திங்கள், 15 ஏப்ரல், 2013

ஸ்டாலின் விஜயகாந்த் ஓரணி ! அழகிரி கனிமொழி காங்கிரஸ் ஓரணி! கலைஞர் வருத்தம்

 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை; தி.மு.க., கூட்டணி அமைத்தே போட்டியிடும். நிச்சயமாக காங்., கூட்டணியில் இடம் பெறாது,''
என்று ராமநாதபுரத்தில் வைத்து ஸ்டாலின் கூறியுள்ளார்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மதுரையில் தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரியை சந்திக்காமல், சென்னை திரும்பினார். இது, தி.மு.க., தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.,வில், அடுத்த தலைவர் பதவியை கைபற்றுவதில், ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பனிப்போர் நீடித்து வருகிறது.சமீபத்தில், மதுரைக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கனிமொழி சென்றார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில். அழகிரி ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அழகிரியின் வீட்டிற்கு கனிமொழி சென்றார்.அப்போது, "நீங்களும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும்' என, அழகிரியிடம் கனிமொழி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி, மதுரைக்கு ஸ்டாலின் சென்றார். அவரை விமான நிலையத்தில் கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர். ஆனால், ஸ்டாலினை வரவேற்க அழகிரி ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு வரவில்லை.மதுரையில், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்., பழனிவேல் ராஜனின் மூத்த சகோதரர், கமலா தியாகராஜன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் ராதா தியாகராஜனின் குடும்பத்தினரை சந்தித்து, ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். ஆனால், அழகிரி வீட்டிற்கு, ஸ்டாலின் செல்லவில்லை. மேலும், அன்று இரவு ஸ்டாலின் மதுரையில் தங்கினால், அழகிரியை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால், ஓட்டலில், ஏற்கனவே புக்கிங் செய்திருந்த அறை, ரத்து செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்ற ஸ்டாலின், அங்கு தங்கினார். நேற்று முன்தினம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம், சிவகங்கை தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, சென்னைக்கு ஸ்டாலின் திரும்பினார். இரண்டு நாள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் என, சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், மதுரையில் அழகிரியை சந்திக்காமல் சென்னை திரும்பியுள்ளார். லோக்சபா தேர்தலில், தென் மண்டலத்தில் அழகிரியும், ஸ்டாலினும் இரு துருவமாக செயல்பட்டால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஸ்டாலின் ஏற்காததால், கருணாநிதி மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார்.மேலும், மதுரையில் கனிமொழிக்கு, அழகிரி ஆதரவாளர்கள், "தடபுல்' வரவேற்பு கொடுத்ததை, ஸ்டாலின் விரும்பாத காரணத்தினால் தான், அழகிரியை, ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: