திங்கள், 13 அக்டோபர், 2014

தமிழகத்தில் 37 பேர் வடமாநிலத்தவர்கள் கொத்தடிமைகளாக ! போர்வெல் நிறுவனர் கைது !

கந்தம்பாளையம் அருகே கொத்தடிமை போல பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 37 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக ரிக் அதி பரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.; கலெக்டரிடம் புகார்t; நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள திடுமல் தி.ராசாம்பாளை யத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). இவர் போர்வெல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் வேலை செய்து வந்த மத்திய பிர தேசத்தை சேர்ந்த 9 தொழி லாளர்கள் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து, தாங்கள் கடந்த 6 மாதங்களாக முருகேசன் என்பவரிடம் பணிபுரிந்து வருவதாகவும், இதுவரை தங்களுக்கு சம்பளம் ஏதும் தராமல் வேலை வாங்கிக் கொண்டு வெளியில் செல்வ தற்கு விடாமல் அடிமைபோல் நடத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தனர். வந்தாரை கொத்தடிமைகளாக வாழவைப்பது தப்பா ? கேட்டாலும் கேப்பாய்ங்க ?

சுப்பிரமணியம் சாமி ! அழுகிய முட்டையை முகத்தில் அடித்தாலும், ஜெயா கும்பல் அம்மண ஆட்டம் ஆடினாலும் .....

அதிகாரத் தரகன் சு.சாமிக்கிரகாரத்து மாமாப்பயல், அண்டப் புளுகன், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரன் – என்றெல்லாம் இழிவாகச் சித்தரிக்கப்படும் , 
 இந்த சுப்பிரமணியம் .சாமி யார் ? ஒரு அரசியல்வாதிக்கு உரிய  சமூக ஆதரவோ, மக்களிடம் மதிப்போ இல்லாத ஒரு நபரால் இந்திய அரசியலில் பல மோடிவித்தைகள்  எப்படி சாத்தியமாகிறது? அடிக்கடி விமானத்தில் பறக்கும் சு.சாமிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்களும் வருமானமும் கிடைத்தது?அவரது தொழில்தான் என்ன?
சு.சாமி - ஜெயேந்திரன்சில பத்திரிகையாளர்கள் தேர்தல் கூட்டணியை உருவாக்க ஒரு ஏற்பாட்டைச் செய்து, அதைத் தமது ஏடுகளில் முதன்மைச் செய்தியாக்கி எப்படி மாமா வேலை செய்கிறார்களோ, அதேபோல அரசியலில் இத்தகைய வேலையைச் செய்பவர்தான் சு.சாமி. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் வைத்தி என்ற கதாபாத்திரத்தின் மறு அவதாரம்தான் சு.சாமி. இத்தகைய நிழல் மனிதர்கள்தான் “சோர்ஸ்” என்ற பெயரில் அங்கேயும் இங்கேயும் தகவல்களைப் பரிமாறும் நபர்களாக இருக்கின்றனர். இத்தகைய அரசியல் – அதிகாரத் தரகர்களைப் பிடித்து தேர்தல் கூட்டணிக்கு நோட்டம் பார்ப்பதென்பது ஓட்டுக்கட்சிகளின் உத்தியாக உள்ளது.  
பார்ப்பன பாசிஸ்டுகளின் கூட்டணி : கொலைகார பார்ப்பன சங்கராச்சாரி, இந்துவெறி அசோக் சிங்காலுடன் கூடிக் குலாவும் சு.சாமி.  நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.இதைவிட ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை எந்த பிராஸ்டிடியூட்டாலும்  தெளிவாக கூறமுடியாது.

சசிதரூரின் கட்சி பதவிகள் பறிப்பு ! காங்கிரஸ் அதிரடி ! சசிதரூரின் மோடி புகழாரம் சந்தேகம் ???

சசி தரூர் | கோப்புப் படம்பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வருவதற்காக, தமது கட்சி எம்.பி. சசி தரூர் மீது காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பு வகிப்போர் பட்டியலில் இருந்து சசி தரூர் பெயர் நீக்கப்பட்டது. ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்திற்கு நாட்டின் தலைவர்கள், பிரபலங்கள் என்று மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதில் சசி தரூரும் ஒருவர். மோடியின் இந்த அழைப்பை ஏற்றதற்காக கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவரை செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி நீக்கியுள்ளார்.
சசி தரூர் மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறையாகும். இப்போதைக்கு, இவர் வெளியுறவு விவகாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக சசி தரூர் நீடிக்கிறார். மனைவி சுனந்த மரணம் கேசில் பாஜக உதவி தேவைபடுகிறதோ ?

Chennai :கார் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஓடியதில் மூவர் பலி !

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை நிலை தவறிய கார், பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பலியாகினர். இது குறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் கூறப்படுவது: சென்னை வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் உள்ள பாரதி நகர் அருகே நள்ளிரவுக்குப் பின் 1 மணியளவில் அங்கு உள்ள டி.சி.எஸ். பேருந்து நிலையம் தாண்டி தாறுமாறாக கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பசு மீது மோதிய கார், அதனை தாண்டி அங்கு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தோர் மீதும் ஏறியது. இதில் 63 வயதுடைய மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த ஆறுமுகம் (35) அவரது மனைவி ஐஸ்வர்யா (29) சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்திருக்கிறார். இந்த விபத்தில் காயமடைந்த பசுவும் உயிரிழந்துவிட்டது.

மீடியாக்கள் அதிகம் கண்டு கொள்ளாத சமுக அவலம் ! ஒரு கைலாஷ் சத்தியார்த்தி போதாது ?

அன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை  பாகிஸ்தானின் 17 வயது  மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் இணைந்து பெற்றுள்ளார். இவரைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால் 30 வருடங்களாக இவரின் தீவிர முயற்சியால் இதுவரை 83,000 குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதிமுக-வை தடை செய் – சென்னையில் பிரச்சாரம் ! அதிமுக ஒரு அரசியல் கட்சியே அல்ல ! ஒருவகை மாபியா ?

    விருத்தாச்சலம் சுவரொட்டி
  • கொள்ளைக்காரி ஜெயாவை பிணையில் விடாதே!
  • கொள்ளைக்கூட்டக் கிரிமினல் கட்சியான அதிமுகவை தடைசெய்!
  • ஜெ-சசி ஆகிய கிரிமினல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
இப்படி எல்லாம் பொது இடத்தில் பேசினால் என்ன ஆகும்? சிவகங்கை காளையார் கோயிலையே எரிச்சவங்க, எத வேணுமினாலும் செய்வாங்க, மக்கள் பயப்படுவார்கள் என்று பலர் நினைக்கலாம். நாங்கள் கூட சுவரொட்டிகளை ஒட்டும் போதும் பிரச்சாரத்துக்கு செல்லும் போது ஏதாவது பிரச்சினை வரலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் நிலைமையோ வேறொன்றாக இருக்கிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் சார்பில் திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

ஊழல் குற்றவாளியின் படம் பள்ளி நோட்டுப் புத்தகங்களில் இருக்கலாமா? கேட்கிறார் டாக்டர் ராமதாஸ்

சென்னை: பாடப்புத்தகங்களில் செம்மொழி வாழ்த்தை மறைப்பதில் காட்டிய ஆர்வத்தையும், வேகத்தையும் ஊழல் குற்றவாளியின் படத்தை அகற்றுவதில் காட்ட மறுக்கும் ஆட்சியாளர்கள் தமிழகத்திற்கு கிடைத்த சாபக்கேடு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் உருவப்படம் உள்ள நோட்டுகளைப் பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் முதல் பருவ விடுமுறை முடிவடைந்து கடந்த 8ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்ட நோட்டுப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கடந்த ஜூன் மாதத்திலேயே வழங்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிக் கையேடு பல மாவட்டங்களில் இப்போது தான் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ஜெயலலிதா படங்கள் உள்ளன.

லக்கி ராய் என்று செல்லமாக அழைக்கப்படும் லக்ஷ்மி ராயின் கதவை தட்டும் அதிஷ்ட தேவதை !

மும்பையை சேர்ந்த ஏ.எஸ்.ஏ நிறுவனம், தமிழில் பிரம்மாண்ட செலவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது.பிரபல நடிகையான ராய் லக்ஷ்மி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் ராஜாதிராஜா, தமிழில் சுந்தர் சி யுடன் 'அரண்மனை'  என இந்த வருடம் ஹிட் படங்களில் நடித்துள்ள ராய் லக்ஷ்மி, பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் என்றால் அதி மிகையாகாது.பல மலையாள வெற்றி படங்களில் நடித்ததின் மூலம் மாலிவுட்டில் “லக்கி” ராய் என அழைக்கப்படும் ராய் லக்ஷ்மி, அரண்மனையில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு அவர் ஒரு பெரிய பலமாக திகழ்வார். இன்னும் பெயரிடபடாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.maalaimalar.com

30 ஆயிரம் கோடி முடக்கம் ! அடுக்குமாடி குடியிருப்புகள்,வீட்டு மனைகள் விற்பனை தேக்கம் !

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் விற்பனையாகாமல் தேங்கி உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளால் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் முடங்கி உள்ளன. இதனால் கட்டுமானம், இதனைச் சார்ந்த துறைகளில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் மந்தநிலை, கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்திச் சார்ந்த தொழில் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் பெரியளவில் ஏற்படுத்தப்படாதது ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.
இதன் விளைவாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் சுமார் 1 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டாக்கு மேலாகியும் விற்பனையாகாமல் தேங்கி உள்ளன. ரியல் எஸ்டேட் துறையினரின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

திக்விஜய் சிங்: மோடியைத் துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது!

பிரதமர் நரேந்திர மோடியைத் துதிபாடுவது, மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது'' என்று பாஜகவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எச்சரித்தார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், யாவத்மாலில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் 3 சித்தாத்தங்கள் உள்ளன. ஒன்று, காந்தி-நேரு-அம்பேத்கர் சித்தாந்தம். 2ஆவது, இடதுசாரி சித்தாந்தம். 3ஆவது ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தம். மத அடிப்படையில், நாட்டில் பிளவு ஏற்படுத்துவதில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் சிறந்தவர்கள்.
விஜயதசமி தினத்தன்று உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "அனைவரும் நம்மவர்கள்தான். அனைவரையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டார். ஆனால் அதற்கு மாறாக, பாஜக மதக் கலவரத்தை தூண்டிவிடுகிறது. முசாஃபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கௌரவிக்கிறது.

ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு மாற்றப்படுவார் ?

ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு மாற்றப்படுவாரா? என்பதற்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பதில் அளித்துள்ளார்.
சிறப்பு பேட்டி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் சிறைக்கு சென்று நேற்றுடன் 16 நாட்கள் ஆகின்றன. சிறையில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்பது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் வைத்து நேற்று “தினத்தந்தி’’ நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நலம் விசாரிக்கிறேன் ஜெயலலிதா கடந்த 27–ந் தேதி சிறைக்கு வந்த நாளில் இருந்து இதுவரை அவர் ஒருவரை கூட சந்தித்து பேசவில்லை. நான் அவரை அவ்வப்போது சந்தித்து அவரது உடல் நலம் குறித்தும், அவருக்கு ஏதாவது வசதிகள் வேண்டுமா? குறைகள் இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்து வருகிறேன்.
ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளன. அவை கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கலைஞரை கைது செய்ய அதிமுகவினர் போலீசுக்கு நிர்ப்பந்தம் ! குண்டர்களை ஏவி விட்டாராம்?

அ.தி.மு.க.,வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது, போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரி மறுத்து விட்டார். அதனால், அவர் மீது, அ.தி.மு.க., தரப்பு கோபமாக உள்ளதாக தகவல் பரவி உள்ளது.சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பால், கடந்த 27ம் தேதி, ஜெயலலிதா கைதாகி சிறை சென்றதும், தமிழகம் முழுவதும் வன்முறைகள் வெடித்தன. இதில், ஒரு நிகழ்வாக, அ.தி.மு.க.,வினர், தி.மு.க., தலைவர் கருணாநிதி இல்லம் சென்று கல் வீசினர். அப்போது, அங்கிருந்த தி.மு.க., தொண்டர்களுக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க.,வினர் மீது, அ.தி.மு.க.,வினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரில், தி.மு.க.,வினரை, வீட்டுக்குள் இருந்த கருணாநிதியும், ஸ்டாலினும் துாண்டினர் என்றும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கருணாநிதியையும், ஸ்டாலினையும் கைது செய்ய வேண்டும் என, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் இருக்கும் இடத்துக்கு பொறுப்பான அதிகாரியை, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து நிர்பந்தம் செய்து வந்துள்ளனர்.தமிழகத்தை கொள்ளை அடித்த அம்மாவும்  அவரது கிளிசரின் கோஷ்டியும் ஆடும் வெறியாட்டம் சகிக்கலை ! யார் கண்டா சட்டத்தின் முன்  அனைவரும் சமம் என்று  பார்ப்பான் சோ கலைஞரை கைது செய்தே  தீரவேண்டும் என்று அறிக்கை விட்டாலும் விடுவான்யா ?

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சுப்ரமணியம் சாமிக்கு அதிமுக மகளிர் அணியினர் என்ன வரவேற்பு கொடுப்பாய்ங்களோ ? தாய்க்குலம் முன்போல் இம்முறையும் காபரே ஆடுவாய்ங்களோ ?

சென்னை: ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி முக்கியப் புள்ளியான சுப்பிரமணியம் சாமி சென்னைக்கு வரவுள்ளார். சாமி மீது ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சரமாரியாக அவதூறு வழக்குகளைப் போட்டார். இதையடுத்து கைது பயத்தால் சென்னை பக்கமே வராமல் இருந்தார் சாமி. தற்போது ஜெயலலிதா ஜெயிலுக்குப் போய் விட்ட நிலையில் சாமி சென்னைக்கு வரவுள்ளார். சென்னை வருகிறார் சாமி.. 'வரவேற்பு' கொடுப்பார்களா அதிமுகவினர்? . இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போக முக்கியக் காரணமானவர் சாமி என்பதால் அவர் மீது அதிமுகவினர் கடும் கோபத்துடன் உள்ளனர். இந்த சூழ்நிலையில் இன்று இரவு சென்னைக்கு வருகிறார் சாமி. நாளை அவர் பிரிட்டிஷ் கவுன்சிலில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தண்டனையில் இருந்து ஜெயலலிதா ஜாமீன் கேட்கும் விவகாரம், தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து "முக்கிய" பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் சாமி சென்னைக்கு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சாமியைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி கொடுத்த "பலத்த வரவேற்பு" மக்கள் கண்களிலிருந்து இன்னும் கூட மறையவில்லை. அந்த வரவேற்புக்குத் தலைமை தாங்கியவர் இப்போதைய அமைச்சர் பா. வளர்மதி ஆவார். எனவே இந்த முறையும் அதேபோன்ற வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
/tamil.oneindia.in/

விசாகப்பட்டினத்தை ஒருவழி பண்ணி கடந்தது ஹூட்ஹூட் புயல்

வங்கக் கடலில் நிலை கொண்ட அதி பயங்கர புயலான ஹூட்ஹூட் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இன்று மதியம் கரையை கடந்தது. புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியபோது அங்கு மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடக்கையில் மணிக்கு 205 கிமீ வேகத்தில் காற்று வீசியது. விசாகப்பட்டினத்தை புரட்டிப்போட்டு கரையை கடந்தது ஹூட்ஹூட் புயல் பலத்த காற்று மற்றும் கனமழையால் கடற்கரையோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக விசாகப்பட்டினம் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. புயல் காரணமாக அங்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பும் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புயலால் கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தை புரட்டிப்போட்டு கரையை கடந்தது ஹூட்ஹூட் புயல் புயல் கரையை கடந்தாலும் ஆந்திரா மற்றும் ஒடிஸாவில் அடுத்த 6 மணிநேரத்திற்கு மிக கன மழையும், அடுத்த 48 மணிநேரத்திற்கு மழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டிய உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். விசாகப்பட்டின மாவட்டத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் மரங்கள் விழுந்தும், மின் கம்பங்கள் சாய்ந்தும், மேற்கூரைகள் உடைந்தும் பார்ப்பதற்கே அலங்கோலமாக உள்ளது.

புரட்சி பேசும் மலையாள நடிகர் பிருத்விராஜ் குழந்தைக்கு ஜாதி பெயர் வைத்தார்!

சென்னை:சாதி பெயரை இணைத்து குழந்தைக்கு பெயர் சூட்டிய பிருத்விராஜுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.‘அபியும் நானும், ‘மொழி உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். மனைவி சுப்ரியா மேனன். சமீபத்தில் இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அலன்கிரிதா மேனன் என பெயரிட்டிருப்பதாக இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டார் பிருத்வி. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் சாதி மறுப்பு பற்றி பேசும் பிருத்விராஜ் தனது குழந்தையின் பெயரோடு சாதி பெயரை இணைத்தது ஏன்? என்று சரமாரியாக கேள்வி கேட்டு மெசேஜ் வெளியிட்டுள்ளனர். மேனன்  நாயர்   நம்பூதிரி என்ற ஜாதிபெயர்களை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் மலையாளிகள் பேசுவது தங்களை ஏதோ புத்தி ஜீவிகள் என்றும் தமிழர்கள் எல்லாம் பாமரர் என்றும் கருதுவது வேடிக்கை ? இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜாதிபெயரை போட்டுகொள்வது அவமானம் என்று கருதும் நாகரீகம் இருக்கிறது, எல்லாம் பெரியார் தந்தது !

நாசாமாய் போன டாஸ்மாக் ! செத்துகொண்டிருக்கும் தமிழகம் ! குடிநோயும் மனநோயும் முற்றிய நிலையில் பிரஜைகள் ?

படம்: க.ஸ்ரீபரத்.
படம்: க.ஸ்ரீபரத்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரை குடிசைவாசிகள் யாரைக் கேட்டாலும் தாஸின் வீட்டைக் கைகாட்டுவார்கள்.
“யாரு? குடிச்சிக் குடிச்சே செத்துப்போச்சே அது வீடா?”
வாசலில் மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வில் சமைத்துக் கொண்டிருந்தார் புஷ்பா, தாஸின் மனைவி.
“வாங்க சார்! உட்காருங்க” என்று காலி குண்டான் ஒன்றைக் கவிழ்த்து இருக்கையாக வைத்தார். வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். அதை வீடு என்று சொல்ல முடியாது. நான்கு புறமும் கையை நீட்டினால் சுவர் இடிக்கும். மேலே லேசாகத் தலையும் தட்டக்கூடும்.
என் பார்வையைப் புரிந்துகொண்டவர், “என்ன சார் பண்றது? வாசல்ல படுக்கலாம்னா காவா தண்ணி நிக்குது. சின்னவளை என் மார்ல போட்டுக்கிட்டு நாலு பேரும் நெருக்கியடிச்சுப் படுத்துக்குறோம்” என்றவர், கண் கலங்கியவராய், “அது மட்டும் ஒழுங்கா இருந்திருந்துச்சுன்னா, இப்பிடி நாதியில்லாம நிப்போமா? குடிச்சுக் குடிச்சுப் பைத்தியம் முத்தியில்ல செத்துச்சு. அது பூடுச்சு. நாங்கதான் நெதம் சாவறோம்…” தாங்க மாட்டாமல் அழுகிறார். பெரிய பொண்ணும் சேர்ந்து அழுகிறது.

பவானி சிங் சிறப்பு பேட்டி : ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரான நாளில் இருந்து இன்று வரை ஆட்சேப குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அவ‌ர் மீதான‌ விமர்சனங்களுக்கும், புகார்களுக்கும் பஞ்சமே இல்லை.
தீர்ப்பு வெளியான பின்பு, தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் அளித்தபடி இருக்கிறார். அவர் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டபோது, சளைக்காமல் புன்சிரிப்புடன் பதில் அளித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்ததில் உங்களுக்கு எவ்வளவு பங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். 1974-ம் ஆண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பார்த்துவிட்டேன். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு எனக்கு மிகவும் சாதாரணமானது. இதனை விட சவாலான எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறேன். இந்த வழக்கு, அரசியல் அழுத்தங்கள் காரணமாக பெரிதாக பார்க்கப்பட்டது.

மதவாதத்துக்கு நெத்தி அடி - மலாலாவுக்கு நோபல் பரிசு! Malala : the pride of Pakistan, but she can't go home !

சம்பவத்தன்று நான் பள்ளிக்கு சென்று கொண் டிருந்த போது ஒரு நபர் வாகனத்தை மறித்து, உங்களில் யார் மலாலா எனக் கேட்டார்.
யாரும் வாயைத் திறந்து பதில் சொல்லாத போதும், சில சிறுமிகள் மட்டும் என்னை தலையை திரும்பி பார்த் தார்கள். அத்தோடு, அந்த மாணவிகள் கூட்டத்தி லேயே நான் மட்டும் தான் முகத்திற்கு முக்காடி டாமல் இருந்தேன். உடனடியாக தன் கையில் இருந்த பிஸ்டலை உயர்த் தினார்
அந்த மனிதர். வண்டிகளில் இருந்த மாணவிகளில் சிலர் பயத்தில் கத்தினார்கள். நான் எனது அருகில் இருந்த தோழியின் கை களைப் பிடித்து பிசைந்த தாக எனது தோழி பின்னர் தெரிவித்தார். மேலும், என்னை நோக்கி அந்த நபர் மூன்று முறை சுட்டதாகவும் எனது தோழிகள் தெரிவித்தனர்.
காதில் ரத்தம் வடிய நான் அருகில் இருந்த தோழி மீது சாய்ந்தேன்.அடுத்து வந்த சில குண்டுகள் அரு கில் இருந்த சிறுமிகள் மீது பட்டதாகவும், என்னைச் சுடும் போது துப்பாக்கி ஏந்தியவரின் கைகள் நடுங்கியதாகவும் தோழிகள் தெரிவித்தனர்.'
நார்வே, அக்.11-_ பழமைவாதிகளை எதிர்த்து பெண் கல்விக்காக பாடு பட்ட சிறுமி மலாலா வுக்கும், குழந்தைகள் நல உரிமைக்காகப் பாடுபட்ட கைலாஷ் சத்யார்த்தி ஆகி யோருக்கு உலகத்தின் மிக உயரிய வெகுமதியான அனுமதிக்கான நோபல் பரிசு இணைந்தளிக்கப் படுகிறது.
மலாலாவின் பிறந்த இடம் ஸ்வாத் பள்ளத் தாக்குப் பகுதியில் அமைந்த மிங்கோரா வாகும். ஸ்வாத் என்பது பார்சிமொழியில் சுவை என்று பொருள். ஸ்வாத் பள்ளத்தாக்கில் விளை யும் பாசுமதி அரிசி மிக வும் சுவை மிகுந்தது. இந்த அரிசியின் சுவையின் பெய ரால் இப்பகுதி ஸ்வாத் என்று பெயர் பெற்றது.    1990 களுக்குப் பிறகு தாலிபான்களின் ஆதிக் கம் பெற்ற பிறகு இப்பகுதி உலகின் பார்வையில் இருந்து மறைந்து விட் டது.

வாடகை தாய் மூலம் பெறுவதாக கூறி வேறொருவரின் குழந்தையை கொடுத்து ஏமாற்றிய டாக்டர் !

Srushti Global Trust   வாடகை தாய் மோசடி  தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர் கைது பெங்களூரை சேர்ந்தவர் டான் பாஸ்கோ. இவரது மனைவி சரளாதேவி. இந்த தம்பதிக்கு குழந்தை ஏதும் இல்லை. இதற்காக அவர்கள் பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நந்தினி லே–அவுட் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தும் குருமூர்த்தி என்பவர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக டான் பாஸ்கோவுக்கு தெரியவந்தது.இதையடுத்து, கடந்த 2008–ம் ஆண்டு குருமூர்த்தியை சந்தித்து தங்களுக்கு குழந்தை இல்லை என்ற விபரத்தையும், வாடகை தாய்மூலம் குழந்தை பெற்றெடுக்க இருப்பதாகவும் டான் பாஸ்கோவும், சரளாதேவியும் கூறினார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க ரூ.3½ லட்சம் கொடுக்கும்படி குருமூர்த்தி கேட்டார். உடனே ரூ.3½ லட்சத்தையும், தன்னுடைய விந்து அணுக்களையும் டான் பாஸ்கோ குருமூர்த்தியிடம் கொடுத்தார் இந்த நிலையில், பணம் கொடுத்த 7 மாதத்திலேயே, அதாவது கடந்த 23–10–2008–ம் ஆண்டில் பச்சிளம் பெண் குழந்தையை டான் பாஸ்கோ, சரளாதேவி தம்பதியிடம் குருமூர்த்தி கொடுத்தார். 10 மாதங்கள் ஆவதற்குள் குழந்தை எப்படி பிறந்தது என்று குருமூர்த்தியிடம் டான் பாஸ்கோ கேட்டார்.

மரபணு மாற்றுப்பயிர்... விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் கூட்டுச்சதி! ! மரபியல் விஞ்ஞானியின் பகீர் குற்றச்சாட்டு!

நேர்காணல் ;டாக்டர். சுமன் ஷாஹை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த மரபியல் விஞ்ஞானி. மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்து, 40 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பலநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ஜீன் கேம்பெய்ன்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், இதன் மூலம் ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வருகிறார். பத்மஸ்ரீ, போர்லாக் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், தொடர்ந்து, மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். 'மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் வந்திருந்தார் சுமன் ஷாஹை. அப்போது அவருடனான சந்திப்பில் நம்முடைய கேள்விகளும்... அவருடைய பதில்களும் இங்கே...
''இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா?''
''தேவையே இல்லை. இங்கேயே பாரம்பரிய விதைகள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி விதைகள் என நிறைய இருக்கின்றன.

சரணடைந்தார் Ex ஹரியான முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ! இவர் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் .

ஹரியாணா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா, தில்லி திகார் சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தார்.
ஹரியாணா முதல்வராக சௌதாலா இருந்தபோது, இளநிலை ஆசிரியர் நியமனத்தில் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகக் கூறி ஜாமீன் பெற்றார்.

கலைஞர்: தமிழகத்தில் (Nokkia ) தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா ! 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவில் ?

இதுவரையில் தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கை எடுக்க பட்டிருக்கிறது ?
நோக்கியா ஆலையை திறக்க கோரி 17-ந் தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலை, வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் மூடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ள செய்தி, தொழிலாளர்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்ற போதிலும், அது பற்றி தமிழகத்தை ஆளுங்கட்சி ஏதாவது காதில் போட்டுக்கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே வேதனையோடு கூற வேண்டியுள்ளது. இந்த தொழிற்சாலையை மூடுவது பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலையை, கடந்த ஏப்ரல் மாதம் முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையும் ஒன்று. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போன்களுக்கான ஆர்டரை அளிக்கவில்லை. ஆர்டர் இல்லாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலை, நவம்பர் 1-ந் தேதி முதல் மூடப்படுகிறது. மொபைல் போன்கள் வாங்க, நோக்கியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நவம்பர் 1-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதால், ஆலையை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனிக்க அதிமுக அரசுக்கு  நேரம் இல்லை ஊழல் பெருசாளிகளுக்காக கிளிசரின் வாங்கவே நேரம் போகிறது,

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா, செயலாளராக குஷ்பு தேர்வு

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகாவும் செயலாளராக குஷ்புவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சின்னத்திரை தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். தற்போது இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் பொறுப்பு வகித்து வருகிறார்.
புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள வி.எம்.ஏ., கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா ஜாமீன் கோரிக்கையில் மீண்டும் அதே தவறு ? சதி உள்ளேயா வெளியேயா ?

கர்நாடக ஐகோர்ட்டில், ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, எப்படியாவது, ஜெயலலிதா வெளியில் கொண்டு வரப்படமாட்டாரா என்ற ஏக்கமும், எதிர்பார்ப்பும், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, சொத்து குவிப்பு வழக்கை சரிவர கையாளாமல் போனதே, ஜெயலலிதாவுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் என்ற கருத்தும் உள்ளது.
சட்டரீதியிலான நடவடிக்கைகளை, இனிமேலாவது சரிவர எடுக்க வேண்டும்; குறிப்பாக, ஜாமின் விவகாரத்தில் சறுக்கிவிட கூடாது என்றெல்லாம், அக்கட்சியினர் வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், டில்லியில் அரங்கேறும் நடவடிக்கைகள், அதற்கு நேர்மாறாக உள்ளன. ஜாமின் விவகாரம் கையாளப்படும் முறையை கூர்ந்து கவனித்து வரும் சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள், பலத்த சந்தேகத்தை கிளப்புகின்றன. எங்கே ஜெயலலிதா வெளியே வந்து விடுவாரோ ? தங்கள் திடீர் சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று கவலை படுபவர்கள் நிச்சயமாக எதிர்கட்சிகள் சைடில்  இல்லை! இது ஏன் ஒரு உள்குத்தாக இருக்க கூடாது என்று சந்தேக படக்கூடிய காரணங்கள் நிறைய உண்டு .பன்னீரு பாவம் அந்தபக்கமும் நிம்மதி இல்ல இந்த பக்கமும் நிம்மதி இல்லை ?

500 All India Radio ரேடியோ ஊழியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் இல்லை ! தீபாவளி ?

புதுடில்லி: ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் 500 ஊழியர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களுக்கு இந்தாண்டு இருண்ட திபாவளியாக ஆகிவிடுமோ என அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.இதில் எம்.எம்.,கோல்டு, எப்.எம்.ரெயி்ன்போ மற்றும் வேறு ரேடியோ நிலையங்களில் ரேடியோ ஜாக்கிகள் அறிவிப்பாளர்கள் மற்றும் பல ஊழியர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.கடந்த ஜூன் முதல் கணக்கிட்டு பார்க்கும் போது மொத்தம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பாக்கி இருக்கும் என்கிறார்கள் ஊழியர்கள்.
இந்த தாமதத்திற்கு நிர்வாகத்திலிருந்து இதுவரை எந்த விளக்கமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஊழியர்கள் கவலையில் உள்ளார்கள்.பண்டிகை சீசன் தொடங்கிவிட்ட நிலையில் பக்ரீத் பண்டிகையின் போது கிடைத்துவிடும் என நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை.எப்படி செலவை சமாளிக்கபோகிறோம் என்ற பீதி நாளுக்கு நாள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.இது குறித்து பிரசார் பாரதி முதன்மை ஆலோசகர் ஹீசைன் கூறுகையில்,இந்த நிலை துரதிர்ஷ்டமானது.நிலைமையை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார்