hirunews.lk : அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பின வாலிபர் ஒருவர் உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது நடவடிக்கையின்போது ஜோர்ஜ் பிளொய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் தரையில் வீழ்த்தி, அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து ஜோர்ஜ் பிளொய்ட்ன் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்காவில் மாத்திரமின்றி, சர்வதேச ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இனவெறிக்கு எதிரான 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' என்கிற தன்னார்வ அமைப்பு இந்த போராட்டங்களை முன்னெடுத்தது.
இந்தநிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த கீனன் அண்டர்சன் என்ற 31 வயது இளைஞன், காவல்துறை நடவடிக்கையில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கருப்பினத்தை சேர்ந்த அவர் 'பிளக் லைவ்ஸ் மேட்டர்' அமைப்பின் இணை நிறுவனரான பெட்ரிஸ் கலர்சின் உறவுமுறை சகோதரர் ஆவார்.
வீதி விபத்து தொடர்பான முறைப்பாட்டில், காவல்துறை அவரைக் கைதுசெய்ய முயற்சித்துள்ளது.
அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்துறை அதிகாரி அவரை தரையில் வீழ்த்தி, கழுத்தில் முழங்கையை வைத்து அழுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அண்டர்சன், 'ஜோர்ஜ் பிளொய்ட் போல தன்னைக் கொலை செய்ய பார்க்கிறார்கள்' எனக்கூறி உதவி கோரியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், அருகில் இருந்த மற்றொரு காவல்துறை அதிகாரி எண்டர்சன் மீது மின்சாரத்தை பாய்ச்சும் துப்பாக்கியை 30 வினாடிகள் தொடர்ந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சுயநினைவை இழந்த அவர் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்வம் அமெரிக்காவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக