புதன், 17 ஏப்ரல், 2013

Chennai :குடிபோதையில் மகளை எரித்துக்கொன்ற தந்தை

மீஞ்சூர் அருகே உள்ள கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 48). . இவருடைய மனைவி மேரி (39). இவர் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் நித்யா (19).
ஜெய்சங்கருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் மது குடித்து வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யும்படி கூறியதால் அடிக்கடி வீடு மாறி குடியிருந்து வந்தனர்.
பொன்னேரி பாலாஜி நகரில் இருந்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்து குடியேறினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நித்யாவை பெண் பார்க்க மாப்பிளை வீட்டினர் வந்தனர். அவர்கள் சென்றபிறகு மது குடித்து விட்டு வந்து ஜெய்சங்கர் மகளிடம் தகராறு செய்தார்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து நித்யா உடலில் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் நித்யா வேதனையில் அலறி துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, என் மீது தந்தை ஜெய்சங்கர் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நித்யாவின் தாய் மேரி மீஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரிலும், நித்யாவின் வாக்குமூலம் அடிப்படையிலும் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

நடிகை அம்பிகா, ராதா குடுபத்தினருக்கு இது 17வது ஹோட்டல் ஆகும்.


செங்கோட்டை: புளியரையில் நடிகை அம்பிகா அவரது தங்கை ராதாவுக்கு சொந்தமான ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது.தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை-கொல்லம் மெயின் ரோடு புளியரையில் திரைப்பட நடிகைகள் அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சித்தலங்கரை தவசித்தர் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.அதன் பிறகு அம்பிகாவும் குத்துவிளக்கேற்றினார். நடிகை அம்பிகா, ராதா குடுபத்தினருக்கு இது 17வது ஹோட்டல் ஆகும். ஏராளமான திரைப்படங்கள் நெல்லை மாவட்டத்தில் படமாக்கப்படுகிறது. குற்றாலத்தில் தங்கும் திரைப்பட துறையினரை தங்கள் ஹோட்டலில் தங்க வைத்திட இது கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்

கரு.முத்து
பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தற்போது அரசுடைமையாக்கப்பட்டிருக்கிறது.முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய இந்த பல்கலைகழகத்தில்தான் திராவிட இயக்கத்தலைவர்களில் பெரும்பாலோனோர் உருவானார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் காட்டிய கடுமையான இந்தி எதிர்ப்பு ராஜேந்திரன் என்ற மாணவரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கியது. வரலாறு, இசை, பொறியியல், சமூகம், பொருளாதாரம்,வேளாண்மை,மருத்துவம்,கலை,விளையாட்டு என்று எல்லா துறைகளும் இயங்குகின்றன. தற்போதைய நிலையில் 12,600 ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.முப்பத்தைந்தாயிரம் மாணவர்கள் கல்வி பயிலுகிறார்கள். இங்கு இயங்கும் தொலைதூர கல்வி நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.இவ்வளவு பெருமைக்குரிய எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான இந்த பல்கலைகழகம் தற்போது அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. அது ஏன்? அரசுடைமையாக்கப்பட்டதன் காரணம் என்ன?

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஈரானில் நிலநடுக்கம் 7.8 ரிக்டர் சென்னையிலும் உணரப்பட்டது

ஈரான் பாகிஸ்தான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஈரானை தாக்கிய நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் கருவில் 7.8ஆக பதிவாகி உள்ளது. ஈரான் நிலநடுக்கத்தின் அதிர்வு மத்திய கிழக்கு நாடுகளிலும் உணரப்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு வடக்கு, மேற்கு இந்தியாவில் உணரப்பட்டது.
 டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர்.
பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
முன்னதாக காலையில் அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு குழந்தை இறந்தது. 2 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

அஞ்சலி ஒரு சிறையிலிருந்து மீண்டதும் மற்றொரு ???

நடிகை அஞ்சலிக்கு தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் வெங்கடேஷ்
‘ஆதரவு’ உள்ளது என்ற விஷயம், ரகசியம் அல்ல. இருப்பினும் அஞ்சலி விவகாரத்தில் வெங்கடேஷ் வெளிப்படையாக என்ட்ரி கொடுக்கவில்லை. காரணம், வெங்கடேஷின் அப்பா பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடு என்கிறார்கள்.
அஞ்சலிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் அப்பாவுக்கு தெரிந்தால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று பயந்தாராம் வெங்கடேஷ்.
ஆனால், அதற்காக சும்மாவும் இருந்துவிடவில்லை வெங்கடேஷ். ஙைதராபாத்தில் இருந்தபடியே, சென்னையில் இருந்த அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு தனது சினிமா உலக நண்பர்கள் மூலம் பிரஷர் கொடுத்தாராம்.
வழமையான தெலுங்குப் பட வில்லன் ஸ்டைலில் மீசையை முறுக்கி கண்களை உருட்டி, ‘மைல்ட் மிரட்டல்’ ஒன்றை விடுத்துவிட்டு சென்றாராம், சென்னையில் வசிக்கும் பிரபல விநியோகஸ்தர் ‘காரு’ ஒருவர். ‘காரு’ பற்றி யாருக்கு தெரியுமோ இல்லையோ, சித்தி பாரதி தேவிக்கு நன்றாகவே தெரியும்.
உடனே அவர் அடித்தார் ஒரு யு-டர்ன். “இனிமேல் எனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவளது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்ற சரண்டர் அறிக்கை வந்தது.
அதென்ன திடீரென இப்படி மாறுகிறது என ஆச்சரியப்பட்ட டைரக்டர் களஞ்சியம் விசாரித்தபோதுதான், ‘காரு’ மேட்டர் அவருக்கு தெரிய வந்தது. “தமிழகத்தில் வந்து, தெலுங்குக்காரர் மிரட்டுவதா” என்று அவர் எகிறியதால்தான், ‘தமிழ் உணர்வு இயக்கம்’ காட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.
அஞ்சலிக்கு ஆதரவாக தெலுங்கு சினிமா உலகம் வருவது போல் தனக்கு ஆதரவாக தமிழ் சினிமா உலகம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார் களஞ்சியம். இதற்காக சில நகர்வுகளையும் செய்தார். ஆனால், ‘தமிழ் உணர்வாளர்கள்’ என அறியப்பட்ட சினிமா புள்ளிகள் இருவர் இடம்-வலமாக தலையாட்டி விட்டனராம்!
“இதற்குள், இயக்கத்தை கொண்டுவந்து அசிங்கப்படுத்த வேண்டாம்” என்று இந்த இருவரும் இலவச அட்வைஸ் வேறு கொடுத்ததில், கடுப்பில் உள்ளார் களஞ்சியம்!
ஆமா.. அவர்களுக்கு தெரியாத சமாச்சாரமா இதெல்லாம்?

ஜெயலலிதா CNN IBN மீதான மானம் போன வழக்கு youtube



Political satirist on television, Cyrus Broacha, is in trouble over his remarks on Tamil Nadu Chief Minister Jayalalithaa regarding her letter to the Prime Minister asking Manmohan Singh not to allow Sri Lankan players in the Indian Premier League (IPL). The State government has slapped a criminal defamation case against him and his team members, scriptwriter Asis Shakya and show director Kunal Vijaykar. City Public Prosecutor M.L. Jegan filed the defamation case on behalf of Ms. Jayalalithaa. After taking the complaint on file, the court may soon issue summons to them to appear before it and face trial. The case pertains to the edition of The Week That Wasn’t hosted by Mr. Broacha and telecast on CNN-IBN channel on April 2.

நடிகை ரக்‌ஷிதா ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்

நடிகை ரக்சிதா பி.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்தார். அவர் சாம்ராஜ்நகர்
தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. அவர் வீடுவீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் கூட செய்தாரஇந்த நிலையில் திடீரென்று அந்த கட்சி தலைவர்கள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதனால் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்வதில் இருந்து விலகி இருந்தார். அவர் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் மவுனம் காத்து வந்தார்.;அவர் நேற்று தனது மவுனத்தை கலைத்து தேவேகவுடா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இணைந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் எங்கள் கட்சியில் இணைந்து உள்ளார் என்று தேவே கவுடா கூறினார
இந்த செய்திக்கு ஏன்  முக்கியத்துவம் தரவேண்டும் என்று கேள்வி கேட்டு விடாதீர்கள்? இவரை சேர்த்துக்கொண்ட தேவகௌடா ஒரு முன்னாள் இந்திய பிரதமர் என்பது ஞாபகம் இருக்கட்டும் , ரக்ஷிதாவே மேலுங்கோ

டெல்லியில் மீண்டும் ஒரு பேருந்துக்குள் சிறுமி பாலியல் பலாத்காரம்

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சுல்தான்புரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.இந்த பஸ்சுக்குள் சிறுவர், சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பஸ் டிரைவர் ராகேஷ், மற்ற குழந்தைகளை அடித்து விரட்டி விட்டு, 11 வயது சிறுமியை மட்டும் இருக்க சொன்னார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனை செய்ததில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பஸ் டிரைவர் ராகேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

UP: ஏழைகளின் நலன் கருதி 25 ரூபாய்க்கு மலிவு விலை மது!

உத்தரபிரதேசத்தில் கடந்த 1–ந்தேதி மதுபானங்களின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து குவார்ட்டர் மது, ரூ.50 ஆக உயர்ந்தது. ஆனால், அண்டை மாநிலமான அரியானாவில் 30–க்கு குவார்ட்டர் கிடைக்கிறது.இதனால் உத்தரபிரதேச ‘குடிமகன்’கள், அரியானாவுக்கு படையெடுத்து சென்று மது வாங்க தொடங்கினர். சிலர் அரியானாவில் இருந்து மதுவை கடத்தி வந்து உ.பி.யில் விற்க தொடங்கினர். சிலர் கலப்படம் செய்தும் விற்க தொடங்கினர். அது, குடிமகன்களின் உடல்நலனுக்கு தீங்கானது என்று கருதிய உத்தரபிரதேச மாநில அரசு, ஏழைகள் நலனுக்காக நேற்று மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. வார்ட்டர் மது பாட்டில், ரூ.25 என்ற குறைந்த விலைக்கு இந்த மது கிடைக்கிறது. அரியானா மாநில எல்லை யோரத்தில், குறிப்பிட்ட மதுக்கடைகளில் மட்டும் இந்த மது கிடைக்கும். இதன்மூலம், மது கடத்தல் குறையும் என்று ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வீதிவிபத்து தாயையும் மகளையும் இழந்தவரை யாருமே திரும்பியும் பார்க்காத கொடுமை ! மலிவாகிப் போன மனித உயிர்.

ஜெய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில், இருவர் இறந்தனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, ஒருவரும் முன்வராத, மனிதநேயமற்ற, நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ராவையும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரையும் இணைக்கும், தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில், 2 கிலோ மீட்டர் நீளமுள்ள, "காட் கி குனி' என்ற சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. இதில், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.இந்நிலையில், நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர், தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் இந்தச் சுரங்க சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் சென்றவரின் மனைவியும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.படுகாயத்தடன் தப்பிய, அந்த நபர், தன் மகனை கையில் பிடித்தபடி, உயிருக்கு போராடியவாறு, அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி, உதவி செய்யும்படி கெஞ்சினார். ஆனாலும், அவர் மன்றாடுவதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், வாகனங்கள், அசுர வேகத்தில் பறந்து சென்றன. இதனால், அந்த நபர், தலையில் கைவைத்தபடி, சாலையிலேயே அமர்ந்து பதறியது பரிதாபமாக இருந்தது.பின் எப்படியோ போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

திங்கள், 15 ஏப்ரல், 2013

லண்டனில் இந்தியப்பெண் 2 மகள்களுடன் மர்ம மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டனில் இந்திய வம்சாவளி பெண், தனது 2 மகள்களுடன் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ளது ருயிஸ்லிப். இந்நகரின் மிட்கிராப் என்ற பகுதியில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இவருடைய கணவர் கல்பேஷ் (42). இவர்களுடைய மகள்கள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4). கல்பேஷின் பெற்றோரும் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்களும் வீட்டில் தங்கியிருந்தனர். ருயிஸ்லிப் பகுதியில் உள்ள பள்ளியில், ஆய்வக டெக்னீஷியனாக பணியாற்றினார் ஹீனா.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஹீனா வீட்டில் இருந்து கேஸ் வாசனை வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார், தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். வீட்டுக்குள் சென்ற போது ரசாயன வாசனை வீசியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று கதவு, ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படி போலீசார் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.வீட்டில் சோதனை செய்த போது, ஹீனா சோலங்கி மற்றும் இவருடைய மகள்கள் ஜேஸ்மின், பிரிஷ் ஆகியோர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரிய வரும். அதுவரை காரணம் கூற இயலாது என்று போலீசார் கூறினர்.

அகிலாவுக்கு ஆதரவாக சன் டி.வி-யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சன் டி.வி. நிர்வாகமே!

  • சன் நியூஸில் வேலை பார்க்கும் பெண்களிடம்
    பாலியல் தொந்தரவு செய்த தலைமை அதிகாரி ராஜாவையும்,
    மாமா வேலை பார்த்த வெற்றிவேந்தனையும் பணிநீக்கம் செய்!
  • பாலியல் புகார் கொடுத்த அகிலாவை பழிவாங்குவதற்காக
    செய்யப்பட்ட பணி இடைநீக்க உத்தரவைத் திரும்பப் பெறு!

ஆர்ப்பாட்டம்

நாள்: ஏப்ரல் 17,
நேரம் : மாலை 4.30 மணி
இடம் :
சன் டிவி அலுவலகம் முன்பு,
ராஜா அண்ணாமலைபுரம்
மனித உரிமை ஆர்வலர்களே, பொது மக்களே!
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக துணிச்சலாகப்
போராடும் அகிலாவுக்கு தோள் கொடுப்போம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
சென்னை கிளை
, 9842812062

அப்பாவி அஞ்சலிகளும் அயோக்கிய களஞ்சியங்களும் !

ஞ்சலிக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. சினிமா கால்ஷீட் உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் அவரது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன். வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து நான், எனது அக்கா, அஞ்சலி எல்லோரும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்’’ - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி. ‘’நான் யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இனி, என்னைப் பற்றிய விஷயங்களை நானே கவனித்துக் கொள்வேன். இனி, என்னை மையப்படுத்தி எது நடந்தாலும் அது என்னைச் சேர்ந்தது” - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலி.
கடந்த வாரத்தில் இரண்டு தரப்பிலும் இருந்த கோபமும் கொந்தளிப்பும் இப் போது இல்லை. ’குடும்பப் பிரச்னையை வீதிக்கு கொண்டு வராதீர்கள்” என்று இரண்டு தரப்பையுமே யாரோ பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த மாற்றம். கத்தாரில் இருக்கும் அஞ்சலியின் அம்மா பார்வதி தேவி, மிக விரைவில் சென்னைக்கு வருகிறார். இதையடுத்து, அஞ்சலிக்கும் அவரது சித்திக்குமான உரசல் முடிவுக்கு வருவதற்கான முகாந்திரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ’’இனி, மீடியாக்கள் மத்தியில் தோன்றினாலும், பெரிதாக யார் மீதும் பழிபோட்டு பேசமாட்டார் அஞ்சலி. ‘அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டேன்” என்று மட்டும் அவர் சொல்லக் கூடும்” என்கிறார்கள் விவரமறிந்த சினிமா புள்ளிகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம்...
தன்னை ஸ்டாராக்கிய சித்திக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்த அஞ்சலி, பொங்கி வெடித்தது யாருடைய தைரியத்தில்?

லஞ்சம்: புள்ளத்தாச்சியை ரோட்டில் வீசிய அரசு மருத்துவமனை! பிரசவம் பார்த்த பொது மக்கள்!

ஆதரவு தரவேண்டிய அரசு மருத்துவமனை இலஞ்சமெனும் பேய் பிடித்து புறக்கணிக்க, வீதியில் விழுந்த ஏழை  பெண்ணுக்கு அன்போடு பிரசவம் பார்த்து பரவசமூட்டியுள்ளனர் அன்னாடம் காச்சிகளான பாமர சனங்கள்.
சாமுவேல் என்பவரை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க தமிழகம் வந்தவர் 27 வயது லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ ஏழ்மையில் வாடியது...வறுமை எனும் கோர பசிக்கு வயிற்றை தருவதை தவிர வேறொன்றும் இல்லாத எளியவர்கள்.கிடைக்கும் கூலி வேலை செய்து வரும் இவர்களின் இருப்பிடம் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட் பார்ம் தான். அருகேயே உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் அன்னதானத்தில்தான் மதிய உணவு. ஐந்து வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் இருக்க தற்போது வயிற்றில் ஒரு குழந்தையும் இருக்க திடீரென வயிற்று வலியில் துடிக்கிறார். அதன் பின் நடந்ததை விவரிக்கிறார் அக்கம் பக்கத்தில் இருந்த பண்ணாரி என்ற பெண்மணி,

'நானும் இங்க பிளாட்பார்ம்வாசி தான். காலையில நாலு மணி இருக்கும் கண்ணு, புள்ளை வலியில துடிக்க என்னடா ஆச்சுன்னு பார்த்தா பிரசவ வலி. என்ன பன்றதுனே தெரியலை சரி பக்கத்துல எட்டுன தூரத்துல தான் அரசாங்க ஆஸ்பத்திரி இருக்குன்னு அங்க கூட்டி போனேன் பாவம் புள்ளையால நடக்க முடியல ஆனா என்ன பண்றது எங்ககிட்ட காசில்லை அதனால கால் மைல் தூரத்தையே ரெண்டு மணி நேரமா நடந்தோம். அங்க போனா அதவிட கொடுமை... பொண்ண உள்ள சேத்திகிட்ட நர்சம்மா கொஞ்ச நேரத்துல 1000 ரூபா பணம் கொடுங்கன்னு சொன்னாங்க வெள்ளை தொப்பி போட்டு ரெண்டு நர்சம்மாக்கள்... அவ்ளோ காசுக்கு எங்கம்மா போறதுன்னேன் காசில்லைனா பிரசவம் பார்க்க மாட்டோம்னாங்க என்ன பன்றதுனே தெரியாம லட்சுமிய கூட்டிகிட்டு திரும்ப இங்க பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகதுக்கிட்டயே வந்தோம்... அந்த மாரியாயி தான் ஏதாவது வழி காட்டுவான்னு இருந்தப்போ தான் மறுபடியும் புள்ளைக்கு வலி வந்தது ரொம்ப முடியலைன்னு கத்துனா... என்ன செய்ரதுனெ தெரியல கடசியா கடவுள் மேல பாரத்த போட்டுக்கிட்டு நானே பிரசவம் பார்த்தேன் விஷயம் தெரிஞ்சு பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொம்பளைங்களும் ஒத்தாசை பண்ண கொஞ்ச நேரத்துல அழகா செவ செவன்னு ஆம்பளை புள்ளை பொறந்தான்' என்றார் உருகி...அப்புறம் பக்கத்துலையே பொது கக்கூஸ் இருக்கு அங்க போயி ஒரு ப்ளேடு வாங்கிட்டு வந்து தொப்புள் கொடி அறுத்தோம்... ஆஸ்பத்திரிகாரங்க மனசாட்சியே இல்லாம இருக்காங்களே' என்றார் வேதனையோடு... >பின் பத்திரிக்கையாளர்கள் விஷயமறிந்து அங்கு சென்று பின் 108க்கு கால் செய்ய 200 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு வெகு விரைவாக  அரை மணி நேரத்தில் வந்தனர்... அதற்குள் லட்சுமிக்கு ரத்த போக்கு கடுமையானது... பின் அவரை பத்திரிக்கையாளர்கள் முயற்சியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட மேல் சிகிச்சை ஆரம்பித்தனர் மருத்துவர்கள்...'லட்சுமி என்ற இந்த பொண்ணு இங்க வரவேயில்லை' என்கின்றனர் மருத்துவமனை நிர்வாகம்... ஆனால் இப்பெண் காலையில் இங்கு வந்ததை அங்கே பிரசவ வார்டில் இருந்த மற்ற பெண்கள் உறுதி செய்தனர்...

தமிழ் திரையுலகினர்மீது ஈழத்தமிழர்கள் கடும் குற்றச்சாட்டு

mahaveli.com இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒரு நயா பைசாவைக் கூட கொடுத்து உதவாத சினிமாக்காரர்கள் இன்று திடீர் ஞானோதயம் பெற்று போஸ் கொடுக்கிறார்கள் . இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழகத்தின் .நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், திரை உலகுடன் தொடர்புடைய அனைவரும் கடந்த வாரத்தில் இலங்கைத் தமிழர்களையும், தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் தத்ரூபமாக சோகம் தோய்ந்த முகத்துடன் உண்ணாவிரப் போராட்டத்தில் பசிப்பட்டினியுடன் ஈடுபடுபவர்களைப் போன்று சொந்த வாழ்க்கையிலும் நடித்தார்கள்
தமிழ்நாட்டின் இந்த கூத்தாடிகளை நேரில்வந்து பார்ப்பதற்கு விருப்பம் கொண்ட பொதுமக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்தார்களே ஒழிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்று இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார்.அன்று மு.ப. 11.00 மணிக்கு நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூரியா, தனுஷ், பிரசாந்த், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண்விஜய், கே. பாக்கியராஜ், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், டெல்லி கணேஸ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார், மன்சூரலிகான், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், கலைப்புலி தானு, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறைந்த ராஜசேகர் ரெட்டி மீது காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டு

ஐதராபாத் :ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், இப்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜெகனுக்கு எதிராக, அமைச்சர்கள் பலர் திரும்பியுள்ளனர். ஜெகனையும், அவரின் தந்தையையும், "திருடன், கொலைகாரன்' என, கூறி வருகின்றனர்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் அலை வீசிய போது, மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு, விவசாயிகளின் ஆதரவை பெற்று, 2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசை வெற்றி பெறச் செய்தவர், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.ஐந்தாண்டு காலம் முதல்வர் பதவியில் இருந்த அவர், 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற ராஜசேகர ரெட்டி, சில மாதங்களிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

ஸ்டாலின் விஜயகாந்த் ஓரணி ! அழகிரி கனிமொழி காங்கிரஸ் ஓரணி! கலைஞர் வருத்தம்

 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை; தி.மு.க., கூட்டணி அமைத்தே போட்டியிடும். நிச்சயமாக காங்., கூட்டணியில் இடம் பெறாது,''
என்று ராமநாதபுரத்தில் வைத்து ஸ்டாலின் கூறியுள்ளார்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மதுரையில் தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரியை சந்திக்காமல், சென்னை திரும்பினார். இது, தி.மு.க., தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.,வில், அடுத்த தலைவர் பதவியை கைபற்றுவதில், ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பனிப்போர் நீடித்து வருகிறது.சமீபத்தில், மதுரைக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கனிமொழி சென்றார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில். அழகிரி ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அழகிரியின் வீட்டிற்கு கனிமொழி சென்றார்.அப்போது, "நீங்களும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும்' என, அழகிரியிடம் கனிமொழி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி, மதுரைக்கு ஸ்டாலின் சென்றார். அவரை விமான நிலையத்தில் கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர். ஆனால், ஸ்டாலினை வரவேற்க அழகிரி ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு வரவில்லை.மதுரையில், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்., பழனிவேல் ராஜனின் மூத்த சகோதரர், கமலா தியாகராஜன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் ராதா தியாகராஜனின் குடும்பத்தினரை சந்தித்து, ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். ஆனால், அழகிரி வீட்டிற்கு, ஸ்டாலின் செல்லவில்லை. மேலும், அன்று இரவு ஸ்டாலின் மதுரையில் தங்கினால், அழகிரியை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால், ஓட்டலில், ஏற்கனவே புக்கிங் செய்திருந்த அறை, ரத்து செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்ற ஸ்டாலின், அங்கு தங்கினார். நேற்று முன்தினம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம், சிவகங்கை தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, சென்னைக்கு ஸ்டாலின் திரும்பினார். இரண்டு நாள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் என, சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், மதுரையில் அழகிரியை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார். லோக்சபா தேர்தலில், தென் மண்டலத்தில் அழகிரியும், ஸ்டாலினும் இரு துருவமாக செயல்பட்டால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஸ்டாலின் ஏற்காததால், கருணாநிதி மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார்.மேலும், மதுரையில் கனிமொழிக்கு, அழகிரி ஆதரவாளர்கள், "தடபுல்' வரவேற்பு கொடுத்ததை, ஸ்டாலின் விரும்பாத காரணத்தினால் தான், அழகிரியை, ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

சவுதி ஜெய்தா பாலத்திற்கு கீழ் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிர்கதி

ஸவுதி அரேபியாவிலுள்ள ஜெய்தா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்த வண்ணம் இந்தியா இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த பலர் உள்ளபோதும், அவர்களை இதுவரை  எடுப்பதற்கு எந்தவிதமான செயற்பாடுகளிலும் எந்த அரசாங்கமும் இறங்கவில்லை என கஷ்டத்திற்குள்ளாகியுள்ள  ஒருபகுதியினர் குறிப்பிடுகின்றனர் ‘தொழிலின்றி துன்பப்படும் எங்களுக்கு கடந்த சில நாட்களாக உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதுமின்றியிருக்கிறோம்.’ என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுவரை சுமார்  2000 பேர் அளவில் அங்கு கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேஎப்

பிரபுதேவாவின் வலையில் தற்போது அசின்? சேச்சி வளர சூசிக்கணும் கேட்டோ

பிரபு தேவாவுக்கு புதிய கேர்ள் பிரெண்டானார் அசின். நயன்தாராவை பிரிந்த
பிரபுதேவா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வந்த பிரபுதேவா, ‘வாழ்வில் எனக்கொரு துணை தேவை‘ என்று ஏக்கமுடன் கூறினார். அந்த ஏக்கம் நிறைவேறுமா, எப்போது நிறைவேறும் என்று தெரியாத நிலையில் புதிய கேர்ள் பிரெண்டாக அவருக்கு அசின் கிடைத்திருக்கிறார். பாலிவுட்டில் பக்கத்து பக்கத்து வீட்டில் அசின், பிரபுதேவா வசிக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள வேன்கவுர் என்ற இடத்தில் நடந்த விருது வழங்கும் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு பிரபுதேவா பங்கேற்க அழைப்பு வந்திருந்தது. அதுபோல் அசினுக்கும் அழைப்பு வந்தது. இதையடுத்து இருவரும் இங்கிலாந்து செல்ல முடிவு செய்தனர். ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பின்னர் ஜோடியாக பலவித போஸ்களில் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்க வாலிபரை அசின் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசு வெளியானது. இந்நிலையில் பிரபுதேவாவுடன் அவர் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்டர்நெட்டில் ஆபாச போட்டோ வெளியானதால் 2 மாணவிகள் தற்கொலை


மேற்கத்திய நாடுகளில் இணையதள மோகம் இளைஞர்களை படுவேகமாக சீரழித்து வருகிறது. இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தால் 2 மாணவிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.கனடாவில் உள்ள நோவோ ஸ்காட்யா என்ற இடத்தில் வசிப்பவர் லியா பார்சன். இவரது மகள் ரெட்டா பார்சன். கடந்த 2011ம் ஆண்டு 4 இளைஞர்கள் ரெட்டாவை பலாத்காரம் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். ஒரு வருட விசாரணைக்கு பிறகும், போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, யார் மீதும் குற்றச்சாட்டு கூறப்படாமல் வழக்கை கிடப்பில் போட்டனர். இந்நிலையில் ரெட்டாவை 4 இளைஞர்கள் பலாத்காரம் செய்யும் போட்டோ இணையதளத்தில் வெளியானது. அதைக்கண்டு லியா அதிர்ச்சி அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரெட்டா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கை மறுவிசாரணை செய்து வருகின்றனர்.

திமுக நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி திடீர் ஆலோசனை

திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிர இன்று
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் முன்னாள் எம்.பி. அக்னிராஜ் வீட்டுக்கு சென்றார். அவரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த மு.க. அழகிரி, அக்னிராஜூவிடம் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், திருநகர் 7-வது பஸ் நிறுத்தம் அருகே இருந்த தனது பழைய வீட்டுக்கு சென்றார். அங்கு பழைய நண்பர்களிடம் மு.க.அழகிரி நலம் விசாரித்தார். அப்போது புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் எம்.எல். ராஜ், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் காசிமாயன், நகர பொறுப்பாளர் பரமேஷ் பாபு, கொம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், நெசவாளர் அணி துணை செயலாளர் உசிலை சிவா, பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க தலைவர் செல்வம், திருப்பரங்குன்றம் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் அக்னி ராஜ், பனையூர் தனபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்

பி.பி.ஸ்ரீனிவாஸ் அழியா புகழை எய்தினார்

Veteran playback singer P B Srinivas died on Sunday following a brief illness, family sources said. சென்னை : பழம்பெரும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்
காலமானார். அவருக்கு வயது 83. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.  1952ஆம் ஆண்டு 'மிஸ்டர் சம்பத்' என்ற படத்திற்கு முதன் முறையாக பின்னணி பாடல் பாடினார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், "காலங்களில் அவள் வசந்தம்" என்ற பாடல் பெரும் புகழை பெற்று தந்தது.இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் இன்று பிற்பகலில் ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

எமது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்


இலங்கையில் தமிழரும் சிங்களவரும் பொதுவாக கொண்டாடும் இந்த பொன்னான பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அனைவரும் வாழ்த்துவோம்

ஜபல்பூர்: ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

Jabalpur: A five-year-old girl was allegedly gang-raped by three minors in Madar Challa area here, police said on Saturday. The victim was sexually assaulted by the trio two-days back when she was going to a nearby shop for purchasing milk, they said. They pulled her in an auto-rickshaw and took turns to rape her. When the victim failed to return home for long, her worried mother looked for her in the area and found her lying in the vehicle and crying in pain. She narrated her ordeal to her mother and also told her that when she tried to escape from the spot they beat her. The girl was taken to a hospital where her medical examination confirmed rape
மத்திய பிரதேச மாநிலத்தில், ஐந்து வயது சிறுமி, மைனர் சிறுவர்கள் மூன்று பேரால் கற்பழிக் கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன், அருகிலுள்ள கடைக்கு பால் வாங்கச் சென்ற சிறுமியை, ஆட்டோவில் இழுத்துப் போட்டு, இந்த பாதகச் செயலை செய்துள்ளனர்கடைக்கு சென்ற சிறுமி, நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த பெற்றோர், தேடிப்பார்த்த போது, அவள் ஆட்டோவில், வலியால் அழுது கொண்டிருந்தாள். விசாரித்த போது, நடந்ததை கூறினாள். சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது

காங்கிரஸ் அதிமுக உறவு துளிர்கிறது ! அரசியலில் இதெல்லாம் சகஜமுங்கோ

தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில்,  
அ.தி.மு.க., பக்கம், காங்கிரஸ் செல்கிறது. சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், இதற்கான அச்சாரம் போடப்படுகிறது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதால், எப்போது கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஐ.நா., சபை மனித உரிமை ஆணையத்தில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு எடுத்த முடிவை, சாதகமாக்கிக் கொண்டு, கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியது.தமிழகத்தில், பிரதான கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகியன, தங்களுக்கு எதிராக இருந்தால், பெரும் தோல்வியை, லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் சந்திக்க வேண்டி வரும் என்பதால், ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தோளில் ஏற, காங்கிரஸ் முயற்சிப்பது வழக்கமான ஒன்று. கூட்டத்தொடர்:இந்த நிலையில், தி.மு.க., வெளியேறிய நிலையில், அ.தி.மு.க., பக்கம் போவதற்கான, காய்களை நகர்த்தி வருகிறது. இதில், கொஞ்சம் வெற்றியும் பெற்று வருவதாக, அக்கட்சி நினைக்கிறது. தற்போது, நடந்து கொண்டிக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான முனைப்புகளை, காங்கிரஸ் காட்டுகிறது.காங்கிரசிடம் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். இவர்களின், ஆதரவு அல்லது எதிர்ப்பால், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எவ்வித லாபமோ, நஷ்டமோ இல்லை. ஆனால், மத்திய அரசின் ஆதரவு, தமிழக அரசுக்கு முக்கியமாக உள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களுக்கு நிதி பெறுதல், மின்சாரத்தை வெளிமாநிலங்களிருந்து, தமிழகத்துக்கு கொண்டு வர பாதை அமைத்தல், அண்டை மாநிலங்களுடன் இருக்கும் பிரச்னைகளைத் தீர்த்தல் போன்றவற்றுக்கு, மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.
அதிமுக என்னதான் கொள்கை வேஷம் போட்டாலும் பசித்தால் எந்த கருமத்தையும் உண்பதுதானே வழக்கம்