தவமணிதேவி லோகசங்கர் : தமிழன் கட்டிகாத்த புத்தமத்தை ஈழத்தமிழன் கைவிட்டது தான் எம் அடிப்படை பிரச்சனைகளின் ஆரம்பம்.
வடக்கு கிழக்கில் பௌத்த மதச் சின்னங்களின் எச்சங்கள் இருப்பதால் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது அறியாமை. மாறாகத் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை. மேலும் கி மு 500 முதல் ஏறக்குறைய 1500 ஆண்டுகள் பௌத்த மதம் ஈழத்திலும் ,தமிழகத்திலும் முக்கிய மதங்களில் ஒன்றாக விளங்கியது. சாதிப் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்கள், பிறப்பினால் மேல் சாதி – கீழ் சாதி எதுவும் இல்லையெனப் போதித்த பௌத்தத்தை இலகுவாக ஏற்றுக் கொண்டனர்.
இன்று பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பீற்றிக்கொள்ளும் சிங்களவர்களால் மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி, உதயணன் காதை, வீரசோழியம் ஆகிய தமிழ்ப்பௌத்த காப்பியங்களுக்கு நிகரான ஒரு பௌத்தமத காவியத்தை இருபத்துமூன்று நூற்றாண்டுகளாகத் தரமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இலங்கையை மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த புத்தகோசர் “விசுத்தி மார்க்கம்” என்ற பௌத்தமத நூலை பாளிமொழியில் இயற்றினார்.
*ஆச்சாரிய தருமபாலர்:
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் பௌத்த மகாவிகாரையின் மகாதேரராக இருந்தவர்
*காஸ்யப தேரர்:
சோழநாட்டில் காவிரிப் பட்டினத்தைச் சேர்ந்த காஸ்யப தேரர் விமதிவிச்சேதனி, விமதிவிநோதின், மோகவிச்சேதனி, அநாகத வம்சம் ஆகிய பௌத்த தர்ம உரை நூல்களை எழுதியுள்ளார்.
இவரது நூல்களும் இலங்கையின் பௌத்த சங்கத்தினரால் பேணப்பட்ட இலக்கியங்களே.
கி.மு.400 முதல் கி.பி.600 வரை ஆயிரம் ஆண்டுகளாக பௌத்தம் ஈழத்திலும்,தமிழகத்தில் பிரபல்யமான ஒரு மதமாக இருந்துள்ளது.
ஆறாம் நூற்றாண்டின் பின்னரே சைவசமயக் குரவர்களும், நாயன்மார்களும் தோன்றி பௌத்தத்தை தமிழகத்திலிருந்து முற்றாக இல்லாதொழித்தனர்.
ஆனால் ஈழத்தில் ஒரு பெரும் பிரிவினர் பௌத்தத்தையும், பௌத்த பாளி பின்தொடர்ந்தனர். இதுவே காலஓட்டத்தில் சிங்கள மொழியாகவும் புத்தமதமாகவும் மாற்றம் பெற்றது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக