ஞாயிறு, 3 ஜூலை, 2022

மணிப்பூர் நிலச்சரிவு உயிரிழப்பு எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு; மீட்பு பணி நீடிப்பு

 தினத்தந்தி : இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்துவருகிறது. கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.
ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.


இதுவரை 37- பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். மேலும் மாயமான 25 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
எனினும், அப்பகுதியில் மீண்டும் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 13 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 5 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: