Muralidharan Pb : சென்னைக்கு எதற்காக இரண்டாவது விமான நிலையம் தேவை?
ஏறத்தாழ 2 கோடி மக்கள் புழங்கும் மிகப்பெரிய நகரமான சென்னை. விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஏனைய நகரங்கள் முதல் சிற்றூர்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2000 க்கு பிறகு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் வருவாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.
இந்திய மக்களை வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தும் காலம் போய் இந்தியர்கள் வெளிநாடுகளில் தொழில் நிறுவி இங்கிருக்கும் மக்களை வேலைக்கு அழைத்துக்கொண்டு போகும் காலம் இது.
மின்னணு, வாகன உதிரி பாகங்கள்,கார்கள், தோல் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சார்ந்த சேவைகள், மென்பொருள் சேவைகள்,ஏற்றுமதி இறக்குமதி,ஜவுளி, வேளாண் பொருட்கள் என தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதலிடம் வகிக்கிறது. அதற்கு பெரிதும் துணையாக இருப்பது நமது கடற்கரை மற்றும் விமான சேவைகள், இணைக்கும் நெடுஞ்சாலைகள். தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச வானூர்தி நிலையங்கள் உள்ளன.
சரி பரந்தூர் விமான நிலையம் ஏன் தேவை.
கிண்டி முதல் தாம்பரம் வரை இரு சக்கர வண்டியில் பயணித்தால் நமக்கு விளங்கும். அத்தனை லட்சக்கணக்கான மக்கள் இருபுறமும் பயணித்து வருகின்றனர்.
அங்கு மீண்டும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது ஆகச்சிறந்த முட்டாளதனம்.
பரந்தூர் சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளதால் இப்போது விமான நிலையத்தில் வடிவத்தை அடுத்த நூறாண்டுகளுக்கு திட்டமிட்டு உருவாக்க முடியும். தொடங்கினால் எல்லாமே புதியது. தற்போதைய தொழில்நுட்பங்களைப் புகுத்தி நமக்கு ஏற்றதைப் போல உலகத் தரத்தில் வானூர்தி நிலையத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.
A380 போன்ற மிகப்பெரிய விமானங்களை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது. மாறாக பெரிய இந்திய விமான நிலையங்களில் அந்த வகை விமானம் தரையிறங்க இயலும். A380 ரக விமானங்களுக்கு 60 மீட்டர் அகல ஓடிதளம் தேவை. ஆனால் 45 மட்டும் உள்ளது. பெரிய விமானங்களை இயக்கினால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் சுற்றுலா வலுப்படும். தொழில் அதிபர்கள் நேரடியாக குறுகிய கால திட்டமாக எளிதாக வந்து போக முடியும்.
கடலைப் போல ஆகாய மார்க்கமாக சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் நடைபெறும். திருப்பெரும்புதூரில் தற்போதைய சேமிப்பு கிடங்குகள் அதிகமாக உள்ளன. அங்கு இன்னும் அதிக அளவில் கிடங்குகள் தேவைப்படும்.
ரியல் எஸ்டேட் செழிக்கும். அந்த துறை சிறந்து விளங்கினால் அதைச் சுற்றி இயங்கும் மற்ற அனைத்து துறைகளும் விரிவடையும். பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். மக்கள் பணப்புழக்கம் அதிகிரக்கும். படிப்படியாக இலவசங்களை குறைத்துக்கொள்ளலாம். மாநில அரசும் வளம் காணும்
இன்றைய 110 அறிக்கை அவற்றுக்கெல்லாம் 111 போட்டுவிட்டது.
2006 இல் துணை நகரம் ஆரம்பித்த திமுக அரசை மரு
ராமதாஸ் குறுக்கு சால் ஓட்டி கெடுத்தார்.
2011 இல் மதுரவாயல் துறைமுகம் உயர் நிலைச் சாலையை ஜெயலலிதா தனது ஆணவத்தால் கெடுத்தார்.
தற்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை விஜய் கெடுத்துள்ளார்.
நாடு எத்தனையோ பெரிய இலக்கை நோக்கி போகிற தருவாயில் திராபைகள் போல நமது இலக்குகளுக்கு குந்தகம் விளைவிக்க கூடிய அளவில் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
அண்மையில் விஜயை சந்தித்த அமித் ஷா ஒருவேளை பரந்தூர் விமான நிலையத்தை இரத்து செய்ய விஜயிடம் சொல்லி இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
மக்களுக்கு என்ன தேவை? வாரம் ஒருமுறை விஜய் வந்து கை அசைத்துவிட்டு சனி, ஞாயிறு ஓய்வுக்கு சென்றால் போதுமே.
சொந்த செலவில் சூன்யம் வைத்துள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களின் தவறால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை முச்சந்தியில் நிறுத்தி உள்ளது நமது சினிமா கவர்ச்சி. தமிழ்நாடு வளரவேக் கூடாது இதைத்தான் பாசிக கும்பல் விரும்புகிறது.
முன்னேற்றமாவது ஒன்னாவது. அண்ணனின் தலைமுடி எவ்வளவு அழகாக இருக்கு பாருங்க? அண்ணன் வெள்ளிக்கிழமை வந்தால் பட்டு வேட்டி பட்டு சட்டையில் வருவதை பார்க்க எவ்வளவு ரம்யமாக இருக்கு பாருங்க.
அரும்பாடுபட்டு பத்தாண்டுகளாக பின்தங்கிய மாநிலத்தை முன்னேற்ற திமுக அரசுடைய வீழ்ச்சியால் இன்னும் இருபதாண்டுகள் பின்னோக்கி கொண்டுப்போகப்போற தற்குறி கும்பலிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க போவது எப்போது ?
2008 இல் ஆரம்பித்த இந்த திட்டம் முடிவுற்று இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரந்தூர் விமான நிலையம் தனது சேவைகளை தொடங்கி இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக