சனி, 9 ஜூலை, 2022

இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...

zeenews.india.com/tamil  0  Vidya Gopalakrishnan :       கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம், அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடி விட்டார்.
    புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.
    இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி
இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...
இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர்.
நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்த மக்கள்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயிம்ன் இல்லத்தை  தீகிரையாக்கினர்.வேறு வழியின்றி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பின்னர் புதிய பிரதமராக  ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று, இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டதோடு, மாளிகைக்குள்ளும் நுழைந்தனர். எனவே, தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆம்புலன்ஸ் மூலம், அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடி விட்டார்.

இந்நிலையில் இலங்கையில், அதிபர் மாளிகையை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலரி மாளிகைக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  பொதுமக்கள் குவிந்து வருவதால் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. அங்கே போலீஸார் குவிக்கப்பட்டு வருகிறது. எனினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர்.

இதற்கிடையில், அதிபர் பதவியை இராஜினாமா செய்ய  கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கான திட்டத்தை நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் அறிவித்துள்ளார் என்றும், அதுமட்டுமின்றி, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்குகுழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று துபாய் செல்லவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. துபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் தேதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.

கருத்துகள் இல்லை: