ஞாயிறு, 26 ஜூன், 2022

சரோஜாதேவியின் நடையழகும் சுசீலாவின் குரலழகும் .. வள்ளியம்மை

 வள்ளியம்மை  ·:  1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோஜாதேவி 2022 ஜனவரி ஆறாம் தேதியுடன் 84ஆண்டுகள் ஆகிறது
தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், சரோஜாதேவி அவரது தனித்துவத்தையோ, நன்மதிப்பையோ,  இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம்!
அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்பு தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-
1.விஜயகுமாரி (கல்யாணப்பரிசு, பெண் என்றால் பெண்) 2. சவுகார் ஜானகி (பாலும் பழமும், புதிய பறவை, கண் மலர்) 3.வைஜெயந்திமாலா (இரும்புத்திரை, பைகாம் இந்தி)
4.சாவித்ரி (பார்த்தால் பசி தீரும்) 5. தேவிகா (ஆடிப்பெருக்கு, குலமகள் ராதை) 6. ஷீலா - அறிமுகம் (பாசம்)
7. ஜோதிலட்சுமி, 8.மணிமாலா - அறிமுகம் (பெரிய இடத்துப்பெண்) 9. சாரதா - அறிமுகம் (வாழ்க்கை வாழ்வதற்கே)
10. ரத்னா (எங்க வீட்டுப் பிள்ளை) 11. கே. ஆர். விஜயா (நான் ஆணையிட்டால்) 12. பாரதி - அறிமுகம் (நாடோடி)
13.காஞ்சனா (பறக்கும் பாவை) 14. ஜெயலலிதா (அரச கட்டளை) 15. விஜய நிர்மலா (பணமா பாசமா, அன்பளிப்பு) 16. வாணிஸ்ரீ (தாமரை நெஞ்சம்)
17.லட்சுமி (அருணோதயம், உயிர்) 18. பத்மினி (தேனும் பாலும்) 19. பானுமதி-20.ராஜஸ்ரீ (பத்து மாத பந்தம்) 21. ஷோபனா (பொன் மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம்) 22. சிம்ரன் (ஒன்ஸ்மோர்) 23. நயன் தாரா (ஆதவன்)
தன்னுடைய திரையுலகத் தோழிகள் பற்றி சரோஜாதேவி..
சவுகார் ஜானகியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நிறையவே நடித்திருக்கிறேன்.
‘சரோஜாவையும், சவுகாரையும் ஜோடியாக சேர்த்துக் கொண்டால் அந்தப்படம் நிச்சயமாக வெற்றி அடையும்’ என்பார் சிவாஜி.
ஆலயமணி படத்தில் நானும் விஜயகுமாரியும் போட்டி போட்டு நடிப்போம். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு எப்போதும் உண்டு. நாங்கள் ஒரு குடும்பம் போல் அன்பு காட்டி, அதையே திரும்பப் பெறுகிறோம். ’ -சரோஜாதேவி.
சரோவின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின.
1.ஆஹா மெல்ல நட- புதிய பறவை 2. இந்த பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும் - எங்க வீட்டுப் பிள்ளை 3. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.
சரோவுடன் ஜோடி சேராத ஒரே ஹீரோ ஜெய்சங்கர்!
நடிகர் திலகத்தின் நாயகிகளில் அநேகம் பேர் அவருக்கு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக, மருமகளாக, மாமியாராகக் கூட நடித்திருப்பார்கள்.
‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே! அது ஓர் இனிய அதிசயம்! ’
கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.
தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது.
இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது... புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’
விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...!
தேவர் படங்கள் ஒன்று தவறாமல்
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை, காட்டுக்குள்ளே திருவிழா, காடு வெளைஞ்ச நெல்லிருக்கு என்று தொடங்கி, மூலிகையின் பெருமை பேசும் நீண்ட பயனுள்ள பட்டியல்...
‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும்.
பணத்தோட்டம் படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும்!
‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை’
அதில் மேற்கண்ட வரி வைரமுத்துவால் முரளி நடித்த ‘ஊட்டி’ சினிமாவில் மீண்டும் கையாளப் பட்டது.
‘தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும்
 ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’ வைரமுத்துவை உலுக்கிய பாடல்.
டி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.
1. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு ‘அன்று வந்ததும் அதே நிலா’
2. பணக்கார குடும்பம் - டென்னிஸ் மட்டையோடு ‘பறக்கும் பந்து பறக்கும்’
3. அதிலேயே இன்னொரு இனிய கீதம் - ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.
4. பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் - ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’
5. மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே, ‘உன்னைத் தானே ஏய்
சரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது.
உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவது
நாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட்.
அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன.
பாகப்பிரிவினையின் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ ஒலித்த பிறகே கண்ணதாசன் வீட்டில் பண மழை பெய்யத் தொடங்கியது.
கே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார். ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம்.
அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்
1.தனிமையிலே இனிமை காண முடியுமா 2. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது.
தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால்
வாலியின் வசந்தம் நிரந்தரமானது
.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.
‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த
1.என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும்
2. சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த ‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.
தாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின்
பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீ நிவாஸ்....

கருத்துகள் இல்லை: