
தமிழில் நிழல், மலையாளத்தில் அன்பெல்லா எனது தம்பி சுரேஷ் மற்றும் நானும் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறோம். தமிழ் மற்றும மலையாளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமிழில் நிழல் என்றும், மலையாளத்தில் அன்பெல்லா என பெயரிட்டுள்ளோம். இப்படம் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று அம்பிகா தெரிவித்தார்.
என் தம்பி அமெரிக்காவில் படித்தவர் எனது சகோதரர் சுரேஷ் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள பிலிம் சிட்டியில் இயக்குனர் பயிற்சி முடித்து விட்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார். அவர் மலையாள ரீமேக் படங்களான நீலத்தாமரை, என் இஷ்டம் நின் இஷ்டம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்று அம்பிகா கூறினார்.
புதுமையான படப்பிடிப்பு நாங்கள் இயங்கியுள்ள முதல் படமான நிழல் ஒரு திரில் படம். இப்படத்தில் சென்ற வருடம் மிஸ் கேரளா பட்டம் வென்ற இந்து என்பவர் கதாநாயகியாகவும், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேஜர் கிஷோர் என்பவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் படம் இது. மேலும் 90 சதவீத அளவில் கேமராமேன் இல்லாமலேயே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிப்பவர்களிடமே கேமரா கொடுக்கப்பட்டு புதுமையுடன் படம் பிடித்துள்ளோம் என்றார் அம்பிகா. தென்னிந்தியாவில் பாயிண்ட் ஆப் வீயூ முறையில் படம் பிடிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான் என்று அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக