திங்கள், 4 ஜூலை, 2022

தெலுங்கான Cm சந்திர சேகர ராவ் அதிரடி : மோடி குஜராத்தி நண்பர்களுக்கான ஒரு சேல்ஸ்மேன் மட்டுமே

 Maha Laxmi  : உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் உங்கள் முதலாளிகளை  ஆதரித்துதான் ஆகவேண்டும். அதற்காக நீங்கள் மாநில அரசுகளின்மீது அதிகாரம் செலுத்தி ,
10 சதவீதம் நிலக்கரியை உங்கள் தனியார் முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறீர்கள்.
இல்லாவிட்டால் கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை நிறுத்தப்படும் என்று மிரட்டுகிறீர்கள்.
இது என்ன ரெளடிசமா?  வலுக்கட்டாயமா?
மாநில அரசுகளை  மானம், மரியாதையுடன் நடத்தும்  முறையா?
அதனால் நான் தனியாரிடம் அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய  மறுத்துவிட்டேன்.
உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டேன்.
என் சொந்த மாநிலத்தில்  சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் உள்ளபோது அதை நான் உபயோகிப்பேன்.  
நான் ஏன் தனியாரிடம் அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டும்.


இந்திய நிலக்கரி டன் ரூ4000க்கு கிடைக்கும்போது நான் ஏன் மோடியின் நண்பர்களிடம் ரூ25000 முதம் ரூ30000க்கு 7 மடங்கு விலை கொடுத்து  இறக்குமதி செய்ய வேண்டும்?
காரணம் என்னவென்றால் நிலக்கரியை விற்பவன் மோடியின் குஜராத்தி நண்பன்.
அதனால்தான் நான் சொல்லுகின்றேன்,
மோடி பிரதம மந்திரி வேலை செய்யவில்லை, அவரின் குஜராத்தி நண்பர்களுக்கு சேல்ஸ்மேன் வேலையை செய்கிறார் என்று.
நான் உங்கள் நிலக்கரி இறக்குமதி பாலிசி மீது  பகிரங்கமாய் குற்றம் சுமத்துகிறேன். நாட்டுமக்களின் முன்பாக உங்களிடம் சவால் விடுகிறேன்.
நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
விளக்கமென்ன? நீங்கள் குற்றமற்றவராய் இருந்தால் மக்கள் முன் உங்கள் பதிலைக் கூறுங்கள் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: