சனி, 9 ஜூலை, 2022

சமஸ்கிருதத்தில் செந்தமிழின் தாக்கம்

 Ilangovan Chandran : *சமஸ்கிருதத்தில் செந்தமிழின் தாக்கம்_௯௫(95)...*
உலகில் மனித இனம் தோன்றியபோது,உறவுமுறைகள் ஏற்பட்டிருக்கவில்லை.
நாகரிகமடைந்ததும் உறவுமுறைகள் தோன்றின.
அதில் முதன்மையானது *தந்தை* உறவாகும்.
மூத்தமொழியான தமிழிலிருந்து இச்சொல் எவ்வாறு சமஸ்கிருதம் பெற்றதென்பதை பார்ப்போம்.
தமிழில் *தந்தை* *அப்பா* *அச்சன்* *அத்தன்*(தமிழ் முஸ்லிம்கள் அப்பாவை *அத்தா* எனவே அழைக்கிறார்கள்) *அண்ணல்* *பெற்றவன்* *தாதிரு* *ஈன்றவன்* *முதல்வன்*_இன்னும் பல சொற்கள் அப்பாவைக்குறிக்கும் சொற்களாகும்.
இனி சமஸ்கிருதத்தில் தந்தையைக்குறிக்கும் சொற்களையும்,அது எவ்வாறு தமிழிலிருந்து சென்றதென்பதையும் ஆராயலாம்.
*जनक*(janaka)_ஈன்றவன் என்பதே!
*पिता*(pithaa)_பெற்றவன் என்பதே!
*तात*(thaatha)_தாதிரு(திரு என்றால் செல்வம்.செல்வத்தை நமக்கு அளிப்பதால் தாதிரு)என்பதே!
*वप्र,वाप्य*(vapra,vaapya)_அப்பா என்பதே!
*मैलाः*(moulaah)_முதல்வன்(ஒவ்வொருவருக்கும் முதல்வன் அவரவர் தந்தையே)என்பதே!
*आन्नु*(aannu)_அண்ணல் என்பதே!


இவ்வாறு சமஸ்கிருதம் தமிழிலிருந்து உள்வாங்கிய சொற்களே ஏனைய *ஆரிய மொழிகளிலும்* வழங்கப்படுவதை கீழே காணலாம்!
*கொங்கணி*_Baappa(बाप्पा),Aannu(आन्नु),Baappyui(बाप्पूय),Pithaa(पिता),Baappus(बाप्पुस)
*மராத்தி*_Baabaa(बाबा),Vaadeel(वाडील),Baap(बाप)
*ஹிந்தி*_Pithasri(पिताश्री),Paapaa(पापा),Janak(जनक),Baap(बाप),Pithaaji(पिताजी)
*வங்காளி*_Baabaa(বাবা), Pithaa(পিতা),Jonok(জনক),Baap(বাপ),Aabbaa(আব্বা)
*குஜராத்தி*_Baap(બાપ),Vadavo(વડવો),Baavo(બાવો),Baappaa(બાપ્પા),Bapaliyo(બપલ્યો)
*சிங்களம்*_Piya(පියා)
*காஷ்மீரி*_mol(मॊल)(مول),Abbaa(अब्बा)اببآ))
*உருது*_Abbu(ابو)
*திராவிடமொழிகளில்:*
*கன்னடம்*_Thande(ತಂದೆ),Appa(ಅಪ್ಪ)
*மலையாளம்*_Acchan(അച്ഛൻ),Tanta(തന്ത),Baappa(ബാപ്പ)
*தெலுங்கு*-Naanna(నాన్న),Tandri(తండ్రి)
*துளு*_Amme(ಅಮ್ಮೇ),Poppa(ಪೋಪ್ಪಾ)
*கொடவா*_Aappo(ಆಪ್ಪೊ)
*கோண்டி*_Aatt(ఆట్ట్)
Aatee(ఆటీ)_அத்தன் என்பதன் திரிபு.
*குயீ*(வட இந்தியாவில் பேசப்படும் திராவிடமொழி.தேவநாகரியிலேயே எழுதப்படுகிறது)_Aattu(आट्टु)
*பிராஹுயி*(பாகிஸ்தானில் பேசப்படும் திராவிடமொழி.அரபி எழுத்துக்களிலேயே எழுதப்படுகிறது)Abban(آبَّنْ),Apah(آپَہَ)
இளங்கோவன் சந்திரன்,BE,MBA, Energy Auditor,
०௯.०௭.௨௨(09.07.22)

*சமசுகிருதத்தில் செந்தமிழின் தாக்கம்_௯௪(94)...*
சமசுகிருதத்தில் *ग्रहम्(க்ரஹம்-Graham)* என்ற சொல் தமிழில் கிரகம் என வழக்கத்திலுள்ளது.இதை நாம் கோள் என அழகுத்தமிழில் அழைக்கிறோம்.
ஆனால்,க்ரஹம் என்ற சமசுகிருதச்சொல்லின் வேரே தமிழ்ச்சொல்லான *கரவம்* ஆக இருக்கலாம்.
*கரவு* என்ற தமிழ்ச்சொல்லுக்கு மறைவு என்ற பொருள்.இவ்வினைச்சொல்லின் பெயர்ச்சொல்லே *கரவம்*.
மறைபொருளான கோள்களை இச்சொல்லையே திரித்து சமசுகிருதம் வழங்குகிறதோ!
*ग्रहणम्(க்ரஹணம்-Grahanam)* என்ற சமசுகிருதச்சொல் *கரவணம்(மறைதல்)* என்ற தமிழ்ச்சொல்லின் திரிபாயிருக்கும்.
*गृह प्रवेशम्(க்ருஹப்ரவேசம்-Gruhapravesam)* எனவே புதுமனைபுகுவிழாவை சமசுகிருதமாக்கி நம் மீது திணித்திருந்தனர்.ஏற்பட்ட தமிழ் எழுச்சியே *புதுமனை புகுவிழா* என தமிழை மீட்டது. பேச்சுவழக்கில் கிரகபிரவேசம் என இன்றும் வழக்கிலுள்ளதை அறியலாம்.
இந்த க்ருஹம் என்பதும் கரவம் என்ற தமிழ் வேர்ச்சொல்லிலிருந்தே பிறந்திருக்கவேண்டும்.
மாந்தர்கள் ஓரிடத்தில் தங்கியபோது,இயற்கையிடமிருந்தும் விலங்கினங்களிடமிருந்தும் தன்னையும்,தன் குடும்பத்தையும் காக்க *மறைவாக* வீட்டை அமைத்தான்.
கரவு(மறைவு) என்ற தமிழ்ச்சொல்லே க்ருஹம் ஆகியிருக்கலாம்.
இளங்கோவன் சந்திரன்,BE,MBA,Energy Auditor,
०௮.०௭.௨௨(08.07.22)

கருத்துகள் இல்லை: