திங்கள், 27 ஜூன், 2022

தமிழர்களின் கிரானைட் தொழிலை பறித்து மார்வாடிகளிடம் கொடுத்த சகாயம் ஐ ஏ எஸ்! ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றினார்!

ராதா மனோகர்
: திரு சகாயம் அவர்களின் கட்சி தொடங்கும் விழா காணொளியை கண்டேன் . மிகவும் பொறுமையாக முழுவதும் பார்த்தேன்   மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே  அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார போர் நடக்கிறதே அதைப்பற்றி ..ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிக்கிறார்களே  .. அதைப்பற்றி ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனீயம் சமஸ்கிருதம் எல்லாம் நுழைகிறதே? அதை பற்றி ம்ம்ம்ம்ம்
பணமதிப்பு இழப்பு பற்றி ம்ம்ம்ம்ம்   
ஜி எஸ் டி வரி பற்றி ம்ம்ம்ம்ம்
இவை எல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான்  இன்னும் என்னன்னவோ கேள்விகள் இருக்கின்றன .
சகாயம் குழுவிடம் நல்ல நோக்கமும் கிடையவே கிடையாது.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அன்னா ஹாசாரே போன்றோர் எடுத்த காவடியை தமிழ்நாட்டில் திரு சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக முன்னெடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
முடிவாகவே தெரிகிறது  சகாயம் இன்னொரு ஆர் எஸ் எஸ் அடியாள்தான்.
ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே உள்ளது .
ஒருவேளை இந்த அடியாள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத ...
இன்னொரு ஆட்டுக்கார அண்ணாமலை ரேஞ்சாக இருக்கலாமோ?

   Seetha Ravi Suresh :  ஒரேகல்லில் இரண்டுமாங்காய். 750 கிமீ மேற்கு தொடர்ச்சிமலையை உள்ளடக்கிய தமிழகத்திற்கு, குஜராத்தும், ராஜஸ்தானும் கிரானைட் சப்ளை செய்கின்றன!!!
குஜராத்,ராஜஸ்தான் கிரானைட் வியாபாரிகளுக்கு ஈடுகொடுத்துவந்த தமிழக கிரானைட் வியாபாரம் படுத்து செத்தேபோய்விட்டது.
கலைஞரின் மகன் அழகிரியும், பேரனும்தான் கிரானைட் பிஸ்னஸை, மதுரைல புடிச்சி ஆட்டுறதாக பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
அப்புறம், அழகர் கோயிலே காணாமல் போய்விட்டதுன்னு பிரச்சாரம் செய்யப்பட்டது.
நான்குவருடம் நன்றாக பிரச்சாரம் செய்தபிறகு, ஒருநாள் கொம்பை பிடித்துவிட்டார்கள்.
அதிமுகவின் பைனான்சியர்தான் குற்றவாளி என்றதும்!  அழகிரியை சம்பந்தப்படுத்த, அசுரமுயற்சியே நடந்தது.
குவாரிகளில் ரெய்டு நடத்திய சகாயம், சுடுகாட்ல படுத்து திமுகவை குற்றஞ்சுமத்தினார்.
திமுகவை களங்கப்படுத்தினமாதிரியும் ஆச்சு! கிரானைட் பிஸ்னஸை தமிழர்களிடமிருந்து பிடுங்கி, சேட்டுங்க கைல ஒப்படைச்சமாதிரியும் ஆச்சு!
ஆகமொத்தம், தமிழகத்தின் அன்னாஹசாரே செய்ததெல்லாம், மஹேஸ்வரிகளுக்கும், மக்ரானா உருதுபாய்களுக்குமான பிஸ்னஸ் டெவலப்மென்ட்தான்.
நடிகர் ராஜா தவிர்த்த, தமிழக கிரானைட் பிஸ்னஸ்மேன்கள் எல்லோரும், இன்று மல்ட்டிப்பிள் கட்டரை, 99% குறைந்த விலையில் கயலான்கடைக்கு விற்கும்நிலையில் உள்ளனர்.
நம்ப கம்பெனிக்கு ஸ்டோர் கீப்பர் வேலைக்கு, 8000 ரூபாய் சம்பளத்திற்கு புதுசா வேலைக்குசேர்ந்த 50 வயதான ஒருத்தர், தன்னோட கதையை சொன்னபோது, 2011 வரையில் வருடத்திற்கு 20 கோடி கிரானைட் பிஸ்னஸ் செய்திட்டிருந்தாராம்.
வேலூரில் இன்னமும் கோடவுனும், அலுவலகமும் செச்யூரிட்டிகூட இல்லாமல் வீணே கிடக்கிறதாம். மகளுக்கு கல்யாணம் பண்ணின கடன்தீர்க்க, வேறவழியில்லாம வேலைக்கு வந்திருக்கார்.
சகாயம் தனது எஜமானி ஜெயலலிதாவின் அத்தனை உத்தரவுகளையும், அச்சுபிசகாமல் செய்துமுடித்திருக்கிறார்,  தனது பணிக்காலத்தில்.
மலைகளை சுரண்டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாதுதான்! ஆனால், அதானிகளை நீங்கள் தடுத்துவிட முடியாது, தமிழக இயற்கை ஆர்வலர்களேய்ங்!!!
ஒரேகல்! ஒருகொத்து மாம்பழங்கள் கிடைத்தது வடநாட்டான்களுக்கு! எறிந்தது ஜெயலலிதா! அந்த கல்லுதான் சகாயம் என்கிற சுடுகாட்டுறங்கி!!!

 

 ராதா மனோகர் :  அப்துல் கலாம் சகாயம் அன்னா ஹாசாரே இன்னும் பல சங்கி முகமூடிகள் காலத்திற்கு காலம் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்
இவர்கள் எல்லோரும் பார்ப்பன பனியா கும்பல்கள் மீது எந்த தூசியும் படிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இருப்பார்கள்
உத்தர பிரதேச யோகி ஆதித்தனார் போன்ற கொடூர சங்கிகளை நம்மால் அடையாளம் கண்டுவிட முடியும்
.ஆனால் அந்த கொடூர சங்கிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வெறுமனே ஊழல் நேர்மை போன்ற ஊதுபத்திகளை மட்டும் வைத்தே மக்களை கொண்டுபோய் சங்கிகளின் லாயத்தில் அடிமாடுகளாக கட்டிவிடுவார்கள்
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை சகாயம் சகாயம் என்றொரு உத்தமன் இருந்தார் . தமிழர்களின் கையிலிருந்த கிரானைட் தொழிலை அப்படியே மார்வாடிகளின் கைகைளில் கொண்டு போய் தாரைவார்க்கும் வரைக்கும் அவருக்கு விளம்பர வெளிச்சம் அளவு கணக்கில்லாமல் கிடைத்தது  வெளிநாடுகளில் இருக்கும் சாங்கி ரசிகர்களையும் பறந்து பறந்து போய் ஊழல் ஊதி பத்தியை கொழுத்தி போட்டு உற்சாகம் ஊட்டினார்
சகாயம் விளம்பர பீல்டில ஆக்டிவாக இருந்த காலத்தில சீமான்கூட கொஞ்சம் மங்கி போயிருந்தார் . அந்த அளவுகு சகாயம் காமராஜர் கக்கன் கலாம் என்ற மாயமான்கள் வரிசையில் வலம் வந்தார்.
சகாயம் பற்றி 22 பெப்ரவரி 2021 இல் இட்ட பதிவை பாருங்கள்
 

கருத்துகள் இல்லை: