திங்கள், 27 ஜூன், 2022

சீமான் தடுமாற்றம் ! இ பி எஸ் அல்லது ஓ பி எஸ் .. சமூகவலையில் துவம்சம்

சீமான் சிந்தனை

 Kumarandas Kumarandas  :  என்ன சீமான் உங்க அரசியல் இவ்வளவு கேவலமாக இருக்கு?
நாங்கள் பழைய கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்தவர்கள் இல்லை! அதை  இடிச்சுப்புட்டு புதுசா கட்ட வந்த புரட்சிக்காரர்கள் என்று சொன்ன சீமான் இப்ப ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் எங்க ஆளுக! அதாவது எங்க இனத்தானுக!
அவர்கள் தங்களுக்குள் பேசி பிரச்சினை யை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருக்கனும்! என்று பேட்டி கொடுக்கிறார்.
அதிமுக நல்லா பலமா இருக்கனும் என்று சொல்வதில் என்னடா புரட்சிப் புடலங்காய் இருக்கு?
இதை  தேர்தலில் போட்டியிடாத மணியரசன் மாதிரியான இனவெறியர் சொன்னால் கூட ஒரு லாஜிக் இருக்கும்! 

ஆமாம் தேர்தல் அரசியலில் பங்கேற்காத  இனத்தூய்மைவாதப் பார்வை அப்படித்தான் இருக்க முடியும். வெளியே திமுக வை நாங்கள் எதிர்க்கிறோம். உள்ளே நீங்கள் எதிர்த்துப் பேசுங்கள் என்று அதிமுக வுக்கு சொம்படிக்கலாம். 

ஆனால் தேர்தல் அரசியலுக்குள்ளே  பங்கெடுக்கும் , தான் வளர்ந்து  ஆட்சியினைப் பிடிக்க விரும்பும்  நாம் தமிழர் கட்சி எவ்வாறு அதிமுக ஒற்றுமையாக இருக்கனும்,  பலமா இருக்கனும் என்று சொல்ல முடியும்?
அல்லது அதிமுகவே தூய தமிழர் கட்சி (கவுண்டர், முக்குலத்தோர் போன்ற தமிழ் ஜாதிகளின் கட்சி) அதுவே போதும் என்று நினைத்தால் அப்புறம் நாம் தமிழர் கட்சி எதற்கு? இது நாள் வரை பழைய கட்டிடத்திற்கு பெயிண்டு அடித்துக் கொண்டுவரும் அதிமுக அழிந்தால் (தானே ) அந்த எதிர்க்கட்சி இடத்திற்கு புரட்சிகரமான!?  நாம்தமிழர் கட்சி வரமுடியும்?
சீமானோட பேச்சு ஒரே குழப்பமாக எவ்வித லாஜிக்கும் இல்லாமல் இருக்கே! என்று தோன்றுகிறதா? ஆம் இன வெறி அரசியல் இப்படித்தான் இருக்கும். லாஜிக், நேர்மை என்பதற்கெல்லாம் அதில் துளியளவுக்கு கூட இடமில்லை என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால் ஜெர்மானிய நாஜிசத்தில் கூட இந்த அளவு குழப்பத்தை, முரண்களை நாம் பார்க்க இயலாது. சீமான் கொண்டாடும் ஹிட்லர் இவரைப்போல் மாற்றி மாற்றி பேசியவரில்லை. ஏனென்றால் சீமானின் இனவெறி உண்மையில் இனவாதப் பார்வையில் இருந்து எழவில்லை. மாறாக ஜாதிய வாதத்தை அடிப்படையாக கொண்டு   எழுகிறது.
ஆம் அவர் இன்று அதிமுகவை தலைமை தாங்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் ஜாதிகளை குறிப்பிட்டே  " எங்காளுக" என்று கூறுகிறார். அதிமுக வை ஆதரிக்கவம்  செய்கிறார். அதாவது ஒரு கட்சியை அதன் கொள்கையை வைத்து மதிப்பிட வில்லை. மாறாக தலைவர்களின் ஜாதிகளை வைத்து இப்போது மதிப்பிடுகிறார்.
ஆனால் இதுவும் கூட பொய்தான். முன்பு தமிழரல்லாத எம்ஜிஆரையும் ஜெயலலிதா வையும் கூட ஆதரித்துப் பேசியுள்ளார் .(இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னார். ) அதற்கு ஈழத்தை காரணமாக்கினார். இந்த இடத்தில்  ஈழ விடுதலை எனும்  கொள்கையை அடிப்படை அளவுகோளாக வைத்துள்ளதை நாம் பார்க்கிறோம்.
ஆக சீமான் பேச்சு நிலையற்றதாக, சந்தர்ப்ப வாதமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் திமுக எதிர்ப்பு என்ற ஒரு விசயத்தில் மட்டும் உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் அவர் இருந்து வருவதை காண முடிகிறது.
திராவிடத்தை எதிர்ப்பது என்று முடிவெடுத்தால் அதிமுக வையும், மதிமுக, தேமுதிக வையும்  எதிர்க்க வேண்டும். அதே போல தமிழ் ஜாதியல்லாத பிற,  மொழிச் சிறுபான்மை ஜாதிகளை சேர்த்துக் கொண்ட கட்சிகளை , எதிர்ப்பது என்றால்  இங்குள்ள அனைத்துக் கட்சிகளையும் எதிர்க்க வேண்டும்.
மாறாக திமுக வை மட்டும் தீவிரமாகவும் தொடர்ந்தும் சீமான் எதிர்த்து வருவதன் காரணம் நிச்சயம் கொள்கை சார்ந்த ஒன்றாக இருக்க முடியாது.
அதற்கு அவரது ஜாதி,மத பிற்போக்கு பார்ப்பனியக் கண்ணோட்டம் ஒரு காரணம் என்றால் இன்னொன்று அவரது  பணத்தாசையும் திமுக வின் பரம்பரை எதிரிகளிடம் அவர் வாங்கும் பொட்டிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் பார்க்கும் போது ஹிட்லர் முசோலினி  போன்ற , நாம் எதிரியாக மதிக்கத் தகுந்த ஓர் பாசிசத் தலைவர் கூட இல்லை சீமான் கூலிக்கு வேலை செய்யும் பார்ப்பனிய அடியாள் தான் சீமான்!

கருத்துகள் இல்லை: