திங்கள், 1 டிசம்பர், 2014

துடிக்கும் ராஜா?கடிக்கும் தமிழிசை – வீபிடணர் வைகோவின் பதில் என்ன?

பாஜகவினர் தாறுமாறாகப் பேசி வரும் நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டாமல் உள்ளார் வைகோ. அதேசமயம், மதிமுகவினர் கூட்டணிக்குக் குட் பை சொல்லத் தயாராகி விட்டனர். விரைவில் வைகோவும் அறிவிப்பார் என்று மதிமுகவினர் கூறுகிறார்கள். மீண்டும் ஒரு கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முதல் ஆளாக பாஜக கூட்டணியில் இணைந்தவர் வைகோ. இது பாஜகவினருக்கு பெரும் ஊக்கம் அளித்தது. ஆனால் அடுத்தடுத்து தேமுதிக, பாமக என முக்கியக் கட்சிகள் வந்ததால் வைகோவை சற்றே ஓரம் கட்ட ஆரம்பித்தது பாஜக. இது வைகோவை கோபத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அமைதி காத்தார். தேமுதிக, பாமகவுக்கெல்லாம் சீட் ஒதுக்கிக் கொடுத்த பின்னர்தான் மதிமுக பக்கம் திரும்பிப் பார்த்தது பாஜக. அதையும் கூட வைகோ பொறுத்துக் கொண்டார். ஈழத் தமிழர் விவகாரத்தில் வாஜ்பாயைப் போல மோடி ஆக்கப்பூர்வமாக செயல்படுவார், ராஜபக்சேவை ஒடுக்க முயற்சிப்பார், இலங்கையைக் கண்டிப்பார் என்றெல்லாம் நினைத்திருந்தார் வைகோ. அடேங்கப்பா நினைத்திருந்தார்? நினைத்திருப்பதாக நடித்தார்! ஆனால் எல்லோரையும் நம்பவைத்தார் இந்த அரசியல் நடிகர் திலகம் வை.கோபாலசாமி என்பதே உண்மை.தமிழக அரசியலில் இவரை ஒரு அப்பாவி என்று பலரும் இன்னும் நம்புகிறார்களே?  
ஆனால் ஏற்குக மாறாக, தனது பதவியேற்பு விழாவுக்கு முதல் ஆளாக ராஜபக்சேவை அழைத்து வைகோவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மோடி. அதன் பின்னர் தொடர்ந்து ஏமாற்றம் தரும் வகையில் பாஜகவினர் செயல்பட, சாமியின் அட்டகாசம் அதிகரித்தபோதும் அதை பாஜக தலைமை கண்டு கொள்ளாமல் இருந்தது என மதிமுகவை சீண்டும் வகையில் பாஜகவினர் நடந்து வந்தனர். மோடி கடந்த வாரம் நேபாளம் நாட்டில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஜனவரி மாதம் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். இது வைகோவை உசுப்பி விட்டு விட்டது. மிகக் கடுமையான தாக்குதலை முதல் முறையாக தொடங்கினார் வைகோ. பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார். தமிழ் இன அழிப்பை செய்யும் சிங்கள அதிபர் ராஜபக்சேயை வாழ்த்தியதோடு, அவர் மீண்டும் அதிபராக வர வேண்டும் என்று சொல்வது தவறு என்று காட்டமாக அவர் விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ ஒருமையில் பேசுகிறார். இதை அவர் நிறுத்தாவிட்டால் பாதுகாப்பாக திரும்ப முடியாது. வைகோ நாவை அடக்காவிட்டால், தமிழ்நாட்டில் அவர் நடமாட முடியாது. அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும் என்று சவாடாலாகப் பேசப் போக அரசியல் களம் சூடானது. எச்.ராஜாவின் இந்த மிரட்டல் பேச்சால் ம.தி.மு.க. தொண்டர்கள் கடும் கோபம் அடைந்தனர். காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டை சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் செவந்தியப்பன் தலைமையில் 39 பேர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். வைகோவை மிரட்டும் வகையில் ராஜா பேசியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், திமுக, பாமக, தேமுதிக தரப்பிலிருந்து பேச்சையும் காணோம், மூச்சையும் காணோம். இ்நத நிலையில் வைகோ, உடனடியாக பாஜக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார். அதையே தி.க. தலைவர் வீரமணியும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் வைகோ அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. வெளியேறுவாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் மதிமுகவினர் மனதளவில் பாஜக கூட்டணியை வெறுக்க ஆரம்பித்து விட்டனர். இதை வைகோவும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் டிசம்பர் 8ம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் கூட்டணியை விட்டு விலகும் முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதன் பின்னர் வைகோவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. மதிமுக, பாஜக கூட்டணியை விட்டு விலகி வந்த பின்னர் எந்தக் கூட்டணியில் இணைவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மதிமுகவைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாமக, பாஜக என அனைத்துக் கூட்டணியிலும் இருந்து விட்டது. வரும் சட்டசபைத் தேர்தலிலும் இதில் ஏதாவது ஒன்றில் இணையலாம் அல்லது புதுக் கூட்டணிக்கு முயற்சிக்கலாம் என்று தெரிகிறது.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: