புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில
முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அரியானா காங்கிரஸ் அரசால் தொடர்ந்து
வேட்டையாடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 49, நேற்று மத்திய அரசு
பணிக்கு மாற்றப்பட்டார்.கடந்த, 1991ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக
தேர்ச்சி பெற்ற அசோக் கெம்கா, பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு, சில
ஆண்டுகளுக்கு முன், அரியானா மாநில பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பல
ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, காங்கிரசை சேர்ந்த முதல்வர், பூபிந்தர் சிங்
ஹூடா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்,
சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கும், டி.எல்.எப்., கட்டுமான
நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பையும், அது தொடர்பான நில
முறைகேடுகளையும் அம்பலப்படுத்தினார். இதனால், அரியானா அரசின் கோபத்திற்கு
ஆளான கெம்கா மீது, வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த அதிகாரியான அவரை, சாதாரண
பொறுப்புகளில் நியமித்து, மாநில அரசு அவமதித்தது. கெம்காவை வெறும் காங்கிரச பழிவாங்கும் குறடாக யூஸ் பண்ணுவார்கள் ? குறிப்பாக ஹரியானா அரசு மற்றும் சோனியா குடும்பத்தையும் , ராபர்ட்
வத்ராவையும் பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்,
அதையும் தாண்டி இவரை சுதந்திரமாக செயல்பட விடுவார்களா என்பது சந்தேகமே.... புதன், 16 ஜூலை, 2014
அதிகாரி அசோக் கெம்கா ! மத்திய அரசு பணிக்கு மாற்றம் !
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில
முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அரியானா காங்கிரஸ் அரசால் தொடர்ந்து
வேட்டையாடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 49, நேற்று மத்திய அரசு
பணிக்கு மாற்றப்பட்டார்.கடந்த, 1991ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக
தேர்ச்சி பெற்ற அசோக் கெம்கா, பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு, சில
ஆண்டுகளுக்கு முன், அரியானா மாநில பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பல
ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, காங்கிரசை சேர்ந்த முதல்வர், பூபிந்தர் சிங்
ஹூடா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்,
சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கும், டி.எல்.எப்., கட்டுமான
நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பையும், அது தொடர்பான நில
முறைகேடுகளையும் அம்பலப்படுத்தினார். இதனால், அரியானா அரசின் கோபத்திற்கு
ஆளான கெம்கா மீது, வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த அதிகாரியான அவரை, சாதாரண
பொறுப்புகளில் நியமித்து, மாநில அரசு அவமதித்தது. கெம்காவை வெறும் காங்கிரச பழிவாங்கும் குறடாக யூஸ் பண்ணுவார்கள் ? குறிப்பாக ஹரியானா அரசு மற்றும் சோனியா குடும்பத்தையும் , ராபர்ட்
வத்ராவையும் பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்,
அதையும் தாண்டி இவரை சுதந்திரமாக செயல்பட விடுவார்களா என்பது சந்தேகமே.... செவ்வாய், 15 ஜூலை, 2014
புதியதோர் உலகம் செய்வோம் ! திரைப்பட கல்லூரி மாணவரின் படம்
புதுமுகங்கள் நடிக்க ‘புதியதோர் உலகம் செய்வோம் என்ற படத்தை
முடித்திருக்கிறார் இயக்குனரான திரைப்பட கல்லூரி மாணவர் பி.நித்தியானந்தம்.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் அவர் கூறியதாவது:அப்பாவை திருத்தும் 3
சிறுவர்கள் கருவை வைத்து தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான
கே.எஸ்.நாகராஜன்ராஜா கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஆஜித், அனு, யாழினி
உள்ளிட்டோருடன் முக்கிய வேடத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார்.
பிரவின்சைவி இசை. பாலாஜிரங்கா, விஸ்வநாதன் ஒளிப்பதிவு. எம்.எஸ்.ஜெய்குமார்,
கே.என். சூரியகலா தயாரிப்பு. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில்
இப்படத்தின் ஷூட்டிங் நடந்து இறுதி கட்ட பணிகளும் நிறைவடைந்திருக்கிறது. -
.tamilmurasu.org
Brics மாநாட்டில் மோடி : தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் மனித குலத்துக்கு எதிரானது !
பிரேசில்: தீவிரவாதம் எந்த ரூபத்திலும் வந்தாலும் மனித குலத்துக்கு
எதிரானது என்று மோடி தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ்
மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆப்கன் முதல்
ஆப்பிரிக்கா வரை பல நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுகின்றது.
தீவிரவாதத்தை சிறிது கூட சகித்துக் கொள்ள கூடாது என நரேந்திர மோடி
வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும்
ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதத்தை
எதிர்க்காமல் விட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் நரேந்திர மோடி
தெரிவித்துள்ளார்.dinakaran.com சிதம்பரம் அருகே இறந்த பள்ளி மாணவி அடையாளம் தெரிந்தது:ஜெயபாரதி நாகை மாவட்டம் !
ஜி.சுந்தரராஜன், சிதம்பரம்
சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டில் உடல் சிதைந்த
நிலையில் இறந்துகிடந்த மாணவி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள
தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கெளசல்யா (18) எனத்
தெரியவந்துள்ளது.
சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 16 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் அரசு பள்ளி சீருடையும், ஸ்கூல் பை, காலணிகள் இருந்துள்ளது. ஸ்கூல் பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது.
இறந்த போன மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை நிர்வாண நிலையில் 16 வயது மதிக்கத்தக்க அரசு பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் அரசு பள்ளி சீருடையும், ஸ்கூல் பை, காலணிகள் இருந்துள்ளது. ஸ்கூல் பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது.
இறந்த போன மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
செம்மஞ்சேரி ஹேமலதா தற்கொலை ! ஜேப்பியார் பல்கலைகழகத்தின் எல்லையில்லா அடாவடி !
வெளியிலிருந்து பார்த்தால் பளபளப்பான சுதந்திர நவநாகரீக வளாகமாக காட்சியளிக்கும் சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே சென்று பார்த்தால் இது உண்மையிலே ஒரு கல்வி நிறுவனம் தானா என்கிற சந்தேகம் வரும். பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது. செல்போன் வைத்திருக்கக் கூடாது, அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என்று ஆயிரத்தெட்டு நிபந்தனைகள், வளாகத்திற்குள் சிரிக்கக்கூடாது என்கிற நிபந்தனை இருக்கிறதா என்று தெரியவில்லை. பொதுவாக கல்லூரிகளில் மாணவர்களின் பயிற்சி, வளர்ச்சியை முன்னிட்டு கட்டுப்பாடுகள் இருப்பது சரியென்றாலும் இங்கே அது எல்லை மீறி ஜேப்பியாரின் பண்ணையடிமைத்தனமாக மாற்றப்பட்டுவிட்டது. எம்ஜியார் செய்த எத்தனையோ பாவங்களில் இந்த ஜேப்பியார் போன்ற அடியாட்களை கண்டெடுத்து வளர்த்து விட்டது உண்மையில் மிகபெரும் சாபகேடுதான்
Delhi Gang Rape குற்றவாளிகள் இருவரின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை
விதிக்கப்பட்ட நான்கு பேரில், இரண்டு பேரின் தண்டனைக்கு, உச்ச நீதிமன்றம்
தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும்
என்றும் தெரிவித்து உள்ளது.டில்லியில், 2012 டிச., 16ல், ஓடும்
பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவர், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு, பின் துாக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த
வழக்கில், வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் முகேஷ் என்ற
நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை, பின்,
டில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதையடுத்து, தண்டனையை எதிர்த்து,
முகேஷ் மற்றும் பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச
நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபணம் ஆகி விட்டது,தூக்கில் போட என்ன தயக்கம்? நீதி வழுவுகிறது? பின்னணியில் பணமா அரசியலா ?
கிரிகெட் கிளப்பில் பஞ்ச கச்சத்திற்கு அனுமதி ஆனால் வேட்டிக்கு அனுமதி இல்லை ! யாகம் ஹோமம் பூஜை ?
by வே.மதிமாறன்
‘தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி சென்றதால் நீதிபதிக்கே அனுமதி மறுப்பு.’- செய்தி.
ஆனால், வேட்டியை பஞ்ச கச்சமாக கட்டி சென்றவர்களுக்கு அனுமதி.
ஆமாங்க, கிரிக்கெட் கிளப் உள்ளே நடக்கும் பூஜை, யாகம், கணபதி ஹோமம்,
புதிய கட்டிட துவக்க பூமி பூஜை, கட்டிட திறப்பு விழா இதையெல்லாம் மந்திரம்
ஓதி நடத்தி வைக்கப் போன அய்யர்; கோட். சூட் போட்டுக்கிட்டா போயிருப்பாரு?அத்தியூர் விஜயா மரணம் ! புதுவை போலீசாரால் பாலியல் சித்ரவதை அனுபவித்த பெண் போராளி !
செஞ்சியை அடுத்த அத்தியூரை சேர்ந்தவர் விஜயா, பழங்குடியின பெண்.
புதுவையில் நடந்த ஒரு கொள்ளையில் விஜயாவின் பெரியப்பா மகன் வெள்ளையன் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து 1993–ம் ஆண்டு புதுவை போலீசார் அங்கு விசாரிப்பதற்காக சென்றனர். அப்போது போலீசார் தன்னை கற்பழித்ததாக விஜயா புகார் கூறினார். இந்த சம்பவம் புதுவை மற்றும் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், புதுவை பெரியக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நல்லாம்பாபு மற்றும் போலீசார் ராஜாராமன், சசிக்குமார், பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 11–8–2006–ல் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட புதுவை போலீசார் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கங்கையில் கழிவுகளைக் கலக்கும் 48 தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது
கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று
கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையிலும்,
அதனுடைய துணை நதிகளிலும் ஏற்கனவே சுத்தப்படுத்தும் பணி
நடைபெற்றுவரும்போதும் நேற்றைய கூட்டத்தில் இது பற்றிய தகவல்கள்
வெளியிடப்பட்டன.
அப்போது மொத்தம் 764 மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் 501 மில்லியன் கழிவு நீரை
தினமும் வெளியேற்றுகின்றன என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தெரிவித்தது.
வீடுதோறும் சினிமா' புதிய நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் சேரன்
இந்நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், "சினிமா டு ஹோம்' நிறுவனத்தின் நிறுவனருமான சேரன் பேசியது:
தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட பலவற்றால் சினிமா தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தவிர்த்து மற்ற படங்களுக்கு திரையரங்குகள் இல்லாத நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது. சினிமாவை நம்பி பயணம் செய்பவர்களில் இன்னும் நிறைய பேர் கரை சேரவில்லை. இருந்தாலும் அடுத்த பயணத்துக்கான படகுகளை தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
வேடிக்கை பார்த்த போலீஸ் ! பஸ் மோதி கால் துண்டிக்கப்பட்டவர் நடுரோட்டில் துடித்த அவலம்: உயிருக்கு போராடியவரை
திருநெல்வேலி: நெல்லை அருகே அரசு பஸ் மோதியதில் கால்
துண்டிக்கப்பட்டவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மீட்க
முயற்சிக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர்.>திருநெல்வேலியில்
இருந்து நேற்று தென்காசிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆலங்குளம்,
பாவூர்சத்திரத்திற்கு இடையே சாலைப்புதுாருக்கு மதியம் மதியம் 1.20 மணிக்கு
வந்தது. எதிரே பைக்கில் வந்த பாவூர்சத்திரம் பிஸ்கட் நிறுவனத்தில்
பணியாற்றும் கல்லுாரணி முருகன்,45, மீது மோதியது. இதில் அவரது வலது
முழங்காலுக்கு கீழ் பகுதி துண்டானது. இதனால் இருபுறமும் வாகனங்கள்
நிறுத்தப்பட்டன. பஸ்சில் வந்தவர்கள், 108 இலவச ஆம்புலன்ஸ்க்கு தகவல்
தெரிவித்தனர். 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆம்புலன்ஸ் வரவில்லை. கிராமங்களில், குறிப்பாக படிக்காத மேதைகள் இன்னும் மனிதாபிமானத்துடன் தான்
பெரும்பாலும் இருக்கிறார்கள். படித்தவர்களிடம் தான் அந்த போக்கு குறைந்து
வருகிறது. எல்லாவற்றிலும் எச்சரிக்கை குணம்
திங்கள், 14 ஜூலை, 2014
குஜராத் படுகொலைகளுக்கு எதிராக வழக்காடுவது சாத்தியமா ?
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு.
குஜராத் அரசால் பொய்வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்).
பயங்கரவாதி ஹபீஸ் சயீதுடன் ராம்தேவ் நண்பர் சந்திப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் அமளி
யோகா குரு பாபா ராம்தேவின் நெருக்கமான நண்பரும், பத்திரிகையாளருமான பிரதாப்
வைதிக், பயங்கரவாதி ஹபீஸ் சையீதை சந்தித்து பேசிய விவகாரம்,
மாநிலங்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்
என்று கூறப்படும் நிலையில், அவரை சென்று சந்தித்த பிரதாப் வைதிக்கை, தேச
நலனை காத்திட கைது செய்ய வேண்டும் என்று அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள்
அமளியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவையில் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்,
பயங்கரவாதிக்கும் பிரதாப் வைதிக்கும் நடந்த சந்திப்பிற்கு அரசுக்கு தொடர்பு
உள்ளதா? என்று விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தணிக்கை குழுவில் போதிய உறுப்பினர்கள் இல்லை ! கியூவில் படங்கள் தாமதம் !
சென்னை:
சென்சார் போர்டில் உறுப்பினர்கள் பற்றாக்குறையால் சான்றிதழுக்காக தமிழ்
படங்கள் காத்திருக்கின்றன.இம்மாத வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட பல தமிழ்
படங்கள் ரிலீஸ் தேதி முடிவு செய்ய முடியாமல் காத்திருக்கின்றன. இதற்கு
காரணம் அப்படங்கள் சென்சார் ஆகாததுதான். சென்சார் குழுவில் சான்றிதழ்
வழங்கும் உறுப்பினர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 படங்கள்
மட்டுமே சென்சார் செய்யப்பட்டது. இன்னும் பல படங்கள் சென்சாருக்காக நீண்ட
கியூவில் காத்திருக்கிறது. சான்றிதழ் பெற்ற பிறகுதான் அரசின் வரி
சலுகைக்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதால் தயாரிப்பாளர்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் உள்ள திரைப்பட தணிக்கை குழு அமைப்பில் 2வது
பெரிய அமைப்பு சென்னையில் அமைந்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 13ம் தேதி
தொடங்கி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 380 படங்கள் சென்சார்
செய்யப்பட்டது.
ஸ்டாலினின் உப்பு சப்பில்லாத பேச்சு ! கலைஞர் வருத்தம் அல்லது கண்டனம் ?
சென்னை மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தி, கவர்னர் அலுவலகம் நோக்கி, தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடந்தது.'இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில், உணர்ச்சிகரமாக பேசவில்லை' என, பேரணியை தலைமை ஏற்று நடத்திய, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை, கட்சித் தலைவர் கருணாநிதி கண்டித்து உள்ளார்.
இதுபற்றி, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: 'மவுலிவாக்கத்தில், 11 கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதில், பல தவறுகள் நடந்திருக்கின்றன. அதனால், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை ஏற்காத தமிழக அரசோ, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது.
இருப்பினும்,சி.பி.ஐ., விசாரணை கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த, 12ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை, தி.மு.க., நடத்தியது.ஏராளமான தொண்டர்கள், அந்த பேரணியில் பங்கேற்றனர். ஆனால், பேரணியை துவக்கி வைத்து, உரையாற்றிய கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், சில நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
அந்த பேச்சும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு இல்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18 பேர்
புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் அரசுகளுக்கு எதிராக,
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்தி வரும் சண்டையில், பயங்கரவாதிகளுக்கு
ஆதரவாக, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்
தெரிய வந்துள்ளது.மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், 20
ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக இருக்கும், பஷார் அல் - அசாத்துக்கு எதிராக
அந்நாட்டு மக்கள், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அதில், அல் -
குவைதா ஆதரவு பயங்கரவாதிகளும் சேர்ந்து கொண்டுள்ளதை அடுத்து, அங்கு பயங்கர
ரத்தக்களறி நடைபெற்று வருகிறது.அது போல், ஈராக்கிலும், பிரதமர் அல் -
மாலிகி தலைமையிலான அரசுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள்
சண்டையிட்டு வருகின்றனர்.இந்த பயங்கரவாத குழுக்களில், தமிழகம்,
கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 18 பேர்
இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இருவர், தானே நகரைச் சேர்ந்தவர்கள் என்பதை
பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்து உள்ளனர்.பயங்கரவாதிகளுடன்
இணைந்திருப்பதில் பெரும்பான்மையினர், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
தான் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில், அல் - குவைதா, தலிபான்
மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்பில், இந்தியா
போன்ற பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துள்ளதாக, அவ்வப்போது
தகவல்கள் வெளியாகிஉள்ளன. dinamalar.com
ஞாயிறு, 13 ஜூலை, 2014
மேனகா காந்தி : சிறுவர்களுக்கான தண்டனை வயது 16 ஆக விரைவில் குறைப்பு! விரைவில் சட்ட திருத்தம் !
டெல்லியில் நடந்த பாலியல் பயங்கரவாதத்தின் பின் பலரும் சிறுவர் தண்டனை வயதை பதினாறாக குறைக்குமாறு கோரிக்கைகள் விடுத்தனர். ஏனெனில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜோதி சிங்மீது அதிகப்படியான பாலியல் பலாத்காரம் புரிந்து அவரின் மரணத்திற்கு காரணமானவன் அதன் பதினாறு வயது சிறுவன்தான் . ஆனாலும் காங்கிரஸ் அரசு அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை . அதன் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தான், தற்போது மகளிர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மேனகா காந்தி அவர்கள் இன்று சென்னையில் பேசும் பொழுது விரைவில் தண்டனைக்கு உரிய வயது எல்லை பதினாறாக குறைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கேரளா இடுக்கி மாவட்ட தமிழ் கல்வி கேள்விக்குறியாகிறது ? தமிழ் ஆசிரியர்கள் பணிநீக்கம் !
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த
லட்சக்கணக்கானவர்கள் தங்கி அங்குள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில்
பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஏராளமானோர் அங்குள்ள ஓட்டல்கள், வர்த்தக
நிறுவனங்களிலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அங்குள்ள
தமிழ்வழி பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
தமிழ்வழி கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தினச்சம்பள அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழ்வழி கல்வி பயிலும் மாணவ–மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக தினச்சம்பள அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
நோயாளிகளுக்கு பொருத்தும் சாதனங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் மருத்துவமனைகள்
நோயாளிகளுக்கு பொருத்தும் மருத்துவ சாதனங்களான ஸ்டென்ட்ஸ்(ட்யூப் வடிவிலான
குழாய்), இம்ப்ளான்ட்ஸ்(பிளேட்டுகள் மற்றும் இதர சாதனங்கள்), பேஸ் மேக்கர்
போன்றவைகளுக்கு மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் விலை கேட்டாலே மாரடைப்பு
ஏற்பட்டுவிடும்.
அதன் வழக்கமான விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்த்தி
மருத்துவர்கள் கொள்ளை லாபம் பார்ப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த சாதனங்கள் வெளிச்சந்தையில் கிடைக்காததால், நோயாளிகளும் இந்த விலைகளை
சரிபார்க்க முடியாது. அதனால் பணயக்கைதி நிலையில் உள்ள நோயாளி மருத்துவர்கள்
கேட்கும் தொகையைத் தான் கட்டவேண்டி இருக்கிறது.
அநேக மருத்துவமனைகளில் இந்த சாதனங்கள் அன்றாடம் பல நோயாளிகளுக்கு
பொருத்தப்படுவதால் மருத்துவமனையின் ஒட்டுமொத்த லாபத்தில் 30 சதவிகித தொகையை
இச்சாதனங்கள் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
ராமானுஜன் திரைப்படம் ! சாஸ்திரங்களால் சாகடிக்கப்பட்ட மேதையின் கதை இது !
தப்பியோட முயன்ற தொழிலாளர்களின் கையை வெட்டி தண்டனை கொடுத்த முதலாளி. ஆந்த்ராவில் கொத்தடிமைகள் !
உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இன்னும் அடிமைத்தனம் மட்டும்
ஒழியவில்லை என்பதற்கு அவ்வப்போது ஒருசில எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள்
நடந்து வருகின்றன.
ஐதராபாத்தின் இருந்து 150 கிமீ தொலைவில்
உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள செங்கல்சுள்ளையில் ஒரிசாவில் இருந்து
பிழைக்க வந்த ஒரு கும்பல் வேலைபார்த்து வந்தது.
மிகவும்
கடினமான வேலையாக இருந்ததாலும், கூலி சரியாக கிடைக்காததாலும், அங்கிருந்து
12 பேர் கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களுள் மூன்று பேர்
செங்கல்சுள்ளை முதலாளியிடம் பிடிபட்டனர்.தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவியவர் சீகன் பால்கு தமிழகம் வந்த 308ம் ஆண்டு தின விழா -
தரங்கம்பாடி:சீகன் பால்கு தரங்கம்பாடி வந்த 308ம் ஆண்டு விழா
கொண்டாடப்பட்டது. நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு ஜெர்மனியை சேர்ந்த பர்த்தல
மேயு சீகன்பால்கு, நண்பர் ஹென்றிக் புளுச்சோவுடன் 1706ம் ஆண்டு ஜூலை 9ம்
தேதி கடல் மார்க்கமாக வந்தார். தரங்கம்பாடியில் தங்கி மத போதகராக இருந்து
பிரசாரம் செய்ததோடு, பெண் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தினார். தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டு தமிழ் படித்த அவர், தமிழில்
அச்சுக்கூடத்தை உருவாக்க முயற்சி எடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக
தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடத்தை நிறுவினார்.
புதுவை கவர்னர் கட்டாரியா பதவி நீக்கம் ! காஞ்சி சங்கராச்சாரியாரின் சங்கரராமன் கொலைவழக்கு மீளாய்வு காரணம் ?
சென்னை, ஜூலை 13 - மத்தியில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்றதும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்தது. இதற்காக பல கவர்னர்களுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சில கவர்னர்கள் பதவியில் இருந்து விலகினார்கள்.
ஆனால் புதுவை கவர்னருக்கு மத்திய அரசு எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து கவர்னராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதுவை கவர்னரை மாற்றும்படி முதல்வர் ரங்கசாமி மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
பாரிமுனையில் பயங்கர தீ விபத்து ( படங்கள்
சென்னை
பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து
ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்தால் பாரிமுனையில் உள்ள
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
தீணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கரும்புகையுடன்
தீப்பற்றி எரிந்ததால் பாரிமுனை புகை மண்டலமாக மாறியது. வங்கியின்
2வது தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்
வந்துள்ளது. பற்றி எறியும் தீயில் கணிப்பொறி மற்றும் மின்சாதனங்கள்
வெடித்து சிதறின. பாரிமுனையில்
உள்ள பாரம்பரிய கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. தீ
விபத்தால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திமுக மெகா கூட்டணி அமைக்க முயற்சி ?
முதல்வர் ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக, எதிர்க்கும் தலைவர்களை, தன்
தலைமையில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி
ஈடுபட்டுள்ளார்.அடுத்த முதல்வர் வேட்பாளர் போட்டியில், தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, ம.தி.மு.க., பொது செயலர்
வைகோ போன்றவர்கள் இடம் பெற்றிருப்பதால், தி.மு.க., அமைக்கும், 'மெகா'
கூட்டணி வியூகம் கைக்கூடுமா? என்ற கேள்வி, கட்சி வட்டாரங்களில்
எழுந்துள்ளது.வரும்
2016 சட்டசபை தேர்தலில், 234 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், எதிர்க்கட்சி
எம்.எல்.ஏ., ஒருவர் கூட இடம் பெறாத சட்டசபையாக, தமிழகம் இருக்க வேண்டும்
என, முதல்வர் ஜெயலலிதா, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










