செவ்வாய், 5 ஜூலை, 2022

முஸ்லீம் வியாபாரி கைது ..உணவு சுற்றிக் கொடுத்த காகிதத்தில் கடவுள் படம் .. உத்தர பிரேதசம்

Rishvin Ismath  : உணவுப் பொருட்களை சுற்றிக் கொடுக்க பயன்படுத்திய பழைய பத்திரிகைத் தாளில் இந்துக் கடவுளின் படம் இருந்ததால் முஸ்லிம் உணவக உரிமையாளர் உத்தரப் பிரதேசத்தில் கைது.
2012 ஆம் ஆண்டு முதல் 'மெஹெக் ரெஸ்டோரண்ட்' எனும் பெயரில் தெருவோர உணவகம் ஒன்றை நடாத்தி வரும் முஹம்மது தாலிப் என்பவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார்.
RSS உடன் தொடர்புடைய 'ஹிந்து ஜாக்ரன் மஞ்' எனும் ஹிந்துத்துவா அமைப்பின் மாவட்டத் தலைவரான கைலாஷ் குப்தா என்பவன் வழங்கிய புகாரின் அடிப்படையிலேயே முஹம்மது தாரிக் கைது செய்யப் பட்டுள்ளார்.
.'வழமை போன்று பழைய பத்திரிகைகளை விற்கும் கடை ஒன்றிலிருந்து வாங்கி வந்த தாள்களையே உணவுப் பொருட்களை சுற்றிக் கொடுக்கப் பயன்படுத்தினோம்.


தாள்களில் என்ன செய்தி, என்ன தலைப்பு, என்ன படம் இருக்கின்றது என்று இரு பக்கமும் புரட்டிப் பார்ப்பது சாத்தியமில்லை,
யாரும் பார்ப்பதுமில்லை' என முஹம்மது தாரிக் இன் 'மெஹெக் ரெஸ்டோரண்ட்' பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்துக் கடவுளின் படம் கடந்த நவராத்திரி காலத்தில் வெளியாகிய பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.
153A (மதங்களுக்கிடையில் பகைமையைத் தூண்டியமை), 295A (மத உணர்வுகளைப் புண்படுத்தியமை), 307 (கொலை செய்ய முயற்சித்தமை) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் முஹம்மது தாரிக் இற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. யோகி ஆதியநாத் என்கின்ற மதவெறி பிடித்த இந்துச் சாமியாரின் ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளின் ஒரு அம்சமாகவே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது என்பது, முஹம்மது தாரிக் இற்கு எதிராகச் சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டுக்களைப் பார்க்கும் பொழுதே தெரிகின்றது.
..
இந்துத்துவா மதவெறி ஆட்சியின் கீழ் 'புனித மாட்டு மூத்திரத்தை வாய்க்காலில் ஓட விட்டார்', 'புனித மாட்டு மலத்தை நிலத்தில் விழ விட்டார்' என்ற குற்றச் சாட்டுக்களின் கீழ் சிறுபான்மை முஸ்லிம்கள் கைது செய்யப் படும் கொடுமை நடந்தாலும் ஆச்சரியமில்லை

கருத்துகள் இல்லை: