குமுதம் ரஜினி அட்டை
ஜால்ராகிராமத்துல மோடி அலை, உபியில நக்மா வலை, கூட்டணி எப்போன்னா கேப்டன் சிலை, மோடிக்கு வைகோ போட்ட மாலை, கூட்டணியில்லாத கலைஞர் நிலை, சிபிஎம், தாபாவை சீப்பா அம்மா விரட்டுன கலை…….. இதெல்லாம் ஞாபகம் இருக்காடே? ஒத்தக்கடை மச்சான் பாட்டுக்கு போட்டியா ஒத்த விரலை காட்டி ஓட்டு போட்டேன்னு பீத்திக்கிட்டீல்லா? ஒன்னை மலிவா பட்டி பாத்து ஓட்டுப்போட அனுப்பன பத்திரிகைக்காரனுவ அதுல ஜூவிக்காரன்லேர்ந்து, சூம் பண்ற டீவிக்காரன் வரை இப்பிடித்தாம்லே எலக்சன் நியூஸ்ன்னு அடிச்சு வுட்டானுவ!
ராதா வூட்ல பாதாம் அல்வா, சிம்ரன் காருல சிங்கப்பூர் குல்லா, சமந்தா பேக்குல சீனத்து கல்லுன்னு ஒன்னோட பொது அறிவ வளர்க்குற ஊடக விளக்கமாறுங்க, சினிமா கிசகிசுவ வெச்சுத்தாம்டே கல்லா கட்டுதானுவ. பெறவு இதே லேகியத்தை அரசியல் செய்திலயும் போட்டுத் தாளிச்சு உன்னோட மூளையில மொக்கை வைரசை புகுத்தி அல்லாரையும் இம்ச பண்ணுதான். கலைஞர் வூட்டுக்கு வந்த மர்மக்கார், அம்மா கேட்டுக்கு வந்த செவப்பு சூட்கேஸ், கேப்டன் காருக்கு வந்த பாரின் ஃபுல்லுன்னு இவனுவ எழுதுத நியூசக் கேட்டா அந்த செய்தி தேவதையே ப்ராந்து புடிச்சு தூக்கு மாட்டுவா!   ரஜினி போன பிறவியில  ராகவேந்தராக இருந்ததை கண்டுபிடித்த வாண்டு மாமா  அதுக்கு முந்திய பிறவியில  ஆக்கி மீடிசாகவும் இருந்தாராம் என்பதையும் தற்போது  கண்டு பிடித்துள்ளார்