tamil.oneindia.com - Nantha Kumar R : திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் குற்றால ரோட்டில் உள்ள சர்ச் ரோட்டின் அருகே நேற்று இரவு காரில் வந்த நபர்கள் மர்மபொருளை தூக்கி வீசிய நிலையில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது. காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரிலேயே இருந்த ஜமேஷா முபின் இறந்தார்.
இதுதொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சதிச்செயல்கள் இருக்கலாம் என்ற நோக்கத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் திருநெல்வேலியில் உள்ள சர்ச் அருகே இரவில் மர்மபொருள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு: திருநெல்வேலி டவுன் குற்றாலம் ரோட்டில் சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சர்ச் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சர்ச் அருகே உள்ள பரோட்டோ கடையின் முன்பு மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைகேட்டவுடன் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
போலீஸ்-தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
மேலும் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் மர்மபொருள் வெடித்ததாக கூறப்பட்ட இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த சில பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
முன்விரோதம் காரணமா?
இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சர்ச் அருகே உள்ள பரோட்டா கடையில் அய்யப்பன் என்பவர் தனது உறவினருடன் நின்ற நிலையில் கார் ஒன்று சென்றதும், அந்த காரில் இருந்தவர்கள் வீசிய மர்மபொருள் தான் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்பு
இதற்கிடையே மர்மபொருள் வெடித்ததால் திருநெல்வேலியில் பரபரப்பபு தொற்றிக்கொண்டது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மர்மபொருள் வெடித்ததற்கான காரணம் என்ன? அது எப்படி தயாரிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. அதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
English summary
Last night, persons arriving in a car threw the mysterious object near Church Road in Courtala Road, Tirunelveli Town, and it exploded with a loud noise. As this caused a stir, the police and forensic experts went to the spot and conducted an investigation. This incident has caused shock and excitement.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக