கதிர் ஆர் எஸ் : கன்னி மாடம், சார் போன்ற உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கிய போஸ் வெங்கட் என்ற திரைத்துரை பிரமுகர் தன்னை திமுக என பிரகடனம் செய்து கொண்டு திரியும் ஒரு நபராவார்.
அவர் தன் சந்தர்ப்பவாத முகமூடியை தானே கிழித்துக்கொண்டு அம்பலமான நிகழ்வு நேற்று நடந்தது.
இவரைப்போலவே திரைத் துறையில் தங்களை திடீர் திமுககாரர்களாக சொல்லிக்கொண்டு தலைவர்கள் அலங்கரிக்கும் மேடையில் ஃபுட்போர்டு அடித்துக் கொண்டு அங்கு
தலைமையுடன் தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை அருவருக்கத் தக்க வகையில் வெளிப்படுத்திக் கொண்டு திரியும் பலர் தாங்களாகவே முன்வந்து இப்படி தங்களது முகமூடியை கிழித்துக் கொள்வார்களானால் அது ஒரு நல்ல முன்னெடுப்பாக இருக்கும்.
இப்படிப்பட்ட நபர்களை நாம் தொடக்கம் முதலே அடையாளப்படுத்தி எழுதி வருகிறோம்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக பலர் அவர்களை இயக்க அரசியல் மேடைகளில் விதந்தோதும் நிலை இருக்கவே செய்கிறது.
திரைத்துறையினர் அரசியல் பங்களிப்பு செய்வது ஒரு வகையில் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றாலும் இப்படிப்பட்ட அரைவேக்காடுகள் கட்சியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது சுயலாபத்திற்காக மட்டுமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என்பதை இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கிறது.
ஒரு சாதாரண தொண்டன் கட்சிக்காக எழுதுவதற்கும் பேசுவதற்கும் உழைப்பதற்கும், ஒரு நடிகன் அந்த வேலையை செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.சாதாரண தொண்டனுக்கென்று எந்த எதிர்பார்ப்புகளும் இருப்பதில்லை.அவன் இயக்கத்திற்காக உழைப்பான்..கட்சியின் எதிர்கால வெற்றி பற்றி சிந்திப்பான்..கட்சியை முன்னுக்கு கொண்டு வர இயன்றதை செய்து கொண்டே இருப்பான்.
திரைத்துறை சந்தர்ப்பவாதிகள் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தங்களுக்கான சகாயங்களை செய்து முடித்துக் கொள்வார்கள்.
விளம்பரம் தேடிக்கொள்வார்கள்.
அதிகாரத்தை பயன்படுத்தி அனுகூலம் அடைவார்கள்.
கூடவே கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை இழுத்து வந்து பரிந்துரை செய்து தகுதியானவர்களுக்குச் செல்ல வேண்டிய பொறுப்புகளையும் விருதுகளையும் தட்டிப் பறிப்பார்கள்.
இப்படி தங்கள் காலம் முழுதும் கட்சியிடம் இருந்து இயன்றவரை தொடர்ந்து சுரண்டி திங்கும் இவர்கள் கட்சிக்கு ஒரு பிரச்சனை என்றாலோ சறுக்கல் என்றாலோ காணாமல் போய்விடுவார்கள்.
அப்படித்தான் 2009 முதல் 2021 வரை பலர் காணாமல் போனார்கள்.
ஆனால் திடீரென்று அவர்களின் வரத்து 2021க்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது.
போஸ் வெங்கட்டை பொருத்தவரை கலைஞர் காலத்திலேயே கட்சிக்கு பணியாற்றியதாக குறிப்பிட்டு அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
2011 தேர்தலில் கலைஞருக்கு ஆலோசனை கொடுத்ததாக சொல்லி இருக்கிறார்.
2026 தேர்தலில் ரெட் ஜெயண்டால் பிரச்சனை வரும் என்று புதிதாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி கட்சிக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்குகிறார்.
அதாவது தலைமைக்கு அறிவுரை சொல்கிறாராம்.
எப்படி இவர் திடீரென்று இப்படி ஒரு பேட்டி கொடுக்க துணிந்தார் என்று எண்ணி பார்த்தேன்.
பிறகுதான் தெரிந்தது அவர் கடைசியாக எடுத்த 'சார்' என்ற சூரமொக்கை படத்தை ரெட்ஜெயண்ட் வாங்கவில்லை என்பது.
மேலும் இவர் கூடிய விரைவில் விஜைணா காலில் சென்று விழக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக..இல்லாத ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டு அதன் மூலம் 2026 தேர்தல் பரப்புரைக்கு அதை ஒரு கருவியாக பயன்படுத்த திட்டமிட்டு இப்போது முதல் பேச தொடங்கி இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
மக்களிடையே தகவல் தொழில் நுட்ப அறிவு குறைவாக இருந்த 2011 தேர்தலுக்கும் ஒவ்வொருவர் கையிலும் ஏ ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன் வரப் போகும் 2026 தேர்தலுக்கும் ஒப்பீடு செய்து பேசும் இந்த அரைவேக்காட்டு மூளை விஜைணா இடம் சென்றாலும் சரி ..வேறு எங்கு சென்றாலும் சரி..இனி விலை போகாது.
இருக்கும் நாட்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து,வாங்கிய கடனை அடைத்து விட்டு வயதான காலத்தை நிம்மதியாக வாழ்வதற்கான ஏற்பாட்டை செய்து கொள்வது புத்திசாலித்தனம்.
ஆனால் தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைசாமி என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த ஆளை இனி யாராலும் காப்பாற்ற முடியாது.
கதிர் ஆர் எஸ்
15/02/25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக