மின்னம்பலம் - christopher : பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம் என சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். seeman again angry on periyar
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களை சந்தித்தார்.
2026ல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!
அப்போது அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை.. அவ்வளவுதான்.
ஈரோடு கிழக்குத் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் அமைப்பை விரிவாக்கும் பணியாகத் தான் பார்க்கிறோம். 2026ல் நாங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
தேர்தலில் 15 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெற்ற வாக்கு திமுக வாக்கு என்றும், நாம் தமிழர் வென்ற வாக்கு அதிமுக, பாஜகவுக்கு உடையது என்று கூறுவது கேவலமான சிந்தனை. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. திமுக தனித்து நின்று வாக்குகளை பெறவும் முடியாது; பணம் கொடுக்காமல் வாக்குகளைப் பெறவும் முடியாது.
அதிமுக, பாஜக எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும்? அவர்கள் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்? நான் சண்டைக்கு போனால் தனியாக தான் போவேன். நான்கு பேருடன் போக நான் ஒன்றும் நரியல்ல. என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. என்னால் முடியவில்லை எனில் எனக்குப் பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள்.
உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன்!
நான் பெரியாருக்கு எதிராக இப்போது தான் பேச தொடங்கியிருக்கிறேன். நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்போது விழிப்புணர்வு, தெளிவு பெற்றதால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்கள் கொள்கைக்கானவர்கள் அல்ல; நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன்.. என் கேள்விக்குதான் பதில் சொல்ல வேண்டும். தாய்மொழியை இழித்து பேசியவரை எப்படி தலைவனாக ஏற்க முடியும்?
தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது. மத்திய அரசு வரி கொடுக்கவில்லை என்ற புலம்பவா 40 பேரை அனுப்பி வைத்தோம்? ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு.. அப்படி இருக்கும்போது, நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். தமிழ்நாடு என்று வேறு எந்த மாநில முதலமைச்சரும் இதுபோன்று புலம்பவில்லை.
பெரியாருக்கு வெறும் 222 ஓட்டு தான் கிடைத்தது. எங்கு இருந்தோ வந்த பெரியார் என்பது எங்களுக்கு தேவை இல்லை. பிரபாகரன் பெரியாரை பத்தி பேசவே இல்லை. பிரபாகரன் சாக வேண்டும் என்று நினைத்தது திராவிடம். உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள், பெரியார் வேண்டும் என்றால் என்னைவிட்டு வெளியேறிப் போய்விடலாம்” இவ்வாறு சீமான் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக