திங்கள், 4 ஜூலை, 2022

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் பைக் விபத்தில் மரணம்.. கொலை?

One more death in Kodanad heist and murder case

Kathiravan  -  .toptamilnews.com  : கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து சப்-இன்ஸ்பெக்டர்  முஹம்மது ரபிக் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.  கொடநாடு வழக்கில் பலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது . இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய  ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார் .  அடுத்தடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பலர் மர்மமாக உயிரிழந்தனர்.   இதனால் கொடநாடு வழக்கில்  பரபரப்பு ஏற்பட்டது.


 இந்த வழக்கில் தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.   இந்த வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறு kk

விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.   கார் விபத்தில் உயிரிழந்த கனகராஜன் சகோதரர் பழனிவேல் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கை விசாரித்து வந்த  போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாலையில் பைக் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

 நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அடுத்த சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முகமது ரபீக்.   இவர் நேற்று காலையில் வழக்கு தொடர்பாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரிடம் விசாரித்துள்ளார்.  பின்னர் போலீஸ்காரர் அபுதாஹீர் உடன் பைக்கில் புறப்பட்டுச் சென்று இருக்கிறார்.

 பைக்கை முகமது ரபித்தான் ஓட்டிச் சென்று இருக்கிறார்.   கொடநாடு செல்லும் வழியில் பைக் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது.   அங்கு கொட்டப்பட்டிருந்த ஜல்லிகள் மீது இருசக்கர வாகனம் ஏறி இருக்கிறது.   இதில் பைக் தூக்கி அடித்திருக்கிறது.  இருவரும் சாலையில் விழுந்து இருக்கிறார்கள்.  அப்போது வேகமாக வந்த லாரி முகமது ரபிக் மீது ஏறி இருக்கிறது.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

 கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிறப்பு டீம் போலீசார் விசாரிப்பதற்கு முன்பாகவே விசாரித்து வந்தவர் முகமது ரபிக்.  அவரின் மரணம் அதிமுகவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: