வெள்ளி, 18 ஜூலை, 2014

உதயநிதி ரொம்ப ரொம்ப ? நயன்தாராவுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை!

சமீபத்தில் வெளியான வாரபத்திரிகை ஒன்று , உதயநிதி மற்றும் நயன்தாராவின் காதல் செய்தியை வெளியிட கோடம்பாக்கமே பரபரப்பாகியுள்ளது. < அதாவது உதயநிதி, நயன்தாராவை காதலிக்கிறார் என்றும் , நயன்தாரா இப்போது மறுக்கிறார் என்றும் மிக பெரிய செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது அந்த பத்திரிக்கை. இதுப்பற்றி அவர்கள் இருவரது பின்னணியில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்தோம், அவர்கள் சொன்ன விபரம் முழு விபரமாக இங்கே….
ஐயாவில் நயன்தாரா அறிமுகம்…
நயன்தார, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக வேண்டிய முதல் படம் சுள்ளான். போட்டோ சூட் எடுத்து பார்த்து கொஞ்சம் அழகில்லை ,இந்த ரோலுக்கு சூட் ஆக மாட்டார் என்று கேரளாவுக்கு திருப்பி அனுப்பட்டவர் நயன்தாரா. அதன் பிறகு கேரளாவில் கொஞ்சம் படங்களில் நடித்தவர், ஹரி இயக்கத்தில், ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் இந்தப்படத்திற்கு முதலில் கமிட்டானவர் ரீமாசென். ஆனால் இந்தி படத்தில் ரீமா கமிட் ஆனதால் , கேரளாவில் வெளியான ஒரு சோப் விளம்பர பேப்பர் நயன்தாராவின் போட்டோவை பார்த்து, உடனே கவிதாலயா நிறுவனம் பேசி நயன்தாராவை கமிட் செய்தனர்.
இந்த படத்தில் நயன்தாராவின் சம்பளம் சுமார் 7 லட்சம் என்கின்றனர். அதன்பிறகு அடுத்தபடமே நயன்தாராவுக்கு சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேரும் வாய்ப்பு அமைந்தது. சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்தார். தொடர்ந்து சூர்யாவுடன் கஜினி படத்தில் ரூ.11 லட்சம், எஸ்.ஜே.சூர்யாவின் கள்வனின் காதலி படத்தில் ரூ.15 லட்சம் என அவரது சம்பளம் படிப்படியாக உயர்ந்தது.

தமிழில் வெற்றி பெற்ற நயன்தாரா, பிறகு தெலுங்கு திரையுலகிற்கும் சென்றார். நாகார்ஜூனாவுடன் அவர் நடித்த லட்சுமி படத்திற்கு ரூ.40 லட்சம் சம்பளம் பெற்றார். பிறகு ரூ.70 லட்சமாக சம்பளத்தை உயர்த்தினார்.
இதற்கிடையே சிம்புவுடன் காதல் வயப்பட்டு இருவரும் உதட்டு முத்தம் கொடுத்தது உள்ளிட்ட நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த சிம்புவுடனான உறவை முறித்து கொண்டார்.
பிரபுதேவாவுடன் காதல் – மதம் மாற்றம் – பிரிவு…
சிம்பு உடனான காதலை முறித்த நேரம், பிரபுதேவாவின் அன்பு கிடைத்தது. இருவரும் நெருக்கம் காட்ட ஆரம்பித்தனர். பிரபுதேவா தான் காதலித்து, திருமணம் செய்து கொண்ட ரமலத்தை விவகாரத்து செல்லும் அளவுக்கு சென்றார், நயன்தாராவோ, பிரபுதேவாவுக்காக மதம் எல்லாம் மாறினார், அவரது பெயரை கையில் பச்சை குத்தி கொண்டார்.
இருவரும் திருமணம் செய்ய இருந்த நேரத்தில் அவர்களது காதல் பிரேக்கப் ஆனது.
சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதலை முறித்து கொண்டு விரக்தியில் இருந்த நயன்தாரா, மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
தெலுங்கில் அவர் நடித்த ராமராஜ்யம் படம், நந்தி விருதை பெற்று தந்தது. தெலுங்கில் வெற்றி பெற்ற கையோடு தமிழுக்கும் வந்தார். ஆரம்பம், ராஜா ராணி என அடுத்தடுத்து அவரது படங்கள் ஹிட்டாக அமையாக இப்போது மீண்டும் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
உதயநிதியுடன் கிசுகிசு…
அரசியல் பின்னணியோடு, ரெட் ஜெயண்ட் பெயரில் ஆதவன், குருவி, 7ம் அறிவு, உள்ளிட்ட பல படங்களை தயாரித்தும், பல படங்களை வெளியிட்டவர் உதயநிதி ஸ்டாலின். ஜீவாவின் , சிவா மனசுல சக்தி பார்த்துவிட்டு தாமும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ,
ஏற்கனவே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை வெளியிட்டதால் ,இயக்குனர் ராஜேஷ் அறிமுகம் இருந்ததால் , ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகினார் .
அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்தார். அந்தப்படமும் ஹிட்டாக அமைந்தது. பிறகு இது கதிர்வேலன் காதலன் படத்தில் நடித்தார். இதில் நயன்தாரா தான் அவருக்கு ஜோடி, ஏற்கனவே ஆதவன் படம் தயாரித்தபோது, நயன்தாராவின் பழக்கம் இருந்ததால் இந்தப்படத்தில் ஹீரோயினாக கமிட் பண்ணினார் உதயநிதி.
இப்படம் வெளிவந்த நேரத்திலேயே மீண்டும் நயன்தாராவை தனது அடுத்தபடமான நண்பேன்டா படத்தில் கமிட் செய்தார் உதயநிதி. ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடி, சென்னை போன்ற இடங்களில் நடந்து வருகிறது. இங்கு தான் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி…?
ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகலப்பாக பேசி வந்தவர்கள் இப்போது சரியாக பேசி கொள்வதில்லையாம். மேலும் நயன்தாராவிடம், உதயநிதி காதலை தெரிவித்ததாகவும், ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்றும், இதனால் உதயநிதி தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.
இது உண்மையா, இல்லையா என்பது பற்றி விசாரிக்க அவர்களை தொடர்பு கொண்டோம். ஆனால் முடியவில்லை, இருந்தாலும் அவர்களை வைத்து படம் இயக்கிய சக நண்பர்களிடம் இதுப்பற்றி விசாரித்தோம், அவர்கள் சொன்ன தகவல்கள் இதோ…
தவறான செய்தி – ராஜா ராணி அட்லீ…
இயக்குநர் அட்லீ கூறியதாவது, இயக்குனர்கள் அதிகமாக விரும்பும் நடிகை நயன்தாரா. செட்டில் ஏதுவும் பேச மாட்டார் , நட்புடன் அனைவரிடமும் பழகுவார்.
ஷூட்டிங்கிற்கு நேரத்தோடு வருவார், நேரத்தோடு செல்வார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், உதயநிதியுடன் அவரை பற்றி வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்கிறார்.
மனைவி-குழந்தைகளுடன் அன்பாக இருப்பவர் – இயக்குநர் ராஜேஷ்…
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், இயக்குநர் ராஜேஷ், நயன்தாராவுடன் வொர்க் பண்ணியதால் , நயன்தாரா – உதயநிதி பற்றி அவரிடம் கேட்டோம், அவர் கூறுகையில், இந்த செய்தியே முதலில் தவறானது. உதயநிதி, பின்னாடி தத்தா, அப்பா என குடும்பம் முழுவதும் அரசியல் பின்னணி இருந்ததால் அவர்களுக்கு எந்த விஷயத்திலும் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார், அதனால் எந்த ஒரு விசயத்திலும் ரொம்ப கவனமாக இருப்பார்.
மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக இருப்பார் , சினிமாகாரர்களை வைத்து பேர் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார் . ஓகே ஓகே.,யில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்தாலும், ஹன்சிகாவுடன் மரியாதையோடு பழகினார், எப்போதும் அவரது வேலையில் கவனமாக இருப்பார் என்கிறார் ராஜேஷ்.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்
அதேப்போல் நயன்தாரா பற்றி பேசும்போது, நயன்தாரா ரொம்ப டெடிகேஷன் உள்ள பொண்ணு , ஷூட்டிங் எத்தனை மணிக்கு வைத்தாலும் முதல் ஆளாய் இருப்பார், செட்டில் அதிகம் பேச மாட்டார், நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்கிறார் ராஜேஷ்.
நினைத்ததை சாதிக்க துடிக்கும் நயன்தாரா…
8 வருடத்திற்கும் மேலாக நயன்தாராவோடு பழகியவர்கள், அவரைப்பற்றி சொல்லும் தகவல் ஆச்சர்யமாகவே இருக்கிறது. எதை நினைத்தாலும் அதை முடித்து காட்ட நினைப்பார், தான் எடுக்கும் முடிவு தான் சரி என்பார். பிரபுதேவா தனிமையில் இருக்கார், அவரை நான் பிரிக்க வில்லை , அவர் தனியே இருந்த போது தான் நான் சந்தித்தேன் என்றார்.
இடையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து விட்டார், இப்போது தான் ஏகப்பட்ட சொத்துகளை வாங்கி போட்டுள்ளார், அவருக்கு திருமணத்தில் எல்லாம் விருப்பம் இல்லை, என்னை யார் திருமணம் செய்ய வந்தாலும், என் சொத்துக்களுக்காக தான் வருவார்கள் என்று சொல்லி வந்தார், இப்போதும் கூறி வருகிறார் நயன்தாரா.
மவுசு குறையாத நயன்தாரா…
கையில் பிரபுதேவா என்று பச்சை குத்தியவர் அதை இப்போது அழித்துவிட்டார் என்று சொன்னாலும், வாழ்க்கை கேள்வி குறியாகவே இருக்கிறது. ஒரு பக்கம் நயன்தாராவை பற்றி இப்படி பல விமர்சனம் எழுந்தாலும், அவர் மவுசு இன்னும் குறையவில்லை.
சமீபத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் பேய் படத்தில் நடிக்க இரண்டரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டதற்கு, இரண்டு கோடி ருபாய் பேசி பாதி அட்வான்ஸ் கொடுத்ததாக சொல்கின்றனர்.
கோடம்பாக்கத்தை தற்போது பரபரப்பாக்கி இருக்கும் இந்த செய்திக்கு எப்படியும் இருவரும் மறுப்பு தான் சொல்லப்போகிறார்கள், இருவரும் இரண்டொரு நாளில் இதற்கு விளக்கம் சொல்லி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என தெரிகிறது.
பேரும் புகழும் சம்பாதிக்கும் நட்சத்திரங்களை பலரும் படத்தில் மட்டும் அல்ல, நிஜத்திலும் பெரிய அளவில் எதிர்பார்கின்றனர். அவர்களை செய்திகளாக்குவதும் , நட்சத்திரங்கள் செய்திகள் ஆவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: