வியாழன், 16 செப்டம்பர், 2021

பாண்டி பஜார்! சுயமரியாதை சுடர் பட்டிவீரன்பட்டி W. P. A சௌந்தரபாண்டியன் நாடார் ... (W. P. A. Soundarapandian)

May be an image of outdoors and monument

Sundar P  : பட்டிவீரன்பட்டி ஊ.ப.அ. சௌந்தரபாண்டியன் நாடா...
(W. P. A. Soundarapandian)
நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்த சௌந்தரபாண்டியன் 15 செப்டம்பர், 1893 இல் பட்டிவீரன்பட்டியில் ஒரு பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார்.
நாடார் மகாஜன சபையின் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார்...
பெரியார் ஈ.வெ.ராவின் சுயமரியாதை இயக்கத்தோடு, தன்னை   
இணைத்துக் கொண்ட சௌந்தரபாண்டியன் சிறு வயதிலிருந்தே  பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.
நாடார் மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உறுதியாக செயல்பட்ட அவர், நாடார் மகாஜன சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பதவியில் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை செம்மையாக செயல்பட்டார்..,

சென்னை மாகாணத்தின் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான பி. டி. ராஜன், சௌந்தரபாண்டியன்  சட்டப் பேரவைக்குப் பரிந்துரைத்ததால், 1920 ஆம் ஆண்டு சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றினார்,
அவர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராக 1928 முதல் 1930 வரையும், மதுரை மாவட்டசபைத் தலைவராக 1943 முதல் 1947 ஆம் ஆண்டு வரையும்  பணியாற்றினார்.
பெரியார் ஈ. வெ. ரா.அவர்களின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை தனது மானசீக குருவாகக் கருதி, அவர் கொள்கை  வழியைப் பின்பற்றினார்.
புனித கயிறு புறக்கணிப்பு மற்றும் பிராமண பூசாரிகள் நிராகரிப்பு போன்ற மாறுதல்களை மக்களிடம் கொண்டுவந்தார். சுய மரியாதை திருமணம் மற்றும் சாதிமத வேறுபாடின்றி உணவருந்தும் பழக்கத்தையும் அவரது சமூக மக்களிடம் வலியுறுத்தினார்.
பெரியார் அவர்கள், 1929ல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக அவரை நியமித்தார்.
நாடார் என்பதால், அவர் நாடார் சாதி  மக்களின் நலனுக்காக மட்டும் பாடுபடவில்லை. அவர், தலித்துக்கள், தியாக்கள் (கேரள தாழ்த்தப்பட்ட மக்கள் ) போன்றோரின் முன்னேற்றத்திற்காகவும், பிற சமூகத்தினரின் மேம்பாட்டிற்காகவும் அயராது பாடுபட்டார்.
கமுதி தண்டனை வரியை மிகக் கடுமையாக எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியும் கண்டார்.
சௌந்தரபாண்டியன் அவர்கள், ஆட்சியில் இருந்த போது, பட்டிவீரன்பட்டியில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார். பல கல்வி நிறுவனங்கள் அவரது பெயரில் செயல்பட்டு வருகிறது.
நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னனாக’ இருந்த அவர், பட்டிவீரன்பட்டியில் காஃபி கூட்டுறவு பதப்படுத்தல் தொழிற்சாலை அமையத் தூண்டுகோலாய் இருந்தார்.
உடல் நலம் குன்றியதால், பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.
சென்னையில் உள்ள என்கிற முக்கிய கடைத்தெருவான பாண்டி பஜார் ‘சௌந்தரபாண்டிய  நாடார்’ அவர்களின் நினைவாகத்தான் பெயரிடப்பட்டது என்பது பலரும் அறியாத செய்தி.
அண்மையில், பாண்டி பஜார் நுழைவு வாயிலில், சௌந்தரபாண்டிய  நாடார் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: