வியாழன், 3 ஏப்ரல், 2014

Charu Nivedita: அப்பாவிகளை மடக்கி கொள்ளை அடிக்கும் வங்கிகள்


உப்புப் பெறாத சமாச்சாரம் என்பார்கள் அல்லவா?  அப்படிக் கூட இல்லை…  நம் உடம்பிலிருந்து உதிரும் முடி இருக்கிறதல்லவா, அதற்குக் கூட லாயக்கில்லாத சமாச்சாரம் என் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
யாரோ ஒரு பெண் அதிரம்மியமான குரலில் உங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி க்ரெடிட் கார்ட் வேணுமா என்றார்.  சரி என்றேன்.  கிடைத்தது.  அதை நான் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன்.  ஒருநாள் ஏதோ ஒரு விமான டிக்கட் எடுக்க பயன்படுத்தித் தொலைத்து விட்டேன்.  டெபிட் கார்டில்தான் எல்லா வேலையையும் செய்வேன்.  அன்றைக்கு என் போதாத காலம் க்ரெடிட் கார்டில் செய்து விட்டேன்.  15,000 ரூ.  மாதா மாதம் பில் வந்தது.  மாதா மாதம் கட்டினேன்.  ஆனால் சில மாதங்களில் மறந்து போவேன்.  அப்படி மறந்து போவதெல்லாம் வட்டி போட்டு, வட்டிக்கு வட்டி வட்டிக்கு வட்டிக்கு வட்டிக்கு வட்டிக்கு வட்டி என்று இப்போது மாதம் கட்ட வேண்டிய தொகை பெரும் தொகையாகி விட்டது.  சரி, மொத்தமாகக் கட்டித் தொலைத்து இந்தக் கொடுமையிலிருந்து மீள்வது என்று முடிவு செய்து போன் செய்து கேட்டால் அது என்னை மனநோய் மருத்துவமனைக்கே அனுப்பி விடும் போல் தெரிகிறது.

பணத்தாசை பிடித்த இளையராஜாவின் கச்சேரிக்கு 2.5 லட்சத்தில் டிக்கெட் வாங்கிய அப்பாவி ரசிக


மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் இளையராஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் டிக்கெட்டை ரூ 2.5 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒரு இசை ரசிகர். அவருக்கு இளையராஜாவே தன் கையால் இந்த டிக்கெட்டை வழங்கினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இளையராஜா. அவருடைய மகன் கார்த்திக் ராஜா ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ 1 லட்சத்துக்கும் அதிகமாக விலைகொடுத்து டிக்கெட் வாங்குவோருக்கு இளையராஜாவே தன் கையால் டிக்கெட்டைத் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த இளையராஜாவின் ரசிகர் ஒருவர் ரூ 2.5 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

முஷரப் அனுமதியோடு பாக். முழுவதும் ப்ரீயாக வலம் வந்தார் பின் லேடன்...

வாஷிங்டன்: முஷரப்பிற்குத் தெரிந்தே பாகிஸ்தான் முழுவதும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் சுதந்திரமாக பயணம் மேற்கொண்டார் என கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் தனது புத்தகத்தில் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கி இருந்து ‘தி நியூயார்க் டைம்ஸ்'க்கு செய்திகள் அனுப்பி வந்தார். அவர் தற்போது தி ராங் எனிமி: அமெரிக்கா இன் ஆப்கானிஸ்தான் 2001-2004 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அவரது புத்தகத்தில் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தங்கி இருந்த இடம் அப்போதைய அதிபர் முஷரப்புக்கு முன்னதாகவே தெரியும் என பரபரப்புக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்தால் முஷாரப் காலத்தில் நடந்த பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பாகிஸ்தானில் ஒசாமா பதுங்கி ஒளிந்து கொண்டு இருக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் என்றும் பரபரப்புக் கருத்துக்களை தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் கார்லோட்டா.

அழகிரி ஹிட் லிஸ்ட்: அடுத்து டி.ஆர். பாலு!


ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது குறித்த காங்கிரஸ் முடிவு தெரிவிப்பதற்குள் டி.ஆர்.பாலு போன்றவர்கள், தி.மு.க. தலைவரிடம் தவறான தகவல்களைத் தெரிவித்து தி.மு.க. அமைச்சர்களை அவசர அவசரமாக ராஜினாமா செய்ய வைத்தனர். இந்த முடிவு மத்திய அமைச்சரான எனக்கே தெரியாது.
டி.ஆர்.பாலு என்ன எம்.ஜி.ஆரா? கருணாநிதியா? நினைத்த தொகுதிகளில் நிற்பதற்கு?
ஏற்கெனவே நின்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏன் நிற்கவில்லை? அங்குள்ள மக்களுக்கு தொகுதியில் நல்லது செய்திருந்தால் ஏன் வேறு தொகுதியைத் தேட வேண்டும்? இந்தத் தொகுதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
பழனி மாணிக்கத்தைத் தவிர தஞ்சாவூரில் கட்சிக்குள் உழைத்தவர்கள் வேறு யாருமில்லையா? டி.ஆர்.பாலு 10 கப்பல்களுக்குச் சொந்தக்காரர். அவரை சென்னையில் மாவட்டச் செயலாளர் தேர்தலிலே நாங்கள்தான் வெற்றிபெற வைத்தோம்.
அவர் எப்படி தேர்தலில் ஜெயிக்கப் போகிறார்? எவ்வளவு பணம் கொடுத்து தங்சையில் சீட் வாங்கினாரோ, தெரியவில்லை.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாம் மேலே வர என்ன செய்ய வேண்டுமோ அதை நன்றாகச் சிந்தித்துச் செய்யுங்கள். இது நம்முடைய கட்சி. நாம்தான் தி.மு.க.. அப்புறம் எதற்குத் தனிக்கட்சி?
தனது தந்தை ஷாஜஹானை சிறை வைத்து ஔரங்கசீப் ஆட்சியைப் பிடித்ததுபோல தி.மு.க. தலைவர் கருணாநிதியை சிறைவைத்து அவரது பதவியைப் பிடிக்கச் சிலர் முயல்கின்றனர்.

மாயமான விமானம் ஆப்கானிஸ்தானில்: சொல்கிறது ரஷ்ய செய்தித்தாள்

A Russian media website is claiming that Malaysia Airlines Flight MH 370 was “located” near Kandahar, Pakistan.
A source told the website MK.ru that the plane is located on a “rural” road with a broken wing. It also claimed that “all passengers [are] alive and were divided to stay in “mud huts.”>MK.ru is considered a mainstream media outlet in Russia, but has a pro-Vladimir Putin stance.
The article didn’t elaborate too much further on the matter.“Eight days after the Boeing 777 vanished, The Independent has learnt that Malaysian authorities are seeking diplomatic permission to investigate a theory that the plane was flown to one of a number of Taliban strongholds on the Afghan border in North West Pakistan,” the paper added. The report was published just eight days after the plane went missing.
மாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், பாகிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது.

வழக்கம் போல் ஜெ., வாய்தா கேட்டார் ! 5ம் தேதி ஆஜராக உத்தரவு


சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா வாங்குவது போல் சென்னையில் நடந்து வரும் வருமானவரி செலுத்தாத வழக்கிலும் ஜெ., இன்று ஆஜராகவில்லை. இதற்கிடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., வரும் சனிக்கிழமை பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1991 -92 மற்றும் 1992-93 ஆண்டுகளில் ஜெ., மற்றும் அவரது தோழி சசி ஆகியோர் இணைந்து சசி என்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வந்தனர் . இந்த நிறுவனம் தொடர்பான வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் தமிழக முதல்வர் ஜெ.,இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அரசு ஆடிட்டராக இருந்தவருக்கு விழுந்த அடி, சந்திரலேகா எம்.எல்.ஏவுக்கு கிடைத்த ஆசிட் வீச்சு வரிசையில் ஏதாவது கிடைக்க வாய்ப்பு இருக்குமா?  நீதிமன்றத்தையும் கூட ஒன்றுக்கும் ஆகாமல் ஆக்கிய பெருமை முதல்வரையே சேரும்

மாணவி கற்பழித்து கொலை; காதலனை அடித்துக்கொன்ற உறவினர்கள்

மாணவி கற்பழித்து கொலை;
காதலனை அடித்துக்கொன்ற உறவினர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ளது மலையாலபட்டி கிராமம். இங்குள்ள கருங்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது-15), நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11- வகுப்பு படித்து வருகிறார்.கந்தசாமியின் உறவுக்கார பையன் சின்னராசு (வயது-18) இவர் சேலம், வாழப்பாடி போன்ற வெளியூர்களில் கட்டிட கொத்து வேலைக்கு சென்றுவருகிறார். இவர் சங்கீதாவை காதலித்து வந்துள்ளார். இரண்டு குடும்பத்தினருமே உறவினர்கள் என்பதால் இதைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி பள்ளிக்கு சென்ற சங்கீதா மாலையில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை, அதே நேரத்தில், சின்னராசுவும் ஊரிலிருந்து காணாமல் போய்விட்டார். வழக்கமாக சின்னராசு வேலைக்கு போகும் இடங்களிளெல்லாம் போய் தேடிய உறவினர்கள் சின்னராசு-சங்கீதா இருவரும் ஓடிப்போய் விட்டதாக முடிவு செய்துகொண்டு அவர்களாகவே திரும்பி வரட்டும் பிறகு பார்த்க்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு காவல் நிலையத்தில் கூட புகார் கொடுக்காமல் இருந்துகொண்டனர்..> இந்த நிலையில், நேற்று மாலை நான்கு மணிக்கு சின்னராசு மட்டும் தனியாக ஊருக்கு வந்துள்ளார். அப்போது, கந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் சங்கீதா எங்கே ? என்று கேட்டபோது, எனக்கு தெரியாது என்று சின்னராசு சொல்லியுள்ளார்.
பின்னர், அங்கிருந்த சிலர் சின்னராசுவை பிடித்து உதைத்து விசாரித்ததில், தான் வெளியூர் சென்ற அன்று பக்கத்திலிருக்கும் ஒரு கரட்டுப்பகுதியில் சங்கீதாவை பார்த்ததாக சொல்லியுள்ளார். அங்கிருந்த சங்கீதாவின் உறவினர்கள், சின்னராசுவை கூட்டிகொண்டு அவர் சுட்டிகாட்டிய மலைப்பகுதிக்கு கூட்டிபோய் பார்த்தபோது, ஒரு பாறையின் மீது மாணவி சங்கீதா பிணமாக கிடந்துள்ளார்.

ஜெயலலிதாவிடம் சொத்துக்களை பறிகொடுத்தவர்கள் கண்ணீர் வீணாகாது ! விரைவில் ஜெயிலு லலிதா

914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள்,ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளிகளாக இருப்போருக்கு சொந்தமான எண் 31ஏ, போயஸ் கார்டன், எண் 36 போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, ஐதராபாத் திராட்சை தோட்டம், கொடைக்கானல் பங்களா, கொடநாடு தேயிலை தோட்டம், சென்னையில் உள்ள கிண்டி, தியாகராய நகர், அண்ணாநகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அரும்பாக்கம், பரமேஸ்வர்நகர், மந்தைவெளி. நுங்கம்பாக்கம், சாந்தோம், செய்யூர் உள்பட பல பகுதியில் உள்ள வீடு, பங்களா, அலுவலகங்கள்,ஒரு ரூபாய் சம்பளத்தில் 5000 கோடி ரூபாய் சொத்துக்கள் !


பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்காக நில உரிமையாளரை மிரட்டி சிறுதாவூரில் ஒன்றரை ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் பவானிசிங் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த 914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88 லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

விஜயகாந்த் : 'ஏய் ராஜீவ்காந்தி' என அழைத்து கதிகலங்க வைத்தவர் வைகோ ! இத வேற வீரம்னு சொல்றானே பாவி ?


சிவகாசி: நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தியை.. ஏய் ராஜீவ்காந்தின்னு பெயர் சொல்லி கதிகலங்க வைத்தவர் அண்ணன் வைகோ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் புகழாரம் சூட்டி வாக்கு சேகரித்தார். விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ஆதரித்து சிவகாசி நாராயணபுரம் பகுதியில் விஜயகாந்த் பேசியதாவது: அதிமுக, திமுகவுக்கே மீண்டும் மீண்டும் வாக்களித்து உங்களுக்கு கிடைத்தது என்ன? எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அனைவரும் இந்தியாவை வல்லரசாக்க, நரேந்திர மோடியை பிரதமராக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில்  விஜயகாந்த் வைகோவுக்கு வாக்கு கேட்பது பெருமிதம் முதன்முதலாக இஸ்லாமியர்களுக்காக வாஜ்பாயிடம் பேசியவர் வைகோ. அவருக்கு வாக்கு சேகரிக்க வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைவிட வயதில் மூத்த அண்ணன் வைகோவுக்கு வாக்கு சேகரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 5 வி விஜயகாந்திற்கு முதல் எழுத்து வி. வைகோவிற்கு முதல் எழுத்து வி. விருதுநகருக்கு முதல் எழுத்து வி. வெற்றிக்கு முதல் எழுத்து வி. வாழ்த்துக்கு முதல் எழுத்து வி. இப்படி ஐந்து 'வி'யும் சேர்ந்து வைகோவை வெற்றி பெற வைக்கும். ம்ம் வீழ்ச்சிக்கும் வி எழுத்துதான் கூடவே வீணர்களுக்கும் வி எழுத்துதான் மனசுல வசுங்கள்  

Veltech ஆவடி வேல்டெக் ரங்கராஜன் ஆசியுடன் போலீஸ் அடக்குமுறை


யார் செத்தாலும் போஸ்டர் ஒட்டாதே!
கேட்டா ஜெயிலு, கிடைக்காது பெயிலு,
ஆவடி வேல்டெக் ரங்கராஜனின் ஆசியில் போலீசு ராஜ்ஜியம்

வேல்டெக் ரங்கராஜன்
ன்றைய சூழலில் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதிலும் குறிப்பாக சென்னை ஆவடி வேல்டெக் கல்லூரி தன்னளவில் ஒரு தனி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மாணவர்கள் வகுப்பில் சக மாணவிகளுடன் ஏன் மாணவர்களுடன் கூட பேச முடிவதில்லை, இது போன்ற சூழலில் தான் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவை தான் பெற்றோர் மத்தியில் ஒழுக்கமாக காட்டப்பட்டு வருகின்றது. இதில் வேலை செய்யும் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போன்றோரின் நிலையும் கொத்தடிமைகளைவிட மோசமாக உள்ளது. அவர்களின் சான்றிதழ்களை நிர்வாகம் பறித்துக் கொண்டு மிரட்டியும் வருகின்றது. இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக சாந்தி என்ற பேராசிரியர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உதவியுடன் போராடினார், தற்போது நீதிமன்றத்திலும் கூட உறுதியாக போராடிக் கொண்டு இருக்கிறார்.

வைகோவின் வீட்டில் விஜயகாந்த்: அரசியலுக்கு அப்பாற்பட்ட சகோதர பாசத்தின் வெளிப்பாடு ! ரண்டு ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்யர்களின் சந்தர்ப்ப வாத பாசம் வேஷம்

கலிங்கப்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த விஜயகாந்தை வரவேற்கிறார் வைகோ. அருகில் வைகோவின் தாயார்.கலிங்கப்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு வந்த விஜயகாந்தை வரவேற்கிறார் வைகோ. அருகில் வைகோவின் தாயார்.
திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியிலுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை மாலை சென்றார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கு நடைபெற்ற சந்திப்பில் சகோதர பாசம் வெளிப்பட்டது.
கலிங்கப்பட்டியிலுள்ள வைகோவின் வீட்டுக்கு முதல்வர் ஜெய லலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வந்து சென்றி ருக்கிறார்கள். 
வைகோ தாயிடம் ஆசி இது ஒண்ணுதான் குறைச்சல்  அட போங்கப்பா போரடிக்குது 

குஜராத்தில் இஸ்லாமியர்கள், தலித்துகள் காங்கிரஸுக்கே ஆதரவு: கருத்து கணிப்பு


அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளில் பெரும்பான்மையானோர் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆதரவு என்று தெரிவித்திருப்பதாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல மாநிலங்களில் நடத்தப்பட்டதைப் போன்றே குஜராத்திலும் பல்வேறு அம்சங்களில் சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்பை நடத்தியது.  இதில் குஜராத் மாநிலத்திலேயே மோடி பிரதமராக 46% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இஸ்லாமியர்களில் மிகப் பெரும்பான்மையோர் காங்கிரஸையே ஆதரிப்பதாகவும் இது சொல்கிறது. 80% இஸ்லாமியர்கள்.. குஜராத்தில் வாழும் 80% இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் 15% இஸ்லாமியர்கள்தான் பாஜகவை ஆதரிப்போம் என்று கூறியுள்ளனர். தலித்துகளில் 70% இதேபோல் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிகழக் கூடியதாக சொல்லப்படும் இந்த மாநிலத்தில் தலித்துகளில் 70% காங்கிரஸை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். உயர்ஜாதி, பிற ஜாதியினர் பாஜகவுக்கு அதே நேரத்தில் உயர்ஜாதியினர், படேல் ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்டோரில் 70%க்கும் அதிகமானோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதேச ரீதியாக.. சவுராஷ்டிரா, தென் குஜராத் பாஜகவுக்கு முன்னணியாம். மத்திய குஜராத், காங்கிரஸுக்கு கை கொடுக்குமாம். வடக்கு குஜராத்தில் சொற்ப வித்தியாசத்தில் பாஜக முன்னணி பெறலாமாம்.
tamil.oneindia.in

சோர்ந்துவிட்ட திமுகவின் உண்மை தொண்டர்கள் ? ஜால்ராக்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின் ?

தமிழகத்தில், 1952, 1967ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களை தவிர, 1996ல் நடந்த தேர்தல் வரை, சட்டசபை தேர்தலும், லோக்சபா தேர்தலும் ஒரே நேரத்தில் தான் வரும். அதனால், எந்த கட்சி சட்டசபையை பிடிக்க இருந்ததோ, அந்த கட்சியின் கூட்டணிக்கே லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்
1996க்கு பின், மத்திய அரசு நிலையாக அமையாததால், தொடர்ந்து 1998லும், 1999லும் லோக்சபா தேர்தல்கள் வந்தன. அதன்பின், தமிழகத்தில் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் தனித்தனியாக நடந்தன. 1999க்கு பின், மாநிலத்தை ஆளும் கட்சி, மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னரே, லோக்சபா தேர்தல் வருகிறது. அதனால், லோக்சபா தேர்தல், மாநிலத்தை ஆளும் கட்சிக்கு அரையிறுதி தேர்வை போல் அமைந்து விடுகிறது. 1991 முதல், வழக்கமாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி தான் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்து வருகின்றனர். அதனால், அரைஇறுதி தேர்வாக வரும் லோக்சபா தேர்தலில், அவை வெற்றி பெறுவது இல்லை. உதாரணமாக, 1998ல் வந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றது. உஷாரான தி.மு.க., அடுத்து 1999ல், அ.தி.மு.க., சதியால் வந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, அமோகமாக வென்றது.
அதற்கு பின், லோக்சபா தேர்தல்களில் தி.மு.க.,விற்கு தோல்வியே இல்லை. 2004ல், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போதும், 2009ல் மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதும், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வே வென்றது.

நாத்திகர்களை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கலந்து கொள்ள சவுதியில் இருந்து பலர் செல்கின்றனர். அங்கு அதிபருக்கு எதிராக போராடிவரும் குழுவினருடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
சிரியாவில் போராட்டம் நடத்தி விட்டு தங்கள் நாட்டுக்கு வரும் சவுதி வாசிகள் இங்கும் மன்னராட்சி முறைக்கு எதிராக புரட்சி மற்றும் போராட்டங்களில் இறங்கி விடக்கூடாதே... என்ற அச்சத்தில்தான் மன்னர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த புதிய அறிவிப்பின்படி, சவுதியில் அல்லது எந்த வெளிநாட்டிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை தழுவி நடைபெறும் ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், அதிருப்தி தெரிவிப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் ஆகியோர் இறை மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்) என்று கருதப்படுவார்கள்.
பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இத்தகைய நாத்திகவாதிகளை பயங்கரவாதிகளாகக் கருதி, 3 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த புதிய அறிவிப்பு வழிவகை செய்கிறது.

அழகிரி முன்னிலையில் இணைந்த அ.தி.மு.க.வினர்! அ.தி.மு.க.வினர் அழகிரி பக்கம் தாவியது ஏன் ?


அ.தி.மு.க. மேடைகளில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் கட்சியில் சேர்வதாக அ.தி.மு.க. தரப்பில் கூறுவது உண்டு. ஆனால், நேற்று மதுரையில் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியை மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் முருகன் தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்குச் சென்று அ.தி.மு.க. உறுப்பினர் கார்டுகளை ஒப்படைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதுதவிர, குருவித்துரை ஊராட்சித் துணைத் தலைவர் பன்னீர், அ.தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 60 பேர் அழகிரியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.ஏங்க மதுரைல என்னங்க நடக்குது ? 

கலைஞர் பிரசாரத்தின் இடையில் அதிருப்தியாளர்கள் குறைகளையும் கவனிக்கவேண்டி உள்ளது , எல்லாம் ஸ்டாலின் உபயம் ?

தி.மு.க., தலைவர், கருணாநிதி தன் இரண்டாவது கட்ட பிரசாரத்தை, வரும், 5ம் தேதி கோவையில் துவக்குகிறார். அன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும், பிரசாரம் மேற்கொள்ளும் போது, காலையில், கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து, 'பஞ்சாயத்து' நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும்படி முடுக்கி விட உள்ளார். மாலையில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, கருணாநிதி வெளியிடும் போது, சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என, பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இதுவரை வேட்பாளர் யாரும் மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. 'இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலை நேரிடலாம் என்ற அர்த்தத்தில்தான், கருணாநிதி அப்படி கூறினார்' என, பொருளாளர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி, தொடர்கதையாகவே உள்ளது. தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி, தனக்கு பிடிக்காத, தி.மு.க., வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என, ஆதரவாளர்களிடம் கூறி வருவதால், தேர்தல் நேரத்தில், அந்த வேட்பாளர்களுக்கு எதிராக, பெரிய அளவில் உள்குத்து வேலைகள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 2 ஏப்ரல், 2014

வடிவேலு: யாராவது படம் தயாரிக்க நினைத்தால் உடனே பயமுறுத்தி ‘வடிவேலுவையா போடுகிறீர்கள், -

சென்னை:‘நான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில்
காமெடி செய்கிறார்கள்என்றார் வடிவேலு.வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ‘தெனாலிராமன்‘. யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
கடந்த இரண்டரை வருடம் நடிக்காமல் ஓய்வு எடுத்தேன். அது எனக்கு தேவைப்பட்டது. எனக்கு வேதனை கிடையாது. மகிழ்ச்சிதான். யாராவது என்னை வைத்து படம் தயாரிக்க நினைத்தால் உடனே அவர்களை பயமுறுத்தி ‘வடிவேலுவையா போடுகிறீர்கள், அவ்வளவுதான்Õ என்று சொல்லி முடக்கினார்கள். தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதை ஏற்றிருந்தால் தமிழ் படத்திலிருந்து வடிவேலு மூட்டை கட்டிக்கொண்டுபோய்விட்டான் என்று கூறி இருப்பார்கள்.

தயாநிதி மாறன் வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகளை ! அதுவும் உயர் சக்தி கொண்ட, மிகவும் வேகமாக இயங்கக்கூடிய லைன்கள்.

மத்திய சென்னை தொகுதியில் 323 என்ற எண் இப்போது அனைவருக்கும்
பரிச்சயம். அதென்னங்க 323?
போதைப் பாக்குக்கு 320ன்னு சொல்வாங்க, போலீஸ்காரங்க, வக்கீல்கள் 320னு (ஐ.பி.சி. 320) சொல்வாங்க. ஆனால், 323 என்றால் என்னன்னு மத்திய சென்னை தொகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் உள்ள மக்களுக்கு அவ்வளாக தெரிய நியாயமில்லை!
323 பற்றி தெரிஞ்சக்கணுமா? அதற்காக நீங்க மத்திய சென்னை தொகுதிக்கு போய் தெரிந்து கொள்ளலாம். அல்லது, கீழே சொல்லப்போகும் விஷயத்தை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பின் அடுத்த தலைமைக்கு யார் பொருத்தமானவர்கள் என்பது தொடர்பாக மாறன் சகோதரர்களின் நாளிதழில் வந்த கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்துக்கும், மாறன் குடும்பத்துக்கும் பெரும் பிரச்னை உருவானது. இதனால், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதற்குப் பின் அந்தத் துறைக்கு மாற்றப்பட்ட ஆ. ராசா 2-ஜி ஊழலில்  திட்டமிட்ட வைகையில் சிக்க வைக்கப்பட்டார் ்.
இதனால்தான், 2-ஜி ஊழலை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்ததில் மாறன் சகோதரர்களின் மீடியா முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டது.
அதற்குப் பின் இரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சமாதானத்தால் கருணாநிதிக்கு இதயம் இனித்தது, கண்கள் பனித்தன. இதில் தயாநிதி மாறனுக்கு இரண்டு கண்களும் பனித்ததோ இல்லையோ, இதயம் நல்லாவே இனித்தது.
2-ஜி வழக்கில் ராஜாவும், கனிமொழியும் மாட்டிக்கொண்டதில் ஏக சந்தோஷமாக இருந்தார் அவர்.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறனுக்கு இனித்த இதயம், ‘டக் டக்’னு அடிக்கத் தொடங்கியது. அங்குதான் வருகிறது, 323!

ஆ.ராசா சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி ! ராசா : நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா ?

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல். | படம்: எம்.சத்தியமூர்த்திநீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல். | படம்: எம்.சத்தியமூர்த்தி
நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.3.75 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவைத் தாக்கல் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, "ஜி அலைக்கற்றைப் பற்றி எல்லாம் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் பேசி வருகிறார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன்பு 102 பக்க விளக்க அறிக்கையை அளித்தேன். அதற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. இதில், நேருக்கு நேர் ஜெயலலிதா விவாதிக்கத் தயாரா என சவால் விடுகிறேன்" என்றார்.
தனது பெயரில் உள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.1.77 கோடி என ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். 2009-ல் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இதன் மதிப்பு ரூ.70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு விவரம்:
ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.1,45,90,709
ஆ.ராசா பெயரில் அசையா சொத்துக்கள் - ரூ.14,87, 419
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.93,93,597
ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையா சொத்துக்கள் = ரூ.14,12,975
மகள் பெயரில் அசையும் சொத்துக்கள் - ரூ.18,15,400.
பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து - ரூ.41,03,540
பரம்பரை சொத்துக்களில் அசையா சொத்துக்கள் - ரூ.14,53,875
மொத்த சொத்து மதிப்பு - ரூ.3,75,42,880    tamil.thehindu.com/

மோடி அலையில் வன்புணர்வுக்கு உள்ளான குமுதம் விகடன் துக்ளக்......


பாஜக கூட்டணி
மிழக ஊடகங்களில் பெரும்பாலனவை அதிமுக, பாஜகவை ஆதரித்து செய்தியா, கருத்தா என்று இனம் காணா முடியாத வகையில் எழுதி வருகின்றன. அம்மாவுக்கு வாக்கப்பட்ட குமுதம் தேர்தல் கணிப்பின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அதிமுக வெல்லுமாம். அதே போல துக்ளக்கும் அதன் நிருபர்களின் வைத்து தொகுதி நிலவரத்தை அதிமுகவிற்கு ஆதரவாக வெளியிடுகிறது.
வைகோ, விஜயகாந்த், மோடி, ராமதாஸ்
இன்று வந்த ஜூவியில் தமிழருவி மணியன் ஐந்து பக்கத்தில் காங்கிரசுக்கு நீதி உபதேசம் செய்கிறார். அடுத்த ஜூவியில் பெண்கள் சர்வேயாம். கண்டிப்பாக மோடியும், பாஜகவும் முதல் இடத்தில் இருக்கும் என்பதை வரும் சனியன்று தெரிந்து கொள்ளலாம். மோடியை கைவிடாத துக்ளக், அம்மாவைதான் முதன்மைப்படுத்துகிறது. கிராமங்களில் மோடி அலை இல்லை என துக்ளக் செய்தியாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி மோடி அலை வீசுவதாக எழுதிய ஜூவியை விட சோ-தான் மோடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய முதல் பிரபலம் என்பது உண்மை.

அன்புமணி மீது கடும் கோபத்தில் ராமதாஸ்! பிரசாரத்திற்கு வருவாரா ? எந்த நேரமும் அய்யா சீறி பாயலாம் ? பயத்தில் கட்சியினர்


டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்கள் மகன்
அன்புமணியுடன் பயங்கர கோபத்தில் உள்ளாராம் , சாதாரண கோபம் அல்ல . கட்சியை விட்டே நீக்கும் அல்லது தானே பிரசாரத்திற்கு போகாமல் விடக்கூடிய அளவும் வெறுப்பில் உள்ளார் . பாஜகவுடன் சேரும் முடிவில் ராமதாஸ் பெரிதாக விருப்பம் காட்டவில்லை அதிலும் விஜயகாந்துடன் சேர்வதென்பது ஒரு துளியும் அய்யாவால் ஏற்று கொள்ள முடியாத தீர்மானமாகும் .அவர் உருவாக்கிய ஜாதிமைபுகள் அடங்கிய சமுதாய கூட்டணி போதிய அளவு வாக்கு வீதத்தை பெற்று தரும் .கூடவே கட்சியின் தனித்தன்மை பேணப்படும் போன்ற கருத்துக்கள் எல்லாம் புறகணிக்க பட்டன.
 அன்புமணியின் விருப்படியே ஒருவேளை வென்றாலும் கட்சியின் மாம்பழ சின்னம் பறிபோக கூடிய ஆபத்து உள்ளது, ஆனால் அன்புமணியோ மாம்பழம் போனால் என்ன கட்சி போனால் என்ன எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கினால் போதும் என்று படு சுயநலமாக உள்ளார் . அய்யாவின் திட்டப்படி சமுதாய கூட்டணி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்கு வீதம் மாம்பழ சின்னத்த்தை தக்க வைத்திருக்கும் , போதாக்குறைக்கு விஜயகாந்த் போன்ற ஒரு கேவலமான சினிமா மசாலாவுடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டி இருக்கே என்ற கோபம் வேறு அய்யாவை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது . சுருக்கமாக சொன்னால் அய்யா ராமதாசும் கலைஞர் அய்யாவும் ஒரே விதமான மன நிலையில் தான் உள்ளனர் . பதவி வெறி பிடித்த ஸ்டாலினும் அன்புமணியும் ஒரு சாபக்கேடான வாரிசுகளாகி விட்டனர் .அங்கே அன்புமணி இங்கே ஸ்டாலின் தந்தைகள் இருவரும் சோகத்தில் ?


ராமன்சிங், சிவராஜ்சிங் சவுகான் போலத்தான் மோடியும் ஒருவர்.. தாக்கும் அத்வானி


மும்பை: மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்றவர் மோடி மட்டும் அல்ல என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது தேர்தல் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் இருந்து நேற்று துவக்கினார்.  அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றவர் மோடிஜி மட்டும் அல்ல. மேலும் இரண்டு பாஜகவினரான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மோடி மத்தியில் ஆட்சி அமைத்து நாட்டின் முகத்தையே மாற்றுவார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டக் கோரி நான் 1990ம் ஆண்டு ரதயாத்திரை கிளம்பியபோது எனக்கு துணையாக வந்தவர் மோடி தான். பிரதமர் மன்மோகன் சிங் அதிகாரமிக்க பதவியில் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார். நாங்களும் மூன்று புதிய மாநிலங்களை உருவாக்கினோம். ஆனால் தெலுங்கானா போன்று பிரச்சனை ஏற்படவில்லை. பொக்ரான் வெடிகுண்டு சோதனைக்கு பிறகு அமெரிக்கா பொருளாதார கட்டுப்பாடு விதித்தபோதிலும் கூட பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தோம் என்றார். அத்வானியின் பிரச்சார கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்த
tamil.oneindia.in

ஆ.ராசா, கனிமொழி மீது விரைவில் குற்றப்பத்திரிகை ! 2ஜி ஸ்பெக்ட்ரம் திட்டமிட்ட சதி !

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்கு சட்ட விரோதமான வழியில் ரூ.200 கோடி வந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யைச் சேர்ந்த சரத்குமார் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக நேற்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, இந்த வழக்கு குறித்த சட்ட ஆலோசனைகள் பெறபட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.  

சிலியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 8.2ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை

தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கடற்கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அருகே உள்ள பெரு மற்றும் ஈக்குவடார் நாடுகளுக்கும் இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம் !

ஜூவி சர்வே
பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்?
மோடிக்கு பகிரங்கமாக பனிக்கட்டி ராகம் வாசிக்கும் ஜூவி இதழ், அதன் ஆசிரியர் திருமாவேலன் குறித்தும் வினவில் விரிவாக எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை ஆயிரக்கணக்கில் படிக்கப்பட்டதோடு, ஊடக உலகிலும் கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. திருமாவேலனது நடுநிலைமை ஊடக தர்மமும் சந்திக்கு இழுத்து வரப்பட்டது.
சைவாள் கஃபேயின் ஊசிப் போன தயிர்சாதம்
விகடனின் சினிமா செய்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அதன் அரசியல் செய்திகள், கட்டுரைகளை இணையத்தில் படிக்கும் வாசகர்களை விட வினவின் கட்டுரைகளை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பது எங்கள் மதிப்பீடு. குறிப்பிட்ட கட்டுரைகள் அந்தந்த வலைத்தளங்களின் இடத்திலிருந்து, சமூக வலைத்தளங்களில் பகிரும் எண்ணிக்கையை வைத்துக்கூட இதை கண்டுபிடிக்கலாம். இப்படி ஜூவியின் நாடி, காவிக் கும்பலின் வெற்றிக்காக துடிக்கிறது என்ற உண்மையை, அதன் மோசடியான நடுநிலைமையையெல்லாம் கேள்விக்குள்ளாக்கியும் கூட இவர்களுக்கு சூடு சுரணை வரவில்லை.