ராதா மனோகர் : சிங்கள மொழியிலும் இலங்கை தமிழிலும் சமஸ்கிருதம் அளவுக்கு அதிகமாகவே கலந்திருப்பது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்
பார்ப்பன மயக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது பற்றியும் ஆய்வு செய்தல் வேண்டும்!.
குறிப்பாக சென்ற நூற்றாண்டில் இலங்கை சிங்கள தமிழ் தலைவர்கள் தமிழக இந்திய பார்பனர்களோடு நெருங்கிய உறவை கொண்டிருந்தார்கள்
குறிப்பாக லண்டனிலும் சென்னையிலும் கல்வி சார்ந்தும் தொழில்துறை சார்ந்தும் நல்ல தொடர்புகளை வைத்திருந்தனர்
ஏனெனில் அந்த காலக்கட்டங்களில் பார்ப்பனர்கள்தான் எல்லா உயர்ந்த இடங்களிலும் நிலை கொண்டிருந்தனர்
அதன் காரணமாகவே இலங்கை சிங்கள தமிழ் தலைவர்களுக்கு பார்ப்பனர்கள் மேல் ஒரு அளவு கடந்த மரியாதையை அல்லது மயக்கம் இருந்தது
இந்த ஆரிய மயக்கமானது சிங்கள மொழியிலும் இலங்கை தமிழ் மொழியிலும் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலப்பதற்கு காரணமாகியது
அன்றாட வாழ்க்கையிலும் பார்ப்பனர்களை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கமும் உண்டானது
பார்ப்பனரின் சகவாசத்தால் இலங்கை தமிழர்கள் திராவிடம் என்ற சொல்லே தீண்டக்கூடாத சொல்லாக அடிமனதில் பதியவைத்து கொண்டனர்
மறுபுறத்தில் அசல் திராவிட மக்களாகிய சிங்கள மக்களையும் தங்களை ஆரிய மக்கள் என்று நம்ப வைக்கப்பட்டனர்
எந்த காலத்திலும் திராவிட மக்கள் ஒன்று சேர்ந்துவிட கூடாதல்லவா?
சிங்கள மக்களை ஆரியர் என்று நம்ப வைத்தனர்
மறுபுறத்தில் தமிழர்களை திராவிடத்திற்கு எதிரியாக்கினார்கள்
மொத்தத்தில் இலங்கையின் மொத்த மக்களும் ஆரிய பார்ப்பனர்களின் நூலில் கட்டி விடப்பட்டு தெருவில் ஆடவிட்டு வித்தை காண்பிக்கும் குரங்கின் நிலைக்கு உள்ளாகினர்
சிங்கள மக்கள் அசல் திராவிட மக்கள்தான்
இலங்கை தமிழர்கள் அசல் திராவிட மக்கள்தான்
இருபகுதியினரும் மலையாள தெலுங்கு கன்னட துளு ஒடிஷா வங்காள தமிழ் மக்களின் கலவைதான்
இலங்கை பௌத்தம் என்பது ஆரிய பார்ப்பன சமாசாரங்களை காப்பி அடிப்பதையே ஒரு பெருமையாக கருதுகின்றது .
மீள்பதிவு : சிங்கள மொழியின் ஆதி அடையாளமாக கடம்ப கிரந்த எழுத்துக்களில் சில குறிப்புக்கள் இருப்பதாக (கி மு) இரண்டாம் நூற்றாண்டில்) சிலர் கூறுகிறார்கள்
ஆனால் மேலும் சிலர் அந்த எழுத்துக்களை தமிழ் / சிங்கள / தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதாகவும் கூறுகிறார்கள்.
கடம்ப அரசர்களின் காலம் கிமு) மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து கிமு) இரண்டாம் நூற்றாண்டுகள் வரையினாலாவை.
Sinhala Prakrit (until 3rd century CE)
Proto-Sinhala (3rd–7th century CE)
Medieval Sinhala (7th–12th century CE)
Modern Sinhala (12th century – present)
இப்படி பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டாலும் 12 ஆம் நூற்றாண்டில் இருந்த நிசங்கமல்லா அரசரின் காலத்தில்தான் சிங்கள மொழியில் ஒரு இலக்கியம் உருவானதாக கூறப்படுகிறது
எனவே நிசங்கமல்லா ஆட்சிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்றைய சிங்கள மொழியின் உருவாக்கம் நடந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு
ஏராளமான சிங்கள சொற்களை சமஸ்கிருத மூலத்தில் முடிச்சு போடும் காரியமே பெரிதும் நடந்திருக்கிறது
பல தமிழ் சொற்களை சம்ஸ்கிருத சொற்களில் இருந்து உருவானவை என்று இப்போதும் கூட எக்கச்சக்கமான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
சமஸ்கிருதம் என்பது எல்லா உபகண்ட மொழிகளுக்கும் தாய் மொழி என்ற அண்டப்புளுகு ஆகாச புழுகுணிகளின் பிரசாரங்கள் மீண்டும் மீண்டும் அவிழ்த்து விடப்பட்டதால் அந்த கருத்தே பலரின் மனதில் இன்றும் கூட நிலை பெற்றிருக்கிறது
உதாரணமாக ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல் நீரை குறிக்கிறது
இந்த ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல்லின் ஆதாரம் சலம் என்ற தமிழ் சொல்லேயாகும்
குடிநீருக்கு நதிகளையே பெரிதும் சார்ந்திருந்த மக்கள் சலசலத்து ஓடுவதால் அதை சலம் என்றழைத்தார்கள்
இது போல ஏராளமான தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளையும் மருவி உருமாறி உச்சரிக்க படுகிறது
நீர் ,ஜலம் அல்லது சலம் என்பதை சிங்கள மொழியில் வத்துரு என்பதாகும்
வத்துரு என்ற சொல் அசல் தமிழ் சொல்லாகும்
( ஆனால் இதையும் சம்ஸ்கிருத சொல்லில் இருந்து வந்ததாக இந்த சோ கோல்டு ஆய்வாளர்கள் கதை அளந்திருக்கிறார்கள்)
ஒரு மொழியின் ஆதார சொற்களில் நீர் என்ற சொல்லுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கிறது
வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற சொல்லின் மருவலே ஆகும் என்றெண்ணுகிறேன்.
சிங்கள மொழியானது பௌத்தத்தை காப்பதற்கு உருவான மொழி என்ற எனது கருத்துக்கு வலு சேர்ப்பதாக ஏராளமான சிங்கள சொற்கள் உள்ளன
வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற சொல்லின் சங்கேத சொல்லாகவும் இருக்க வாய்ப்புள்ளது
சிங்கள மொழியானது பௌத்த அறிவு கருவூலங்களை பார்பனீயத்திடம் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி என்ற கருத்திற்கு இவை ஏற்புடையதாக இருக்கிறது
(சுமார்4000 சொற்கள் தமிழுக்கும் சிங்களத்திற்கு பொதுவான சொற்கள் என்று டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன் அவர்கள் கொழும்பு டெலிகிராப் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் )
Balanathan Balakrishnan
ஆரியர்கள் அறிவிலிகளாக தான் இருந்துள்ளார்கள், என்பது இந்திய வரலாற்றில் நெடுக கிடைத்துள்ளது. ஆரியர்கள் பிராகிருதம் சமஸ்கிரதம் மற்றும் தமிழ் ஆக பரிணாமம் பெற்ற பின்னே இந்திய துணை கண்டத்தில் அதிகார பொறுப்பிற்கு வருகிறார்கள்.
அதனால் தான் அவர்களுக்கு பிரகிரதத்தை படிக்க தெரியவில்லை.
அசோகரின் கல்வெட்டில் உள்ளதை படிக்க தெரியாத முட்டாள் கூட்டம் தான் இந்த பார்ப்பனிய கூட்டம்.. மன்னன் ஃபெரோஸ் ஷா துக்ளக் காலத்திலும் அக்பர் காலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் சரி இவர்களின் பிரகிருத்தத்தின் மொழி பெயர்ப்பு அவ்வளவு மோசமானது, இதில் சமஸ்கிருதத்தில் இருந்து தான் எல்லா மொழிகளும் வந்தது என்ற build up வேற....
Manivannan Manivannan
விசயன் ஆரியன் இல்லையா? விசயன் வம்சம் சிங்களம் இல்லையா? தாய் வழி தானே பாண்டிய அரசு..எது உண்மை..விசயன் கலிங்கம் தானே..இன்றைய ஒரிசா..எது உண்மை? அருள் கூர்ந்து சிங்கள,ஈழத்தமிழ் வரலாற்றை விளக்கவும்...
Subash Winston Thangaraja
விஜயன் என்பது மகாநாம தேரரின் புனைவு.
Subash Winston Thangaraja
நிச்சயமாக! ராஜ ராஜன் என்பதும் சமஸ்கிருதமே. கோ அல்லது அரசன் என்பதே தமிழ். எனது பெயரில் பாதியும் சமஸ்கிருதமே. இந்து மதத்தின் ஊடுருவல்.
Manivannan Manivannan
ராதா மனோகர் பதில் தாருங்ள்..
Radha Manohar
விசயன் வரவு என்றுதான் மகாவம்சம் குறிப்பிடுகிறது .
ஆரியன் என்றால் உத்தமமானவன் உயர்ந்தவன் என்றெல்லாம் பார்ப்பனர்களின் கட்டுக்கதை புராணங்கள் அளந்த கதைகளின் கவர்ச்சியால் அந்த காலக்கட்டத்தில் தங்களை ஆரியன் என்று அழைத்து கொள்வதை பலரும் ஒரு பேஷனாக வைத்திருக்க வாய்ப்புள்ளது ..
இப்போது நுனி நாக்கினால் சோஷலிசம்ன்னு சொல்வது போல என்று கூறலாம்.
மகாபாரத ராமாயண சீரியல்களில் வரிக்கு வரி ஆர்ய புத்திரா என்று பெண் கதாபாத்திரங்கள் பேசுவது போல் என்றும் கருதலாம்
விசயன் கலிங்கநாட்டில் இருந்து வந்ததாக தான் குறிப்பிடுகிறார்கள்
கலிங்கம் ( இன்றைய ஒடிஷா வங்கம்) ஆரியர்களின் நாடு அல்லவே .
அது திராவிட தேசம்தான்.
ஒடிஷாவின் நகரங்களில் பார்ப்பனர்கள் மெதுவாக குடியேற தொடங்கிய காலம் அது
மேலும் விஜயன் கறுப்பு தோல்தான்
போர்த்துக்கீச ஒல்லாந்த பிரித்தினியா வரவிற்கு பின்புதான் பலரும் சற்று வெள்ளை நிறமாகினர் .
Manivannan Manivannan
விசயனே திராவிடர் தான் எனக்கூறுகிறீர்கள்.சைவ சமயத்தை சேர்ந்த தமிழரும்,பவுத்த சமயத்தை திராவிட இன சிங்களரும், ஒரே இன இரு மொழியாளர்களின் மோதல்...சரி தானே...
Radha Manohar
சம்பந்தர் வகையறாக்களின் கழுவேற்றங்களில் இருந்து தப்பி பிழைத்து இலங்கைக்கு ஓடியவர்கள்தான் அவர்கள்.
பௌத்த கருவூலங்களை பாதுகாக்க உருவாக்கிய சங்கேத மொழிதான் சிங்களம்.
அன்று கழுவேற்றிய அதே சைவர்கள்தான் இன்றும் பௌத்தத்தின் மீது வன்மத்தை கக்குகின்றனர்.
மறுபுறத்தில் அதே பௌத்தர்களுக்கும் பார்ப்பனியத்திற்கு கொஞ்சம் மயங்குகிறார்கள்
Manivannan Manivannan
இதை ஆரியப்பார்ப்பனர்கள் பயன்படுத்தி சண்டை போட வைக்கின்றனர்.சனாதன கொள்கை அடிப்படையில் சைவ தமிழர்கள் சிங்களர்களிடம் சண்டையிடகின்றனர்
புகச்சோவ்
பூசாரிகளை குடியேத்தின ராஜாக்களை சொல்லணும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக