செவ்வாய், 15 ஜூலை, 2014

Delhi Gang Rape குற்றவாளிகள் இருவரின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், இரண்டு பேரின் தண்டனைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.டில்லியில், 2012 டிச., 16ல், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி ஒருவர், ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் துாக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த வழக்கில், வினய் சர்மா, அக் ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் முகேஷ் என்ற நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை, பின், டில்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதையடுத்து, தண்டனையை எதிர்த்து, முகேஷ் மற்றும் பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றம் நிரூபணம் ஆகி விட்டது,தூக்கில் போட என்ன தயக்கம்? நீதி வழுவுகிறது? பின்னணியில்  பணமா அரசியலா ?


இந்நிலையில், தண்டனை பெற்ற மற்ற இரண்டு பேரான, வினய் சர்மா மற்றும் அக் ஷய் தாக்கூர் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, தடை விதிக்க வேண்டும் மற்றும் டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தனர்.

இந்த மனுவை நேற்று விசாரித்த, நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் ரமணா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில், இரண்டு பேரின் தண்டனைக்கு, இந்த நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதனால், அதே உத்தரவு இவர்களுக்கும் பொருந்தும். வினய் சர்மா மற்றும் அக் ஷய் தாக்கூரின் மரண தண்டனைக்கும் தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: