புதன், 18 ஜனவரி, 2023

தலாய்லாமா 'எளிய துறவி' அல்ல! திபெத் நிலப் பிரபுத்துவ இறையாட்சி அமைப்பின் தலைவர் அவர்

 hirunews.lk : தலாய்லாமாவை அழைத்தமைக்கு சீன தூதரகம் அதிருப்தி!
திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற பௌத்த பிக்குகளின் கோரிக்கைக்கு, இலங்கைக்கான சீன தூதரகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மல்வத்துபீட மஹாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை, கண்டியில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் (ர்ர றுநi) தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்துரைத்த இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி, தலாய் லாமா கூறுவதை போல் ஓர் 'எளிய துறவி' அல்லர், 1951 இல் சீனா கையகப்படுத்தப்படுவதற்கு முன்னர் திபெத்தில் இருந்த நிலப் பிரபுத்துவ மற்றும் இறையாட்சி அமைப்பின் தலைவராகவும் பிரிவினைவாதியாகவும் செயற்பட்டவர் என குறிப்பிட்டார்.


அவர் நீண்ட காலமாக சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சீனாவில் இருந்து திபெத்தை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஒரு மதப் பிரமுகராகராவார் என தெரிவித்தார்.
தலாய் லாமா காலத்தில் சுமார் 1 மில்லியன் மக்கள் திபெத்தின் சனத்தொகையில் 95 சதவீதமானோர் அடிமைகளாக இருந்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ், திபெத்திய மக்கள் தற்போது 31 பில்லியன் அமெரிக்க டொடலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒரு வளமான பொருளாதாரத்தை அனுபவித்து வருகின்றனர்.

அத்துடன் அங்கு மதச் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் திபத்தின் ஆண்மீக தலைவர் தலாய்லாமா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுக்கப்பட்ட அழைப்பானது இருதரப்பு உறவுகளை பாதிக்கும் வகையில் அமையும் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த, மல்வத்துபிட மகாநாயக்க தேரர், இலங்கையின் நெருங்கிய நட்பு நாடான சீனா, இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது உதவி வழங்குகின்றது.

அதற்கு, இலங்கையர்கள் சீனாவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளோம் மல்வத்துபீட மஹாநாயக்க தேரர் தெரிவித்தார்.

பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு அண்மையில் கோரிக்கை விடுத்தனர்.

இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினரே குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

தலாய்லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு சென்றமையினால் அங்கு பெரும்பாலானவர்கள் பயணம் செய்கின்றனர்.

அதேபோன்று அவர் இலங்கைக்கு பயணம் செய்தால், இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து நாடு பொருளாதாரத்தில் சிறக்கும் என்று விமல தேரர் உட்பட்ட இலங்கையின் முக்கிய பௌத்த பிக்குகள் கொண்ட குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: