ஞாயிறு, 30 நவம்பர், 2014

ரயில் நிலையங்கள் தனியார் வசமாகிறது! பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமராக நரேந்திர மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது முதல் அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவையை விரிவுபடுத்தவும், ரெயில் பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வருமானம் கிடைக்கவும் ஏதுவாக ரெயில்வேயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அவர் பரிசீலித்து வருகிறார். இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளான நிலையில், இந்திய ரெயில்வே வரைபடத்தில் இடம் பெறாமல் இருந்த மேகாலயா மாநிலத்தில், மெந்திபத்தார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி இடையே ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து முடித்தது. கவுகாத்தியில் நேற்று நடந்த விழாவில் கவுகாத்தி-மெந்திபத்தார் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரெயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேசியபோது கூறியதாவது:- மத்திய அரசு ரெயில்வேயை விரிவாக்கம் செய்வதோடு, நவீனமயம் ஆக்கும். அந்த வகையில் இந்தியா முழுவதும் ரெயில் சேவை விரிவுபடுத்தப்படும்.வடநாட்டில் பலரும் டிக்கெட்எடுக்காமலே பயணம் செய்கிறார்கள் அதிலும் காவிகள் சுத்தமாக இலவசபிரயாணம்தான்,ரயில் நிலையங்களை விட மொத்தமாக ரயில் தடங்களை தனியார் மயமாக்கலாம் ஆனா அதானி அம்பானிக்கு கொடுக்க கூடாது?  நிச்சயமாக அரசுக்கு லாபம் வரும்
அத்துடன் ரெயில்வேயில் திறன் மேம்படுத்தப்படும். தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். சிறப்பான சேவைகள் செய்யப்படும்.

ரெயில்வேயில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் என்ன வசதிகள் இருந்தனவோ அதே வசதிகள்தான் இன்றளவும் உள்ளன.

எனவே, ரெயில் நிலையங்கள் தனியார் மயமாக்கி, நவீனப்படுத்தப்படும். (முதல் கட்டமாக) இதை 10, 12 இடங்களில் செய்வேன். ரெயில்களில் பயணம் செய்கிறவர்களில் பெரும்பாலானோர் ஏழை மக்கள்தான். ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களை விட சிறப்பானவையாக இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் உச்சாணிக்கொம்பில் இருக்கிறது. ரெயில்வே, தனது நிலங்களில் தனியார் துறையினர் சொகுசு ஓட்டல்கள், உணவு விடுதிகள் இன்னும் பிற வசதிகளை ஏற்படுத்துவதை அனுமதிக்க வேண்டும்.

இந்த 10, 12 இடங்களில் இந்த வசதிகளை எல்லாம் செய்து முடித்துவிட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களை நாங்கள் நவீனப்படுத்துவோம்.

கூடுதலாக ஒரு பெட்டியை இணைத்து விட்டாலோ அல்லது ஒரு ரெயில் நிலையத்தை மேம்படுத்தி விட்டாலோ நாங்கள் மகிழ்ச்சி அடைந்து விட மாட்டோம். அனைத்து வகைகளிலும் ரெயில்வே மேம்பாடு காண வேண்டும். நாட்டின் பொருளாதார என்ஜினாக ரெயில்வே மாற வேண்டும்.

ரெயில்வேயில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதுநாட்டில் ரெயில் போக்குவரத்தை முழுமையாக நவீனமயமாக்க உதவும்.

மேலும், நாட்டின் 4 மூலைகளில் உள்ள இடங்களில் ரெயில்வே பல்கலைக்கழகங்களை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. அங்கு ரெயில்வேயின் அனைத்து சேவைகளும் கற்றுத்தரப்படும்.

ரெயில்வே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தாத வெகுஜன போக்குவரத்தாக ஆக முடியும். இது உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் பங்களிப்பாக அமையும்.

உயர் மத்தியதர வர்க்கத்தினர் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். நல்ல இடங்களை அவர்கள் தேடுகிறார்கள். நல்ல போக்குவரத்து வசதிகள் இருந்தால், அவர்கள் இங்கே வடகிழக்கு பகுதிக்கும் வருவார்கள். இங்கு இயற்கை எழில் கொஞ்சுகிறது. அன்பான மக்களும் இருக்கிறார்கள்.

உள் கட்டமைப்பை அபிவிருத்தி செய்து விட்டால், மற்றவற்றை மக்களே செய்து விடுவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: