தன்கவுர் : உத்திர பிரதேச பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி,
வழிபாட்டு தலசுவரை இடிக்க உத்தரவிட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்ததாக உ.பி., அரசு கூறி வரும் குற்றச்சாட்டு பொய்யானவை என இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளதால் உ.பி.,அரசின் பொய் குற்றச்சாட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது.துர்கா சஸ்பெண்ட் : மணல் கொள்ளை மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவர் இஸ்லாமிய வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க உத்தரவிட்டதாகவும், அதனால் மத நல்லிணக்கத்தை காப்பதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்ததாக உத்திர பிரதேச அரசு தெரிவித்தது. துர்கா சஸ்பெண்ட்டை எதிர்த்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கழகம், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் சஸ்பெண்ட் உத்தரவை மாற்றிக் கொள்ள முடியாது என சமாஜ்வாதி கட்சியும், மாநில முதல்வர் அகிலேஷூம் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனால் உத்திர பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.





.jpg)











