புதன், 6 ஜூலை, 2022

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகிறாரா நக்வி? ஒரே நாளில் இரு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா...

முக்தர் அப்பாஸ் நக்வி

விகடன் -  சி. அர்ச்சுணன்:  : துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக முக்தர் அப்பாஸ் வேட்பாளராக நிறுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 பிரதமர் மோடியின் அமைச்சரவையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த முக்தர் அப்பாஸ் நக்வி, தனது அமைச்சர் பதவியை திடீரென இன்று ராஜினாமா செய்துள்ளார். அண்மையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக முக்தர் அப்பாஸ் நக்வி வேட்பாளராக நிறுத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று முக்தர் அப்பாஸ் ராஜினாமா செய்துள்ளார்.

இதனால், ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறவுள்ள துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் முக்தர் அப்பாஸ் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இதில், முக்தர் அப்பாஸின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் நாளையோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரையடுத்து, மத்திய உருக்குத்துறை அமைச்சரான ஆர்.சி.பி.சிங், பிரதமர் மோடியைச் சந்தித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் நாளையோடு முடிவடைகிறது

யார் இந்த முக்தர் அப்பாஸ் நக்வி?

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான முக்தர் அப்பாஸ் நக்வி, 1957-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். தனது கல்லூரி நாள்களிலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்த முக்தர் அப்பாஸ், தன்னுடைய 17-வது வயதில் 1975-ம் ஆண்டு எமெர்ஜென்சியின்போது நைனி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மாணவர் தலைவராக ஜனதா கட்சியின் செயல்பாடுகளிலும் பங்கேற்றுவந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, 1980-ல் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சார்பாக உத்தரப்பிரதேசத்தைச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 1986-ல் முக்தர் அப்பாஸ் பாஜக-வில் இணைந்தார். அதையடுத்து 1998-ல் மக்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கான அமைச்சராகப் பதவிவகித்தார்.
முக்தர் அப்பாஸ் நக்வி
முக்தர் அப்பாஸ் நக்வி

அடுத்ததாக 2000 முதல் 2002 ஆண்டுவரை பாஜகவின் தேசிய செயலாளராகவும், பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார். 2016-ல் ராஜ்யசபா எம்.பி-யாக மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இடையில் 2014-ல் மோடியின் அமைச்சரவையில் சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான இணைஅமைச்சராக பதவியிலிருந்தார். 2016-ல் நஜ்மா ஹெப்துல்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அதே ஆண்டு ஜூன் 12-ல் சிறுபான்மை விவகாரத்துறையின் அமைச்சரானார். அதிலிருந்து அமைச்சராகத் தொடர்ந்துவந்த முக்தர் அப்பாஸ், தனது மாநிலங்களவை எம்.பி பதவி நாளை முடிவடையவுள்ள நிலையில் இன்று திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறா

கருத்துகள் இல்லை: