வியாழன், 7 ஜூலை, 2022

பாஜகவின் 4 நியமன எம்பிக்களுக்கும் உள்ள “ஒற்றுமை” -இதான் பாஜகவின் ”ஆபரேசன் சவுத் இந்தியாவா?” By

தமிழ்நாடு - இளையராஜா

Noorul Ahamed Jahaber Ali  -   oneindia Tamil News  : டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த நிலையில் தென்னிந்தியாவை சேர்ந்த 4 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.


“தலித்”ஆக பிறந்தவர்.. “சாதி” ஒடுக்குமுறைகளை சந்தித்தவர்- இளையராஜாவை வாழ்த்தி பாஜக கொடுத்த அறிமுகம் “தலித்”ஆக பிறந்தவர்.. “சாதி” ஒடுக்குமுறைகளை சந்தித்தவர்- இளையராஜாவை வாழ்த்தி பாஜக கொடுத்த அறிமுகம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மதுரை பன்னைபுரத்தில் பிறந்தவர்.
ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் பணியாற்றி 7000 க்கும் அதிகமான பாடல்களையும், 20000 இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும், பத்ம பூஷன் விருதையும் வென்றார் இளைராஜா. தனது இசைப்பணிக்காக பல்வேறு கவுரவங்களை பெற்றிருக்கிறார் இளையராஜா. 5 முறை தேசிய விருதையும், சங்கீத நாடக அகாடமி விருதையும் இளையராஜா வென்றிருக்கிறார்.
கேரளா - பி.டி. உஷா
கேரளா - பி.டி. உஷா
கோழிக்கோட்டை சேர்ந்த பி.டி.உஷா 13 வயதிலேயே தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டத்தில் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார். ஆசியப்போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி.டி.உஷா, மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருதையும், பத்மஸ்ரீ விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான விருதையும், சிறந்த பெண் தடகள வீராங்கனைக்கான ஆசிய விருது, சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை, சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் பி.டி. உஷா.
ஆந்திரா - விஜயேந்திர பிரசாத்
ஆந்திரா - விஜயேந்திர பிரசாத்
80 வயதாகும் விஜயயேந்திர பிரசாத் ஆந்திராவில் உள்ள கொவ்வூரில் பிறந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி திரையுலகில் பணியாற்றிய இவர், இந்தியாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியராக திகழ்ந்து வருகிறார். அவரது மகன் மகன் ராஜமவுலி இயக்கிய மாவீரன், நான் ஈ, பாகுபலி முதல் பாகம், பாகுபலி 2 ஆம் பாகம், RRR என ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த அனைத்து திரைப்படங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத் தான். நந்தி விருது, பிலிம்பேர் விருது, சோனி கில்டு விருதையும் இவர் வென்றுள்ளார்.
கர்நாடகா - வீரேந்திர ஹெக்டே
கர்நாடகா - வீரேந்திர ஹெக்டே
கர்நாடக தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியாக கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறுப்பு வகித்து வருகிறார். கலை மற்றும் இலக்கிய புரவலரான இவர், மஞ்சுவனி என்ற மாத இழலையும் வெளியிட்டு வருகிறார். இயற்கை மருத்துவம், யோகா, அறநெறிக் கல்வியை பரப்பும் வகையில் 400 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், 30 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பயிற்சியளித்து வருகிறார். 10000 க்கும் அதிகமான இலவச திருமனங்களை நடத்தி வரும் இவர், கிராம வளர்ச்சி, ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக உதவி வருகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷன், இராஜரிசி, கர்நாடக ரத்னா, இந்திய வர்த்தக சம்மேளன விருது போன்றவற்றை இவர் பெற்றுள்ளார்.

4 பேரும் தென்னிந்தியர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறினார். இதற்கிடையே 4 நியமன மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புகளையும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிரபலமாக திகழும் நபர்களுக்கு வழங்கி இருப்பது ஆபரேசன் சவுத் இந்தியாவுக்கான தொடக்கமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: