திங்கள், 27 ஏப்ரல், 2020

"அரசின் பேரால் அல்லது பதவியின் பேரால் திருட்டு" .

Devi Somasundaram : பி எம் கேர்ஸ் ல வரும்  நிதியை CAG ஆடிட் செய்ய போறதில்லயாம்..  இண்டிபெண்டண்ட்   ஆடிட்டர் ஆடிட் செய்வாராம் . .இந்த CAG ரிப்போர்ட் அடிப்படையா வச்சு தான் மன் மோகன் அரசு மேல அத்தனை குற்றச்சாட்டு சொன்னார்கள் .. அப்ப CAG தன் வேலை தாண்டி ஆடிட் மட்டும் செய்யாம எது இழப்புன்னுலாம் ராமாயண கதை எழுதுச்சு. அப்ப CAG < இவர்களுக்கு சரின்னு தோணுச்சு ..இப்ப இண்டிபெண்டண்ட் ஆடிட் ஏன் ? .
ஏன் என்றால் CAG ஆடிட் ஒரு ரெக்கார்ட் ..அரசோட கோப்பில் இருக்கும் ..பார்லிமெண்ட்ல அது சமர்பிக்கப் படனும் ..அதன் மீது நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வு செய்யும் ..இது வரலாற்ற பதிவு செய்வது போல் ..
இன்னும் ஆயிரம் வருடம் சென்று கேட்டாலும் பதில் சொல்லனும்.. இண்டிபெண்டண்ட் ஆடிட் அறிக்கை அப்படி பதிவாக வாய்ப்பில்லை ..
ஆடிட் ல சமர்பிக்கப் படும் அறிக்கை நேர்மையா இருக்கனும் என்ற அவசியமில்லை . .அப்படி நேர்மையா இல்லாத பட்சத்தில் அது விவாதப் பொருள் ஆக மாறும் வாய்ப்பு இண்டிபெண்டண்ட் ஆடிட்லகிடையாது ..

இப்ப திமுக பத்தி எதும் போலி குற்றச்சாட்டு வச்சா நாம ஆதாரம் கேட்கிறோம்ல ...அவை குறிப்பில் இருக்கும், நீக்கபட்டா நீக்க தந்த ரெக்வெஸ்ட் இருக்கும் அதை குடுன்னு கேட்கிறோம் .
இருந்தா தான தர முடியும்...நடக்காதற்கு ஆதாரம் இருக்காது .உடனே உதயனிதி சொம்பு , 200 உபிஸ்னு கூவிட்டு ஓடிடுவாங்க ..
இப்ப இவர்கள் செய்யும் திருட்டுக்கு அப்டி யாரும் ஆதாரம் குடுன்னு கேட்ற கூடாதுல்ல ..அதனால தான் கேள்வியே வராம தடுக்க இந்த இண்டிபெண்டண்ட் ஆடிட் ..

பார்லிமெண்ட்ல தாக்கலே ஆகாத ஆடிட் அறிக்கை நம்ம மதன் அண்ணன் தந்த ஷா ரிப்போர்ட் மாதிரி தான்..நம்ம இஷ்ட்டத்துக்கு எதை வேணா அடிச்சு விட்டுகலாம்...
நிதி தந்த அதானி பேர அதில சேர்க்காமலே விடலாம்... எந்த சம்பந்தம் இல்லாத ஸ்டாலின் பேர அதுல போட்டு நிதி தந்தார்னு சொல்லலாம்...அதை வச்சுகிட்டு பாஜ கவுக்கு ஸ்டாலின் நிதி தந்தார்ன்னு மதன் டிபேட் நடத்துவார் ,சேப்பு கலர்ல வட்டம் போட்டு இந்தா இருக்குல்ல இருக்குல்லன்னு வேற கேட்ப்பார் ...
இதை இல்லைன்னு டிபண்ட் செய்யலாம் தேவையே இருக்காது ..ஏன்னா அவர்கள் கோர்ட்குலாம் போகவே மாட்டார்கள் ..மதன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் போஸ்ட டெம்ப்ரவரியா பார்ப்பார் ..
இப்படி அவர்களுக்கு எதிரான யாரை வேணா அதில் சேர்க்கலாம்...ஆதரவான யாரையும் தவிர்க்கலாம்...
இது தான் அந்த ஆடிட் நோக்கமா இருக்க முடியும் .
ஆனா ..இப்ப ஏன் பி ஜே பி நிதிகாக மக்கள் கிட்ட கையேந்துது ..மிஷனரி காசு வரதில்லயா ...அல்லது அது பத்தலயா ? .


Nilavinian Manickam அது ஏற்கனவே நாம சொன்னது மாதிரிதான்..தோழர்.. அந்தப் பணத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிசேப்பி குழுக்கள் மூலமா கொடுத்து அவனுக பேர்ல மக்களுக்கு உதவி பண்றது போல பாசாங்கு செய்து...விளம்பரப்படுத்திக்க வழிதான் அது... அதை தமிழ்நாட்ல செயல்படுத்த கண்டுபிடித்ததுதான் "மாநகராட்சி சேவா பாரதியுடன் இணைந்து செய்யும்..எல்லோரும் மாநகராட்சிகிட்ட குடுங்கோ"ன்றது. அதில் சேவா பாரதிக்கு ஒரு சில்ற அமௌண்ட் இந்த "PM CARES" ல இருந்து வரும்...அதைப்புரிந்து கொண்ட தளபதி ஆப்படிச்சு விட்டாரே..இப்பவும் பிசேப்பிக்காரங்க செய்யுற சிறு உதவிகள் இங்கிருந்து வரும் பணத்தில்தான்.. அதிகபட்சமா பணத்தை ஆட்டயப் போட்டுடுவானுக..

கருத்துகள் இல்லை: