ஞாயிறு, 26 ஜூன், 2022

முகக்கவசம் கட்டாயம் - மீறினால் அபராதம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 மாலைமலர் : தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: