திருவள்ளுவர் விருது - நா.கு. இரணியன் பொன்னுசாமி
பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா
பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா. வேங்கடாசலபதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்
திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி
பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்
கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா
அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை
தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான 9 விருதுகள் பெறுவோர் பட்டியல் தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023ஆம் ஆண்டுக்க்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வரும் ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் விருது - நா.கு. இரணியன் பொன்னுசாமி
பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா
பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா. வேங்கடாசலபதி
பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்
திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி
பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்
கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா
அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை
தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக