ஞாயிறு, 3 ஜூலை, 2022

AIR ASIA எனும் பித்தலாட்ட உப்புமா ஏர்லைன்ஸ் கம்பெனி ,, சமூகவலையில் தெறித்த கதை

May be an image of 1 person and airplane

யவன குமாரன்  :  AIR ASIA எனும் பித்தலாட்ட உப்புமா ஏர்லைன்ஸ் கம்பெனி
ஜூன் மாதம் முழுதும் இங்கே பள்ளி விடுமுறை.
நானும் ஊரை பார்த்து மூன்று வருடம் ஆகிறது. கடைசியாக கொரோனா இழவு ஆரம்பிக்கும் முன்
கல்லூரி நண்பர்கள் ஒன்றுகூடலுக்காக திருச்சி போய் வந்தது.அதுவும் மூன்றே நாட்கள்.
சரி இந்த முறை இரண்டு பசங்களோடும் போய் வருவோம்.சதா கணினியிலேயே காலத்தை கழிக்கும் அவர்களுக்கும் ஒரு மாறுதலாய் இருக்கும் என்று
இணையத்தில் டிக்கெட் விலையை பார்க்க ஆரம்பித்தால் ரஜினிக்கு சுற்றியதை விட எனக்கு தலை கொஞ்சம் கூடுதலாய் சுற்றுகிறது.
இரண்டு வருடங்களுக்கு மேலாய் முடங்கி கிடந்தவர்கள் டிக்கெட் புக்கிங்கில் வெறி கொண்டு தீவிரம் காட்ட விலை தாறுமாறாய் ஏறியிருந்தது.


சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒன்வே கட்டணம் சென்னைக்கு 1012 வெள்ளி என்றால் தீவிரத்தை உணர்ந்து கொள்ளுங்கள். இது போக சாப்பாடு தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கிக்கோ என்று கூறும் இண்டிகோ போன்ற பட்ஜெட் ஏர்லைன்ஸ்களின் கட்டணம் ஒரு வழி பயணத்திற்கு 600ல் இருந்து 700 வரை.
காய்ஞ்ச மாடு கம்புல விழுந்த கதையா ரெண்டு வருஷ அகோரப்பசியை தீர்த்துக்கொள்ள முடிவு பண்ணிட்டானுங்க.ரைட்டு! ஒரு டிக்கெட்னா ஓகே.ஆனா நான் மூணு டிக்கெட் புக் பண்ணனும்.
நேரடியா போனாதான் இப்படி! மலேசியா போய் ட்ரான்சிட்டுல சென்னை போகலாம்னு அதை தேட ஆரம்பிச்சேன். Air Asia கொஞ்சம் நியாயமான விலையில காட்டுச்சு. அரசியல்ல சிவசேனாவுக்கு உச்சு கொட்ட வெச்ச மாதிரி ஒன்வே டிக்கெட் 350 வெள்ளியே கம்மின்னு என்னை நம்ப வெச்சுட்டானுங்க.
இந்த லட்சணத்துல கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் 8 மணி நேரம் அடுத்த விமானத்துக்கு காத்திருக்கணும்.
விதியேன்னு அதையும் சகிச்சுக்கிட்டு புக்கிங்க ஆரம்பிச்சேன்.கேட்ட எல்லா விவரங்களையும் கொடுத்து முடிச்ச பிறகு டிக்கெட் கன்ஃபார்ம் பண்ண பேமெண்ட் செக்சன்.1050 வெள்ளி காட்டுது.ஓகே சொல்றேன்.ஒரு நிமிஷன் சுத்திட்டு பேஜ் சொல்லுது Something went wrong your payment is not successful. ஆஹா!
உடனே அடுத்த அட்டெம்ப்ட்.இப்ப விலை கொஞ்சம் கூடியிருக்கு ஒரு டிக்கெட் 380 வெள்ளி.சரி தொலையட்டும்னு புக் பண்ணா எல்லாம் ஓகே ஆகி டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு.
அடுத்த ஐந்தாவது நிமிஷம் ஈமெயிலை ஓபன் பண்ணி பார்த்தா ரெண்டு தடவை கணக்கிலிருந்து பணம் வெட்டியிருக்கானுங்க.போலவே ஒரே நாள் ஒரே ஃபிளைட் அதே நபர்களுக்கு ரெண்டு PNR நம்பரோட டிக்கெட்டையும் அனுப்பி வெச்சிருக்கானுக. இதுக்கு அவனுங்க வெச்சிருக்கற பெரு டூப்ளிகேட் புக்கிங்.
சரி அவனுங்களை தொடர்பு கொள்ளலாம்னு பார்த்தா வாரத்துக்கு 105 விமானங்களை சிங்கப்பூரில் ஏற்றி இறக்கும் நிறுவனத்திற்கென்று அலுவலகம் இல்லை தொலைபேசி இல்லை ஒரு இழவும் இல்லை.
இணையத்தில் தேடோ தேடென்று தேடிய பிறகு ஒரு நம்பர் சிக்கியது.அது சாங்கி ஏர்போர்ட்டில் இருக்கும் கவுண்ட்டர் நம்பர்.அதற்கு அடித்தால் ஒண்ணு எடுக்கவே மாட்டானுங்க இல்லையின்னா எடுத்து பேசாம மழைக்காலத்தில் நம்மூர் ஈபிகாரனுங்க செய்ற மாதிரி ரிசீவரை கீழே வெச்சிருவானுங்க.
வக்காளி பணம் நம்முது ஆச்சே! விடுறா வண்டிய நேரா ஏர்போர்ட்டுக்கு.அங்க போனா கூலா ஒருத்தி சொல்றா ஒ! டூப்ளிகேட் புக்கிங். ஒரே வழி இதுதான்னு ஒரு ஈமெயில் அட்ரஸ் தருது.சரின்னு வீட்டுக்கு வந்து அந்த அட்ரசுக்கு மெயில் அனுப்புனா அடுத்த நிமிஷம் ஒரு கேஸ் நம்பர், அடுத்த நாளே உன்னோட கேஸ் க்ளோஸ்ட்னு பதில் வருது.
அப்டீன்னா என்னங்கய்யான்னு நான் யாருட்ட கேக்குறது? அப்புறம் ட்ராவல்ஸ் வெச்சிருக்கற நண்பர் ஒருத்தர் கிட்ட உதவி கேட்டேன்.
AVA ஒண்ணு வெச்சிருக்கானுங்க. இதுக்கு ஐந்தை அழுத்து இந்த பிரச்னைக்கு எண் எட்டை புளுத்துன்ற அதே ஸ்டைல்.மூணு நாள் போராடினேன் என்னால முடியல.செம்ம கடுப்பாகி அடியே ரோபோ முண்ட ஒரு மனுஷ ஜென்மத்துக்கிட்ட நான் பேசணும்னு சொன்னதுக்கப்புறம் எனக்கு ஒரு நம்பரை கொடுத்துச்சு.185.
அதாவது ஆன்லைன்ல எனக்கு முன்னால 184 பேர் இதே மாதிரி பிரச்னையோடே இருக்காங்க. சிஸ்டத்துல அந்த டேபை க்ளோஸ் செய்யாமல் காத்திருந்த பிறகு ஒரு மூதேவி என்னோடு சாட் செய்தது.
எல்லாவற்றையும் கேட்ட பிறகு அது சொன்னதுதான் ஹைலைட்.ஓகே சார் உங்களோட எக்ஸஸ் பேமெண்ட் ஒரு வாரத்தில் உங்கள் AIR ASIA அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும்.கவனியுங்கள் என்னுடைய வங்கி எண்ணுக்கல்ல.அதைக்கொண்டு வரும் நாட்களை எங்கள் விமானத்தில் நீங்கள் டிக்கெட்டை புக் செய்து தொகையை கழித்து கொள்ளலாம்.
இனி வாழ்க்கையில ஏறவே கூடாதுன்னு நினைச்ச ஒரு பிளைட்டுல பார்த்திபன் வடிவேலுவை வலுக்கட்டாயமா ஏத்தி விட்றா மாதிரி இந்த அழிச்சாட்டியம் பன்றானுங்களே இவனுங்க நல்லாருப்பானுங்களா?
எனக்கு என்னமோ இவனுங்க வேணுமின்னே வெப்சைட்டை இப்படி டிசைன் பண்ணி
வாடிக்கையாளர்களை வம்படியா இழுத்து வெச்சிக்கிற மாதிரி தோணுது.
இளமைக்காலங்கள் படத்துல ஜனகராஜ் ஊட்டிக்கு போகாதீங்கன்னு கதறுவது போல் எனக்கும் AIR ASIA வில் டிராவல் பண்ணாதீங்கன்னு வாய் விட்டு கதறணும் போல இருக்கு

2 கருத்துகள்:

agni சொன்னது…

ஏர் ஆசியாவின் உரிமையாளர் ஒருவேளை திருட்டு கட்டுமரத்தின் புதல்வர் போல இருக்கே

பெயரில்லா சொன்னது…

Illa Agni Mundam it may be owned by accused a1 Anaya puratch thalaivi