நாராயணன் எனக்கு அப்போது சட்ட‌க் கல்வி போதித்தவர். பகல் நேரத்தை நூலகத்தில் செலவிட்டு, மாலை நேரத்தில் கல்லூரிக்கு போவேன். ஐஸ்ஹவுஸ் வெங்கடேஸ்வரா விடுதியில் தங்கியிருந்தேன். அடிக்கடி கடற்கரைக்குப் போவேன். ரொம்ப நாட்கள் யாரேனும் மெட்ராஸ் என்று உச்சரித்தால் இவையெல்லாம்தான் ஞாபகத்து வரும்.
இப்போதெல்லாம் மெட்ராஸை நினைத்தால் ஜெய லலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குதான் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து வரும் யாரும் அதைப் பற்றியே விசாரிக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, “சென்னை பக்கம் போயிடாதீங்க சார். அம்மா ஆதரவாளர்கள் உங்கள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்” என்று கிண்டல் அடித்தார்.

தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: விலைகுறைகிறது!

மும்பை,நவ.29 (டி.என்.எஸ்) தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.< கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், தங்கம் இறக்குமதி குறைந்ததால், தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. தற்போது புதிய அரசு ஏற்றுள்ள பா.ஜ.க அரசு, தங்கம் ஏற்றுமதியில் சில சலுகைகள் வழங்கியதால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்த நிலையில், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று நீக்கின. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, 80 சதவீத தங்கத்தை வைத்துக்கொண்டு, 20 சதவீத தங்கத்தை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் ரத்து செய்தன. இதுதொடர்பாக அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை! பிரகாசி அம்மாள் (வயது 72).

மதுரை ரிங் ரோடு பகுதியில் கல்லம்பல் பாலம் உள்ளது. இதன் அருகே இன்று காலை நடந்து சென்றவர்கள், அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டனர்.இது குறித்து சிலைமான் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவரின் முகத்தில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.மேலும் பெண்ணின் கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் காணப்பட்டது. இதனால் அவரை யாராவது கடத்தி வந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் கொலையான பெண் யார? என தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவரது பெயர் விவரம் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மனுவல்ராஜன் என்பவரது மனைவி பிரகாசி அம்மாள் (வயது 72). கணவன்–மனைவி இருவரும் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ம மு ஆட்சியில இதெல்லாம் ஜகஜமப்பா! பிராயசித்தமா மமுக்காக கண்ணீர் விடுரம்ல? 

அரசின் அநியாயம்! முதியோர் உதவி தொகை ரத்து! கொடுப்பதே 1,000 ரூபாய்தான் அதற்கும் அதிமுக கடிதம் தேவை.இப்போ அதுவும் கோவிந்தா!

 முதியோர் உதவித்தொகை பெற்ற பயனாளிகளின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், லட்சக்கணக்கானோர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு விஷயத்தில், ஆளுங்கட்சியினரின் பரிந்துரையை ஏற்றதால், அதிகாரிகள், இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வறுமைக்கோட்டில் வசிக்கும் நலிந்த, ஏழை, எளிய மக்களுக்காக, இந்திராகாந்தி தேசிய முதியோர், மாற்றுத்திறனுடையோர், விதவைகள், ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர், ஆதரவற்ற விதவைகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு, கணவரால் கைவிடப்பட்ட பெண், உழைக்கும் திறனற்ற ஏழைப் பெண் ஆகியோருக்கு, ஓய்வூதியத் திட்டத்தில், மாதம் தோறும் தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில், அதிகளவில் முறைகேடு நடப்பதால், தகுதியான பயனாளிக்கு உரிய பயன் கிடைக்காமல் போகிறது.

ரயில் நிலையங்கள் தனியார் வசமாகிறது! பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமராக நரேந்திர மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது முதல் அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவையை விரிவுபடுத்தவும், ரெயில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வருமானம் கிடைக்கவும் ஏதுவாக ரெயில்வேயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அவர் பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளான நிலையில், இந்திய ரெயில்வே வரைபடத்தில் இடம் பெறாமல் இருந்த மேகாலயா மாநிலத்தில், மெந்திபத்தார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி இடையே ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து முடித்தது. கவுகாத்தியில் நேற்று நடந்த விழாவில் கவுகாத்தி-மெந்திபத்தார் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரெயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேசியபோது கூறியதாவது:- மத்திய அரசு ரெயில்வேயை விரிவாக்கம் செய்வதோடு, நவீனமயம் ஆக்கும். அந்த வகையில் இந்தியா முழுவதும் ரெயில் சேவை விரிவுபடுத்தப்படும்.வடநாட்டில் பலரும் டிக்கெட்எடுக்காமலே பயணம் செய்கிறார்கள் அதிலும் காவிகள் சுத்தமாக இலவசபிரயாணம்தான்,ரயில் நிலையங்களை விட மொத்தமாக ரயில் தடங்களை தனியார் மயமாக்கலாம் ஆனா அதானி அம்பானிக்கு கொடுக்க கூடாது?  நிச்சயமாக அரசுக்கு லாபம் வரும்

குளித்தலை தொகுதியில் கனிமொழி போட்டி?

வரும் சட்டசபை தேர்தலில், மயிலம், விழுப்புரம், குளித்தலை ஆகிய மூன்று தொகுதிகளில், எதாவது ஒன்றில் கனிமொழி எம்.பி., போட்டியிட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கனிமொழி ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தி.மு.க.,வில், உட்கட்சி தேர்தல், அடுத்த மாதம் முடிவடைகிறது. அதன்பின், 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பித்து, ஓராண்டில் 5,000 பொதுக்கூட்டங்களை, தமிழகம் முழுவதும் நடத்த கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான் என்பது முடிவாகி விட்டது. தி.மு.க.,வுக்கு வன்னியர், முத்தரையர், நாடார் சமுதாய ஓட்டுகள் இருக்க வேண்டும் என சொல்லி, அந்த ஓட்டுக்களை கவருவதற்கு, திட்டம் தீட்டி கொடுத்துள்ளார் கனிமொழி. வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தினர், 120 தொகுதிகளில் செல்வாக்காக இருப்பதால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில், 60 தொகுதிகளில் வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறார்.