“இன்றைய தேதியில் ரூபாய் நூறு கோடி வசூலை குறுகிய காலத்தில் எட்டும் நடிகர் யார்? சந்தேகமேயில்லாமல் சல்மான்கான்தான். இந்தி நடிகரான இவரது ‘வாண்டட்’, ‘தபங்’, ‘ரெடி’, ‘பாடிகாட்’ ஆகிய படங்கள் அனைத்துமே நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியவை. அதுவும் இந்த ஆண்டு ரம்ஜானை ஒட்டி வெளியான ‘ஏக் தா டைகர்’ இந்திப் படம், முதல் ஐந்து நாட்களிலேயே இந்த நூறு கோடி ரூபாய் வசூலை கடந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. எனவே அவர்தான் இன்றைய தேதியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ” என ஏகமனதாக இந்தி(ய) பத்திரிகைகள் அனைத்தும் எழுதுகின்றன, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. இன்றைய தேதியில் ஒரு படத்துக்காக அவர் வாங்கும் தொகை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்.