வி.சபேசன் : ஈரோடு கிழக்குத் தேர்தல் தோல்வியால் தம்பிகள் விரக்தி! -
லண்டனில் தாக்குதல் முயற்சி!
யாரும் போட்டியிடததால் ஈரோடு கிழக்குத் தேர்தலில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று வெளிநாட்டுத் தம்பிகள் நம்பியிருந்தார்கள்.
ஆகக் குறைந்தது ஐம்பதாயிரம் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்கள்.
ஆனால் பெரியார் பற்றி பேசி தம்பிகளின் கனவில் அண்ணன் சீமான் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் என்பதை அவர்கள் பாவம் அறிந்திருக்கவில்லை.
லண்டனில் இருந்து பனியிலும் குளிரிலும் உழைத்து அண்ணனுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு 'மகிழ்ச்சி கிடையாது,
எப்பொழுதும் பயிற்சி மட்டும்தான்' என்கின்ற செய்தியை ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் சொல்லத் தொடங்கியிருந்தன.
சொந்தப் பணத்துடன் 'அ' வில் தொடங்கி 'த்'இல் முடியும் பெயர் கொண்ட ஒரு இசையமைப்பாளரை வைத்து லண்டனில் நிகழ்ச்சி செய்து பல மில்லியன் ருபாய்களையும் சேர்த்து அனுப்பியும் இதுதான் முடிவா என்று தம்பிகள் அதிர்ந்து போனார்கள்.
ஈரோடு கிழக்கில் கட்டுப்பணமும் பறிபோய்விட்டது என்கின்ற செய்தியும் வர தம்பிகள் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டார்கள். யார் மீது கோபத்தை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த போதுதான் அந்தச் செய்தி அவர்களின் கண்ணில் பட்டது.
ஒரு சிறிய அறையில் கொஞ்சப் பேர் இருந்து பெரியார் பற்றி பேசுகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. உடனடியாக எல்லோரும் கிளம்பி அங்கே போய் கத்திக் கூச்சலிட்டார்கள். தாம் இதுவரை வாட்ஸ்ஆப்பில் படித்த செய்திகளை எல்லாம் சொல்லி காட்டினார்கள். கடைசியில் காவல்துறை வந்து அவர்களை அனுப்ப வேண்டியதாகி விட்டது.
என்றாலும் தங்களின் விரக்தியை கொஞ்சமாவது தீர்க்க முடிந்ததை எண்ணி தம்பிகள் 'வெற்றி,வெற்றி' என்ற முழக்கத்துடன் கலைந்து சென்றார்கள்.
இந்தச் செய்தயை அறிந்த சீமானும் மகிழ்ச்சி அடைந்தார். என்ன நடந்தாலும் தம்பிகள் தொடர்ந்து பணம் அனுப்புவார்கள் என்பதை உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இவ்வாறாக லண்டனில் மாபெரும் வெற்றி பெற்ற செய்தியை தம்பிகள் உலகம் முழுவதும் அறிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக